வாழ்க்கையில் சில நேரங்கள் தனிமையை நாம் அனைவருமே உணர்ந்திருப்பேன்.
இந்த பரந்த பெரிய உலகில் கோடிக்கணக்கான உயிர்கள் வாழும் நீண்ட நெடிய நிலப்பரப்பில் நமக்கென, நம்மைப் பற்றி சிந்திக்க, நம் நலனைத் தெரிந்துகொள்ள யாருமே இல்லை என்கிற உணர்வு நம் மனதைச் சிதைத்து விடும்.
52 ஹெர்ட்ஸ் திமிங்கலம் மனிதர்களைப் போல சிந்திக்குமாயின், தினமும் இந்த தனிமையில் தான் நொந்துகொண்டிருக்கும்.
குடும்பம் இல்லாமல், கூட்டம் இல்லாமல், நட்பு, காதல் எதுவுமில்லாமல் அந்த மிகப் பெரிய பாலூட்டியினம் எல்லை இல்லாத தண்ணீரில் துவண்டுகொண்டிருக்கிறது.
52 ஹெர்ட்ஸ் என்பது என்ன? அது ஏன் உலகின் தனிமையான திமிங்கலமாக அறியப்படுகிறது என்பதைக் காணலாம்.
96 படத்தில் வரும் காதலே காதலே பாடலின் தொடக்கத்தில் திமிங்கலத்தின் இசையைக் கேட்க முடியும்.
நீலக்கடலின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டுவரும் அந்த திகிலூட்டும் சத்தத்தின் மூலம் தான் திமிங்கலங்கள் ஒன்றை ஒன்று தொடர்புகொள்ளும்.
ஆன்லைனிலும் திமிங்கல இசையை கேட்டு அனுபவிக்கும் வாய்ப்புகளை தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கிறது.
திமிங்கல சத்தத்தின் அதிர்வெண் பொதுவாக 15 முதல் 25 ஹெர்ட்ஸ்-ல் இருக்கும். ஆனால், இந்த தனிமையான திமிங்கலம் 52 ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் சத்திமிடும்.
இந்த தனித்துவம் தான் அதன் தனிமைக்கு காரணம்.
மற்ற திமிங்கலங்களால் இதன் சத்தத்தைக் கேட்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தனிமையால் தள்ளப்பட்டாலும் ஆராய்ச்சியாளர்கள், கடல் வாழ் உயிரின ஆர்வலர்கள் மற்றும் இதன் கதைகளை கேட்கும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது 52 ஹெர்ட்ஸ்.
பலர் இதன் கதை தங்களுக்கும் பொருந்துவதாக கூறுகின்றனர். நாம் பேசுவதைக் கேட்க ஒருவரின் தேவைதானே இங்கிருக்கும் அத்தனை உறவுகளுக்குமான அடிப்படை.
எப்படிக் கண்டறியப்பட்டது இந்த திமிங்கலம்?
இந்த திமிங்கலத்தை 1991ம் ஆண்டு கண்டறிந்தனர்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிவதற்காக ஆழ்கடலில் ஹைட்ராபோன்களை (hydrophones) அமெரிக்க இராணுவம் வைத்தது.
இவை ஆழ்கடலில் கேட்கும் சத்தத்தை இராணுவத்துக்கு தெரியப்படுத்தும். அப்போது அதிக அளவு திமிங்கலங்களின் சத்தமும் ஹைட்ராபோனில் பதிவானது.
போருக்கு பின்னர் ஹைட்ராபோன் பதிவுகளை கேட்க திமிங்கல ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது தான் இந்த சத்தத்தை ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர்.
பின்னர் அதனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
இது குறித்து The Loneliest Whale: The Search for 52 என்ற ஆவணப்படம் 2021ம் ஆண்டு வெளியானது.
ஒரு சராசரி திமிங்கலம் எழுப்பும் சத்தம் 30,000 மைல்கள் வரை பயணிக்கும். இப்படியான சத்தங்களின் மூலம் உலகின் ஒவ்வொரு திமிங்கலமும் மற்றொன்றுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்கிறது.
இந்த மாபெரும் சமூக கட்டமைப்பில் இருந்து சத்தத்தின் மூலம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது 52 ஹெர்ட்ஸ்.
கலிபோர்னியா கடற்கரையில் சுற்றித்திரியும் முடிந்தால்அதனுடன் கொஞ்ச நேரம் செலவிட்டு வாருங்கள்...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust