Neal Mohan: ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி வருமானம்; Youtube CEO பதவியேற்கும் தமிழர்- யார் இவர்? Twitter
உலகம்

Neal Mohan: ஆண்டுக்கு 57 ஆயிரம் கோடி வருமானம்; Youtube CEO பதவியில் இந்தியர்- யார் இவர்?

சமீப காலமாக யூடியூபில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. யூடியூபின் புதிய கொள்கைகள் குறித்து யூடியூபர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் தான் புதிய சி.இ.ஓ-வாக பதவி ஏற்கிறார் நீல் மோகன்.

Antony Ajay R

யூடியூபின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீல் மோகன் பதவி ஏற்கவுள்ளார். இவர் ஒரு இந்திய - அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபின் நிறுவனம் பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. பல சர்ச்சைகள் புதிதாக அந்த நிறுவனத்தின் மேல் எழுந்திருக்கின்றன.

குறிப்பாக புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள், வீடியோக்கள் மீதான விளம்பர வரம்புகள் உள்ளிட்ட புதிய கொள்கைகள் யூடியூபர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பலரும் யூடியூபிற்கு மாற்றான புதிய தளங்களைத் தேடி வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையில் யூடியூபின் CEO-வாக பதவியேற்றிருக்கிறார் நீல் மோகன்.

Youtube-ல் CEO மாற்றம் ஏன்?

ஸூசன் வோஜெஸ்கி (Susan Wojcicki) கடந்த 2014ம் ஆண்டு முதல் யூடியூபின் CEO-வாக இருந்தார்.

யூடியூப் இன்று சுமார் 29 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும், சுமார் 250 கோடி பேர் பயன்படுத்தும் தளமாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு சூசனின் பங்களிப்பு அளப்பரியது.

யூடியூப் தளத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக சூசன் இருந்த 9 ஆண்டுகளில் தான், யூடியூப் டிவி, யூடியூப் பிரீமியம், ஷார்ட்ஸ் போன்ற பல முன்னெடுப்புகளைக் கொண்டு வரப்பட்டன. இன்று யூடியூப் மூலம் கூகுள் நிறுவனத்துக்கு ஒரு பெரிய வருவாய் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு வித்திட்டு, திட்டத்தை வளர்த்து எடுத்தவரும் சூசன் தான்.

மிக முக்கியமாக வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் பரவுவது தொடர்பான முக்கிய & நிறுவனத்துக்கு அவசியமான கொள்கைகள் வகுக்கப்பட்டதும் இவர் தலைமையின் கீழ் தான் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

54 வயதாகும் இவர் தனது உடல்நலம், குடும்பம் மற்றும் அவர் விரும்பும் தனிப்பட்ட திட்டங்களில் கவனம் செலுத்த விரும்புவதனால் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அவரது அறிவிப்பிலேயே அவரின் கீழ் உயர்பதவி வகித்து வந்த நீல் மோகன் அடுத்த CEO-வாக யூடியூபை வழிநடத்துவார் என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்த நீல் மோகன்?

இது நாள் வரை யூடியூபின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக செயலாற்றி வந்த நீல் மோகன், ஒரு இந்தியன் - அமெரிக்கர் ஆவார்.

2008ம் ஆண்டு நீல் மோகன் யூடியூபில் இணைந்தார். கடந்த 15 ஆண்டுகளாக பல திட்டங்களில் சூசன் வோஜெஸ்கி மற்றும் நீல் மோகன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

யூடியூபில் இணைவதற்கு முன்னரே 2007ம் ஆண்டு கூகுளில் இரட்டை க்ளிக் (டபுள் கிளிக்) கையகப்படுத்துதல் திட்டத்தில் வேலை செய்திருக்கிறார். பின்னர் காட்சி மற்றும் வீடியோ விளம்பரங்களின் மூத்த துணைத் தலைவராக பதவி வகித்திருக்கிறார்.

படிப்பு மற்றும் பட்டங்கள்

1996ம் ஆண்டு அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஸ்டான் ஃபோர்ட் பல்கலைகழகத்தில், எலெக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.

2005ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

யூடியூபைக் கடந்து...

ஸ்டிச் ஃபிக்ஸ் என்ற பேஷன் நிறுவனத்தில் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவில் இருக்கிறார் நீல் மோகன்.

மேலும், 23andMeந் என்ற உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திலும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவில் உள்ளார்.

கூகுள் மட்டுமல்லாமல் அதன் போட்டி நிறுவனமான மைக்ரோசாஃப்டிலும் இன்டெர்ன்ஷிப் செய்திருக்கிறார் நீல் மோகன்.

வருமானம்

நீல் மோகன் கடந்த ஆண்டு 57 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், அவர் ட்விட்டர் மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் நிறுவனங்களில் சேராமல் இருக்க கூகுள் நிறுவனம் அவருக்கு 100 மில்லியன் மதிப்பிலான ஸ்டாக்குகளை வழங்கியதாக டெக் சர்ச் அறிக்கைகள் கூறியுள்ளன.

இந்த ஸ்டாக்களின் மதிப்பு இப்போது 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் ( இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடிக்கும் மேல்) தொடும் என்றுக் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?