விமான கழிப்பறைகள் உண்மையில் சுகாதாரமானதா? எப்படி சுத்தம் செய்யப்படுகின்றன? canva
உலகம்

விமான கழிப்பறைகள் உண்மையில் சுகாதாரமானதா? முன்னாள் விமான ஊழியர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

விமான கழிப்பறையின் சுகாதாரம் மற்றும் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது என்கிற விவரங்களை அவர் பகிர்ந்திருந்தார். முக்கியமாக விமானங்களில் கழிவறை பயன்படுத்த மோசமான நேரம் எது என்பதையும் அவர் கூறியிருந்தார்.

Keerthanaa R

நமது பயணங்களில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று கழிப்பறை வசதிகள். பொதுக் கழிப்பறைகள் சில சமயங்களில் நமது உடல் நலத்திற்கு எமனாக மாறிவிடும்

இருப்பினும், சற்றே கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது. இன்று பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என, பொது போக்குவரத்து வாகனங்களில் கழிப்பறை வசதிகள் இருக்கிறது.

ஆனால் அவை எப்படி, என்ன மாதிரியான இடைவெளியில் சுத்தம் செய்யப்படுகின்றன? முக்கியமாக விமானங்களில்...

முன்னாள் விமான பணியாளராக இருந்த ஒருவர், சான்க்சுரி பாத்ரூம்ஸ் என்கிற பாத்ரூம் ஸ்பெஷலிஸ்ட் நிறுவனத்திடம் பேட்டி ஒன்றினை அளித்திருந்ததாக டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

அந்த பேட்டியில், விமான கழிப்பறையின் சுகாதாரம் மற்றும் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது என்கிற விவரங்களை அவர் பகிர்ந்திருந்தார். முக்கியமாக விமானங்களில் கழிவறை பயன்படுத்த மோசமான நேரம் எது என்பதையும் அவர் கூறியிருந்தார்.

எப்போது கழிவறை பயன்படுத்தலாம்?

விமானம் புறப்படுவதற்கு முன்பு மற்றும் தரையிறங்கும் முன்பு என இரண்டு வேளைகளில் கழிவறைகளை பயன்படுத்துவது மிக மோசமான யோசனை என்கிறார் பெயர் குறிப்பிடாத அந்த முன்னாள் ஊழியர்.

காரணம், விமானம் புறப்படும் போதும் சரி, தரையிறங்கும்போதும் சரி, டர்புலன்ஸ் (சிறிய அதிர்வு) இருக்கும். இது கழிவறை பயன்படுத்த சாதகமாக இருக்காது.மேலும், விமானங்களில் உணவு வழங்கப்படுவதற்கு முன் கழிவறையை பயன்படுத்துவதே சிறந்த நேரம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்

”விமானங்களில் வழங்கப்படும் உணவுகள் ஹெல்தியாக இருக்காது. எண்ணெய், உப்பு அதிகமாக இருக்கும் உணவுகளே வழங்கப்படும். சிலருக்கு இதை உண்பதனால், வயிற்று பிரச்னை ஏற்படலாம். சாப்பிட்டவுடன் கழிவறைக்கு செல்வது சற்றே சங்கடமானதாக அமையும்” என்கிறார்.

சுத்தம் செய்தல்:

நேரமின்மை, மற்றும் வேலைகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், விமானக் கழிப்பறைகள் முழுவதுமாக சுத்தம் செய்வது என்பது இயலாத காரியம் என்றார் அந்த விமான ஊழியர்.

பயணிகள் பயன்படுத்தும் அளவுக்கு அவற்றை சுத்தம் செய்துவிடுவது தான் வழக்கம்.

விமானங்களில் கழிப்பறைகள் பயன்படுத்துவது எப்படி?

  • கழிவறைக்கு செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனால் கிருமிகள் நம் உடலுக்குள் செல்வதை தடுக்கலாம்.

  • கழிவறையை பயன்படுத்திய பிறகு, இரண்டு முறை கைகளை நன்றாக சுத்தம் செய்துகொள்ளுதலும் அவசியம்.

  • விமானத்தில் உணவு உட்கொள்ளும் முன்னர் கழிவறை பயன்படுத்த வேண்டும்.

  • விமானம் சரியாக புறப்பட தயாராக இருக்கும்போதோ, தரையிறங்கும் நேரத்திலோ பயன்படுத்தக் கூடாது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?