கூகுள் மேப்ஸ் தொழில்நுட்பம் மக்கள் கைகளுக்கு வந்த பின் பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து கொண்டு நீங்கள் செல்ல விரும்பும் இடம் எப்படி இருக்கும், எத்தனை தொலைவில் இருக்கும், நடந்து செல்ல வேண்டுமா, வாகனங்களில் செல்ல முடியுமா.. என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது.
அப்படி சில இடங்கள் பார்ப்பதற்கு எந்த அளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவுக்கு நம்மை அச்சமூட்ட கூடியதாகவும் இருக்கிறது. அப்படி திகிலும் அழகும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் உலகின் சில டாப் இடங்களை இங்கே பார்க்கப் போகிறோம்.
துருக்மெனிஸ்தான் நாட்டில் காரகும் (Karakum) பாலைவனத்தில் சுமார் 20 மீட்டர் ஆழத்தோடு அமைந்திருக்கும் இந்த பெரும் பள்ளம் கடந்த 40 ஆண்டுகளாக ஏரிந்து கொண்டிருக்கிறது. இந்த பெரிய பள்ளத்தில் இருந்து இயற்கை எரிவாயு தொடர்ந்து வெளியேறி வருவதால் அது தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இதை முழுமையாக அணைக்க துருக்மெனிஸ்தான் அரசு முயன்ற போதும், இதுவரை தெளிவான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை.
சுமார் 15,000 அடி உயரத்தில் மழை காடுகளுக்கு மத்தியில் வடக்கு பொலிவியா நாட்டில் ஊடுருவி செல்கிறது இந்த மரண சாலை. இந்த சாலை எதோ சென்னை நகரத்தின் மத்தியில் இருக்கும் அகண்டு விரிந்த சாலை போல் இருக்காது. மிகக் குறுகலான சாலையில் ஒரு நேரத்தில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே அன்ன நடை போட்டு செல்ல வேண்டி இருக்கும். வாகனத்தை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு சவாலை கூட்டும் வகையில் பெரும்பாலான நேரங்களில் பனிமூட்டமும் இருக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த மரண சாலையில் சுமார் 200 முதல் 300 பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் சிகோகு என்கிற தீவில், நகரோ என்கிற சிறிய கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் உயிரோடு வாழ்ந்து வரும் மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில் மனிதர்களைப் போன்ற பொம்மைகள் இருக்கின்றன. எனவே இது ஜப்பான் நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் ஒரு சிறுமி அவருடைய குடும்பத்திலிருந்து சில பொம்மைகளை செய்து பொதுவெளியில் வைக்க, மற்றவர்களும் அதையே பின்பற்றி தங்கள் உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் நினைவாக பொம்மைகளை வைக்கத் தொடங்கி இன்று பொம்மைகளின் நகரமாக உருவெடுத்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஒரு மலை முழுக்க சிலுவைகள் வைக்கப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும. அப்படி பல்லாயிரக்கணக்கான சிலுவைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு மலை தான் லிதுவேனியா நாட்டில் இருக்கும் ஹில் ஆஃப் கிராஸஸ்.
எப்போது இந்த மலையில் சிலுவைகளை வைக்கத் தொடங்கினார்கள் என்பது குறித்து ஒரு தெளிவான விவரம் இல்லை. முதலில் சிலுவைகளை மட்டுமே வைத்தவர்கள் காலப்போக்கில் மேரி அன்னை சிலைகளையும், சின்ன சின்ன பொம்மைகளையும் வைக்க தொடங்கினர். இன்று கிட்டத்தட்ட லட்சக்கணக்கான சிலுவைகளும் மேரியந்னை சிலைகளும் நிறுவப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் இந்த ஹில் ஆஃப் கிராஸஸ் கத்தோலிக்க மார்க்கத்தை பின்பற்றுபவர்களுக்கு ஒரு முக்கிய புனிதத்தளமாக இருக்கிறது.
பல லட்சம் ஆண்டுகளாக உறைந்து கிடந்த டைலர் பனிப்பாறையில் இருந்து, இரும்பு ஆக்சைடு கலந்த நீர் சில ரசாயண மாற்றங்கள் காரணமாக ரத்த நிறத்தில் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தான் இதை பிளட் ஃபால்ஸ் என்று அழைக்கிறார்கள்.
பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் அவரை நல்லடக்கம் செய்வர் அல்லது எரியூட்டுவர். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் சகாடா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இறந்து விட்டால் அவர்களை சவப்பெட்டியில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு, அருகிலிருக்கும் மலைப் பகுதியில் ஒரு பக்கத்தில் தொங்க விடுகிறார்கள்.
முதலாம் உலகப் போர் காலத்தில் அடால்ஃப் ஹிட்லருக்கு போரில் காயம் ஏற்பட்ட போது சிகிச்சை பெற்ற மருத்துவமனை இது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்ற இந்த மருத்துவமனை, ஒரு ராணுவ மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 1995ஆம் ஆண்டுஇந்தப் பகுதியைவிட்டு ரஷ்யா வெளியேறியது. இன்று அந்த பிரம்மாண்ட மருத்துவமனையில் பெரும்பாலான பகுதி யாராலும் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டிருக்கிறது.
இப்போதும், இப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு இந்த பிரம்மாண்ட மருத்துவமனையிந் ஒரு பகுதி மட்டுமே காட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டான் ஜூலியன் சாண்டானா பரெரா (Don Julián Santana Barrera) என்கிற நபருக்கு சொந்தமான தீவுப் பகுதியில் பல இடங்களில் பல பொம்மைகள் தொங்கவிடப்பட்டிக்கின்றன.
ஒரு பெண் குழந்தை அருகில் இருந்த நீர் நிலையில் மூழ்கி இறந்ததாகவும், அவர் இறக்கும்போது கூட பொம்மை கேட்டதாகவும், அது அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஜூலியன் சாண்டானாவுக்கு காதில் விழுந்ததால் அக்குழந்தை இறந்த இடத்திற்கு அருகில் பொம்மைகளை தொங்க விட்டதாகவும், பிற்காலத்தில் தன்னிச்சையாக பல மரங்களில் பல பொம்மைகள் தென்படத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
கடைசியில் அந்த சிறுமி இறந்த பகுதிக்கு அருகிலேயே ஜூலியன் சாண்டானாவும் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. மெக்ஸிகோ சிட்டியில் Xochimilco பகுதியில் இருக்கிறது இந்த பொம்மைத் தீவு.
பொதுவாக எரிமலைக் குழம்பு என்றாலே தக தகவென மின்னும் தங்க நிறத்திலும், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் லாவாவில் அளவுக்கு அதிகமாக பல்வேறு வாயுக்கள் இருப்பதால், அதன் தட்பவெப்ப நிலை 535 டிகிரி செண்டிகிரேடாகவும், அதன் நிறம் நீலமாகவும் இருக்கிறது. 'நீல நிற லாவா' படிக்கவே வித்தியாசமாக இருக்கிறதே.
ஒருவர் இறந்துவிட்டால், அவர்களை நல்லடக்கம் செய்யும் வழக்கம் சிசிலியில் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் புதைக்க இடம் இல்லாததால், 16ஆம் நூற்றாண்டிலேயே நிலத்துக்கு அடியில் ஒரு கல்லறையை உருவாக்கினர். அது தான் catacombs of the capuchins. இன்று இந்த நிலத்தடியில் கட்டப்பட்ட கல்லறை ஒரு சுற்றுலாத் தளமாக உருவெடுத்துவிட்டது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிற பழமொழியை முழுமையாக நம்புபவரா நீங்கள்... அப்படி என்றால் நீங்கள் இந்தப் பகுதியைப் படிக்காமல் அடுத்த தலைப்புக்குச் செல்லலாம். காரணம் பிரேசில் நாட்டில் உள்ள இந்தத் தீவில் சுமார் 5 சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருக்குமாம். சா பாலோ நகரத்துக்கு அருகிலிருக்கும் இந்த தீவு பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. இந்த தீவுக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
யேசு நாதர் தன் இரு கைகளையும் நீட்டிய படி இருக்கும் சிலைகள் உலகம் முழுக்க பல இடங்களில் பார்க்க முடியும். ஆனால் முதன் முதலில் யேசு நாதர் கடலுக்கு அடியில் 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிலை இங்கு தான் இருக்கிறது. மத்தியத்தரை கடலில் சான் ஃப்ருட்டுஸ்கோ பகுதியில் சுமார் 17 மீட்டர் ஆழத்தில் கடலுக்கடியில் அமைந்திருக்கிறது இச்சிலை.
