Russia - ukraine war  twitter
உலகம்

Morning News Today: ரஷ்யா - உக்ரைன் போரால் அதிகரிக்கும் உலக அளவிலான வறுமை - ஐநா கவலை

NewsSense Editorial Team

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர் - ஐ.நா. கவலை!

உக்ரைன் நாடு மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி படையெடுத்தது.போரை நிறுத்தக்கோரி ஐ.நா. சபை, போப் பிரான்சிஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. ரஷ்யாமீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன. இவற்றையெல்லாம் மீறி 50 நாட்களைக் கடந்து போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரால் மனித இனத்தில் 5-ல் ஒரு பங்கு சதவிகிதத்துக்கு அதிகமானோர் கிட்டத்தட்ட 170 கோடி பேர் வறுமை, பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கவலை தெரிவித்து உள்ளார்.

சட்டமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் இன்று:

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் கடந்த 6-ம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.

கடந்த 13-ம் தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கும் கூட்டத்தொடரில் முதலில் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.அதன் பிறகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்புத் துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கேள்விகளுக்குப் பதிலளித்து துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

Modi

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக குஜராத் செல்கிறார்!

குஜராத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சில முடிவுகள் கிடைத்த நிலையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் பாஜக வெற்றி பெறவேண்டிய முனைப்பில் உள்ளது. இந்நிலையில், 3 நாட்கள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி இன்று குஜராத்துக்குச் செல்கிறார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பா.ஜ.க அலுவலகத்துக்குச் செல்கிறார். வரும் 20ம் தேதி வரை குஜராத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பிறகு இந்த மாதம் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள பாலி கிராமத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

Air India

கொரோனா கட்டுப்பாடு: ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

கொரோனா பரவலை முன்னிட்டு ஹாங்காங்கில் சர்வதேச விமான போக்குவரத்து சேவையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் ஹாங்காங் செல்வதற்கு 2 வார காலம் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், பயணத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என்று உறுதி பெற்ற சான்றிதழை உடன் வைத்திருக்க வேண்டும். அதன்பின்னரே, அவர்கள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்திருந்தது. இந்நிலையில், ஹாங்காங் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள், விமான சேவையின் குறைந்த அளவிலான தேவை ஆகியவற்றை முன்னிட்டு ஹாங்காங்கிற்கான ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறது.

IPL 2022

ஐபிஎல் போட்டிகள் நிலவரம்:

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மற்றொரு போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, குஜராத் டைட்டனஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?