கூட்டத்தை விரும்பாதவரா நீங்கள்? வாட்டிகன் டு ஐஸ்லாந்து - சுற்றிப்பார்க்க சூப்பர் ஸ்பாட்ஸ்! canva
உலகம்

கூட்டத்தை விரும்பாதவரா நீங்கள்? வாட்டிகன் டு ஐஸ்லாந்து - சுற்றிப்பார்க்க சூப்பர் ஸ்பாட்ஸ்!

இந்த நாட்டின் மக்கள் தொகை வாட்டிகன் சிட்டியை விட அதிகமாகவே உள்ளது. 2023ல் இந்நாட்டின் மக்கள் தொகை...

Keerthanaa R

தற்போதெல்லாம் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் பெருங்கூட்டத்தை விரும்புவது இல்லை. தனிமையில் அவர்கள் பயணத்தை ரசிக்க விரும்புகின்றனர்.

இவர்களுக்காகவே அதிகம் மக்கள் கூடாத அமைதியான இடங்கள் சுற்றுலாவுக்கு உகந்ததாக இருக்கிறது.

அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்

ஐஸ்லாந்து

சுற்றுலா பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் வெறும் 3.7 லட்சம் தான். இது 2022ஆம் ஆண்டை விட 0.65% உயர்வே.

ஐஸ்லாந்தில் தவறவிட்டுவிடக் கூடாத இடமென்றால் அது கோல்டன் சர்க்கிள். இது திங்வெல்லிர் தேசிய பூங்கா, குல்ஃபோஸ் நீர்வீழ்ச்சி மற்றும் கீசிர் ஆகிய மூன்று முக்கிய இடங்களை இணைக்கிறது.

நமீபியா

தற்போதைய நிலவரப்படி 2,604,172 தான் நமீபியாவின் மக்கள் தொகை. பெருமளவில் பாலைவனமாக உள்ள நாடு நமீபியா. இங்கு நன்னீரின் அளவு குறைவு என்பதால், இந்த நிலம் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை.

ஆனாலும், உலகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது நமீபியா. சோசுஸ்வ்லெய் ஏரி, டெட்வ்லெய் பள்ளத்தாக்கு, கேப் கிராஸ் நீர் நாய் காப்பகம் உள்ளிட்ட இடங்கள் இங்கு பிரபலம்.

மங்கோலியா

அரை ஆண்டு கடந்துள்ள நிலையில், மங்கோலியாவின் மக்கள் தொகை தற்போது 3 லட்சத்து 44 ஆயிரமாக இருக்கிறது. புவியியல் மற்றும் கால நிலை மாற்றங்களின் காரணமாக இந்த நாட்டில் பாப்புலேஷன் குறைவாக இருக்கிறது. இங்கு பெரிய பெரிய மலைகளும், அதிக சூடான பாலைவனங்களும் அதிகம். இங்கு குளிர் காலமும் நீண்ட நாட்கள் இருக்கிறது.

செங்கிஸ் கான் சிலை வளாகம், அட்லாய் தவான் தேசிய பூங்கா, கோபி பாலைவனம் ஆகிய இடங்கள் இங்கு பிரபலம்.

கிரீன்லாந்து

க்ரீன்லாந்தின் மக்கள் தொகை 2023ல் சுமார் 56,600 தான். என்ன தான் பரந்து விரிந்த நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், பெரும்பகுதி மனிதர்கள் வாழ தகுதியில்லாத இடமாக இருக்கிறது. கிரீன்லாந்தி ஐஸ் ஷீட், இலுசிடாட், நூக், நூக் கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்கள் மிகவும் பிரபலம்.

வாட்டிகன்

இது உலகின் மிகச் சிறிய நாடு. இந்த நாட்டை சுற்றிப்பார்க்க நமக்கு ஒரு நாள் கூட மிகுதியே. 2023ல் இந்த நாட்டின் மக்கள் தொகை 820.

உலகின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். வாட்டிகன் அருங்காட்சியகங்களுக்குள் அமைந்துள்ள சிஸ்டைன் சேப்பல் மற்றொரு முக்கியமான அடையாளமாகும்.

நவுரு

இது தான் மிகச் சிறிய பசிபிக் நாடு. சுற்றுலா பயணிகள் பெரிதும் அறிந்திடாத, செல்லாத இடமாகவும் இருக்கிறது நவுரு. 21 சதுர கிலோமீட்டர் தூரம் மட்டுமே இருக்கும் இந்த நாட்டை சுற்றிப்பார்க்க 30 நிமிடங்கள் போதுமானது.

இந்த நாட்டின் மக்கள் தொகை வாட்டிகன் சிட்டியை விட அதிகமாகவே உள்ளது. 2023ல் இந்நாட்டின் மக்கள் தொகை 12,780.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?