ஃபூஜி லாவா எரிமலை வெடிப்பால் சுமார் 35 சதுர கிலோமீட்டர் அளவில் அடர்ந்த காடுகளாக இருக்கும் இந்த வனப்பகுதி 'Suicide Forest' என்று அழைக்கப்படுகிறது. இந்த வனத்தில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த காட்டுப்பகுதி பேய்களின் வீடு என்றும் கூறப்படுகிறது.
இந்த தேவாலயத்தின் பெரும்பாலான சுவர்களில் மனித எலும்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதை 'Church of Bones' என்றும் அழைக்கிறார்கள். இந்த தேவாலயத்தில் சுமார் 40,000 - 70,000 நபர்களின் எலும்புகள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பல வலைதளங்களில் கூறப்படுகிறது. 1995ஆம் ஆண்டு இத்தளம் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் கொமடொங் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த குகையில் லட்சக் கணக்கான வெளவ்வால்களும், கிட்டத்தட்ட கோடிக்கணக்கான கரப்பான்பூச்சிகள், மரவட்டைகளும் இருக்கின்றன. அதோடு சில பிரத்யேக கழுகு இனங்கள், மீன் கொத்திப் பறவைகளும் இருக்கின்றன. இந்த மலை சுண்ணாம்புக்கல்லால் நிறைந்திருக்கிறது.
Veijo Rönkkönen என்கிற ஃபின்லாந்தைச் சேர்ந்த சிலை வடிக்கும் கலைஞர், தன் தோட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிலைகளை விட்டுச் சென்றார். அதைத் தான் தற்போது Veijo Rönkkönen sculpture garden என்றழைக்கிறார்கள். இதில் யோகா செய்வது போன்றெல்லாம் சிலைகள் வடிக்கப்பட்டு இருக்கின்றன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கொலம்பியா பகுதிக்கு அருகில் உள்ள செண்டிரலியா நகரம் ஒரு பேய் நகரமாகக் கருதப்படுகிறது. பல முறை தீ விபத்து ஏற்பட்டு, இன்று ஒற்றை இலக்கத்திலேயே இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றனர்.
வட அமெரிக்காவில் உள்ள பாலைவனம் சுமார் 225 கிமீ பரப்பளவில் பறந்துவிரிந்து கிடக்கிறது. இப்பகுதியின் வெப்பநிலை சுமார் 46 டிகிரி செல்சியஸ் வரை தொடுமாம். கோடை காலத்தில் உலகிலேயே மிக வெப்பமான பகுதியாக உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்பகுதியில் மனிதர்கள் வசிக்க முடியாது என்பதால் தான் இதை டெத் வேலி என்று அழைக்கிறார்கள்.
சேற்று எரிமலை கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகிலேயே அப்படி சுமார் 700 எரிமலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது, அதில் 350 சேற்று எரிமலைகள் அசர்பாய்ஜான் நாட்டில் அமைந்திருக்கிறது. இதில் கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் சேற்று எரிமலைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேற்று எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா திரவத்தில் அதிக அளவில் மக்னீசியம் மற்ரும் சோடியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த சேற்றைப் பயன்படுத்தி சொரியாசிஸ், ஆர்த்தரிட்டிஸ் நோய்களுக்கு மருந்து தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த லாவாவில் பாக்டீரியாக்களைக் கொள்ளும் மருந்துகளும், அழற்சிகளைக் குறைக்கும் மருந்துகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் மற்றும் அல்வார் நகரங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது பங்கர் கோட்டை. 18ஆம் நூற்றாண்டில் இந்த நகரம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. குரு பாலுநாத் என்பவர், தான் தியானம் செய்யும் இடத்தில் கோட்டையில் நிழல் கூடத் தொடக் கூடாது என்கிற நிபந்தனையோடு கோட்டையைக் கட்டிக் கொள்ள அனுமதி கொடுத்தார். ஆனால் காலப் போக்கில் சில தவறான முடிவுகளால் அரண்மனையின் நிழல் அவர் தியான இடத்தில் பட, குரு பாலுநாத்தின் சாபத்துக்கு பங்கர் கோட்டை ஆளாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust