மண்ணில் பிறக்கும் யாவரும், நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர். அதிலும் நூறு வயதை தாண்டிவிட்டால், நம்மை உலகமே கொண்டாடுகிறது.
நீண்ட நாட்கள் வாழ, மரபணு, மகிழ்ச்சியான மனநிலை, ஆரோக்கியமான உணவு மற்றும் உடல்நிலை ஆகியவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
இவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என்று கேட்டால், நம்மில் பாதி பேர் இல்லை என்று தான் சொல்வோம்.
ஆனால் உலகின் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஆயுள் அதிகம். இவர்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இவர்களின் ரகசியம் என்ன?
உலகில் அதிக வயதுடைய ஆரோக்கியமான நபர்கள் வாழும் இடங்களை தான் ப்ளூ சோன் என்று பிரிக்கின்றனர். இங்கு வாழ்பவர்களின் வயது சராசரியாக 80 அல்லது 90, அல்லது அதற்கும் மேல் இருக்கிறது
டேன் புட்னர் என்ற ஆராய்ச்சியாளர் தான் இந்த ப்ளூ சோன் என்ற வார்த்தையை உருவாக்கினார். உலகில் மொத்தம் ஐந்து ப்ளூ சோன்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
உலகில் இருக்கும் ஐந்து ப்ளூ சோன்கள்:
ஓக்கினாவா, ஜப்பான்
சார்டீனியா, இத்தாலி
லோமா லிண்டா, கலிஃபோர்னியா
நிக்கோயா தீபகற்பம், கோஸ்டா ரிக்கா
இக்காரியா, க்ரீஸ்
2004ல் முதன் முதலாக புட்னர் மற்றும் அவரது குழுவினரால் ப்ளூ சோன் ஆக கண்டறியப்பட்ட இடம் இத்தாலியில் இருக்கும் சார்டீனியா.
ஆராய்ச்சியாளர்கள் இங்கு வாழ்பவர்களில் ஒரு அரிதான மரபணு தனித்துவத்தை கண்டறிந்ததாக ப்ளூ சோன் தளம் குறிப்பிடுகிறது. இந்த தனித்துவம் இவர்களின் நீண்ட ஆயுளோடு தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.
இங்கு வாழும் மக்கள் அவர்களின் பகுதிக்குள் கிடைக்கும் உணவுகளையே சாப்பிடுகின்றனர். வேட்டையாடுதல், மீன்பிடி இவர்களின் பிரதான தொழிலாக இருக்கிறது.
கோதுமை, பீன்ஸ், வீட்டில் விளைவிக்கப்பட்ட பழம் மற்றும் காய்கறி வகைகளை தான் இவர்கள் உண்கின்றனர்.
இங்கு வாழும் மக்கள், என்ன தான் 80 வயதை கடந்தவர்களாக இருந்தாலும் ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். யாரும் சோர்வடைந்து, வேலைகள் செய்யாமல் இல்லை.
மேலும் அவ்வப்போது அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் ஒன்றுக் கூடி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றனர்.
இவர்களின் மந்திரமே ‘புரா விடா’ (சுத்தமான வாழ்க்கை) என்பது தான்.
நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே பொக்கிஷம், அதில் நாம் சந்தோஷத்தை தேட வேண்டும் என்ற கொள்கையுடன் வாழும் மக்கள் இந்த நிக்கோயா தீபகற்பத்தவர்கள்.
இதுவே இவர்களின் நீண்ட ஆயுளுக்கான ரகசியம். இவர்கள் பீன்ஸ், ஸ்குவாஷ் மற்றும் கார்ன்(சோளம்) ஆகியவற்றை அவர்களின் தினசரி உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்கின்றனர்.
இவர்களும் நீண்ட ஆயுளுடைய மக்களே. தகவல்களின் அடிப்படையில், இங்கு வாழ்பவர்களுக்கு இதய நோய், டிமென்ஷியா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பாதிப்பு இல்லை.
இவர்கள் அனைவருமே தங்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று நம்புகிறார்கள். அவர்களுக்கு தனித் தனியாக பொறுப்புகள் இருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு திறம்பட செய்வது அவர்களின் கடமை என்றும் நம்புகின்றனர்.
இதனையே இக்கிகய் என்று இவர்கள் அழைக்கிறார்கள்
கலிஃபோர்னியாவில் வாழும் இந்த மக்கள் தான் அமெரிக்காவிலேயே அதிக ஆயுளுடைய மக்கள்.
நாட்டில் வாழும் மற்ற மக்களை விட, லோமா லிண்டாவின் மக்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக உயிர்வாழ்கிறார்கள் என்கின்றனர் வல்லுநர்கள்
தகவல்களின் அடிப்படையில் இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 90 ஆக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவர்களின் உணவு பழக்கம் தான் என்கின்றனர். இவர்கள் மெடிட்டரேனியன் டயட்டை உட்கொள்கின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust