விமானி டு யூடியூபர்: உலகில் அதிகம் தேடப்படும் வேலைகள் என்ன? - ஒரு சுவாரஸ்ய அறிக்கை  Twitter
உலகம்

விமானி டு யூடியூபர்: உலகில் அதிகம் தேடப்படும் வேலைகள் என்ன? - ஒரு சுவாரஸ்ய அறிக்கை

பலரும் மனதுக்கு பிடித்தமான வேலையை செய்யாமல் குமைந்துகொண்டு வாழ்க்கையை ஓட்டும் இந்த காலத்தில் உண்மையில் மனிதர்களுக்கு என்ன தொழில் தான் பிடிக்கும்? உலக அளவில் மக்கள் அதிகமாக விரும்பும் தொழில்கள் என்ன? என்பதை கண்டறிந்துள்ளது ஒரு நிறுவனம்

Antony Ajay R

நாம் குழந்தையாக இருந்த போது டீச்சராவதோ அல்லது காவல்துறையில் இணைவதோ தான் நமது நோக்கமாக இருந்திருக்கும்.

காலப்போக்கில் நமது விருப்பங்கள் மாறி வேறு ஏதோ ஒரு தொழிலில் ஆர்வம் வந்து அதில் ஈடுபடுவோம்.

சிலர் பணத்தை பிரதானமாக வைத்து, எங்கு தங்களால் அதிக பணம் செய்ய முடியுமோ அங்கு வேலை செய்வார்கள்.

சிலர் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டு வாழ்க்கையை குறை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

உண்மையில் மனிதர்களுக்கு என்ன தொழில் தான் பிடிக்கும்? உலக அளவில் மக்கள் அதிகமாக விரும்பும் தொழில்கள் என்ன தெரியுமா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

உலகில் மிகவும் விரும்பப்படும் தொழில்களை பட்டியலிட்டுள்ளது ரெமிட்லி என்ற பணப்பரிவர்த்தனை நிறுவனம்.

ஏற்கெனவே உலகில் எந்த நாட்டில் வேலைப் பார்க்க மக்கள் அதிகம் விரும்புகின்றனர், எந்த நாட்டில் படிக்க அதிகம் விரும்புகின்றனர் போன்ற ஆய்வறிக்கைகளை இந்த நிறுவனம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் மக்கள், "போலீஸ் ஆவது எப்படி?" , "தீயணைப்பு வீரராவது எப்படி" எனத் தேடிய தகவல்களை வைத்து தான் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது ரெமிட்லி நிறுவனம்.

விமானி

அதிகமாக தேடப்பட்ட கேள்வி, "விமானி ஆவது எப்படி" என்ற கேள்விதான்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதனை அதிகமாக தேடியுள்ளானர். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10,00,000க்கும் அதிகமான மக்கள் விமானியாவது எப்படி எனத் தேடுகின்றனர்.

எழுத்தாளர்

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அதிகமாக மக்கள் எழுத்தாளராவது எப்படி எனத் தேடியுள்ளனர்.

அந்த நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 8,00,000 மக்கள் எழுத்தாளராக விரும்புகின்றனர்.

எழுதுவது என்பது பழமைவாதமாகிப் போனதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் மொத்தம் 75 நாடுகளைச் சேர்ந்த மக்கள் எழுத்தாளராக நினைக்கின்றனர்.

எழுத்தாளர் என்பது, நாவல்கள் எழுதுவது, பத்திரிகையாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆகிய பணிகளையும் உள்ளடக்கியதே.

வளர்ந்து வரும் வேலைகள்

நவீன யுக வேலைகளையும் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். உதாரணமாக சீனமக்கள் அதிகமாக உணவியல் நிபுணராக விரும்புகின்றனர்.

துருக்மேனிஸ்தானில் மொழிபெயர்ப்பாளராகவும், லெபெனானில் நகைச்சுவையாளராகவும் ஆகவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

ஆசிய மக்களின் ட்ரெண்ட் என்ன?

கவிஞர்கள் ஆவதையும், எழுத்தாளர்களாவதையும், உணவியல் நிபுணர்களாவதையும் மக்கள் விரும்புகின்றனர் என ஆசிய தேடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலை மற்றும் கலாச்சாரம்

விமானி, எழுத்தாளருக்கு பிறகு நடன கலைஞராக பலரும் முயலுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு ஆண்டில் 2,80,000 மக்கள் நடனக் கலைஞர் ஆவது எப்படி எனத் தேடுகின்றனர்.

1,95,000 பேர் யூடியூபர் ஆகவும், 1,76,000 பேர் நடிகராகவும், 1,59,000 பேர் இன்ஃப்ளூயர்சர் ஆவது எப்படி எனவும் தேடுகின்றனர்.

சமூக ஊடக வேலைகள்

விமானி ஆவது எப்படி போன்ற கேள்விகளை நிச்சயமாக ஏதேனும் தொழிலில் இருப்பவர்கள் எழுப்பியிருக்கும் வாய்ப்புகள் குறைவே, எனவே இந்த கேள்விகள் அனைத்தும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து வந்ததாக எடுத்துக்கொள்ளலாம்.

இதே இளசுகள் தான் சமூக ஊடக வேலைகளான, யூடியூபர், இன்ஃப்ளூயன்சர், புரோகிராமர், பிளாகர், வ்லோகர் போன்றவற்றை அதிகமாகத் தேடியுள்ளனர்.

அறிவியல் வேலைகள்

அறிவியலைப் பொருத்தவரையில் இந்த தலைமுறையினர், பேராசிரியர், உளவியலாளர் ( Psychologist ), சிகிச்சையாளர் ( Therapist ), விஞ்ஞானி, வாழ்க்கை பயிற்சியாளர் (Life coach) போன்ற வேலைகளை விரும்புகின்றனர்.

விளையாட்டு தொடர்பான தொழில்கள்

விளையாட்டைப் பொருத்தவரையில், ஃபுட்பால் வீரர், ஃபுட்பால் பயிற்சியாளர், மல்யுத்த வீரர், கூடைப் பந்து வீரர், குத்து சண்டை வீரர் போன்ற தொழில்கள் அதிகம் விரும்பப்படுகின்றது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?