உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer
உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer ட்விட்டர்
உலகம்

உலகப்போர்: போலி பாரிஸை உருவாக்கிய பிரான்ஸ் அரசு - யாரை ஏமாற்ற? சுவாரஸ்ய வரலாறு | Explainer

Keerthanaa R

உலக போரின்போது ஜெர்மனியின் தாக்குதலில் இருந்து தங்கள் தலைநகரை காக்க, ஒரு போலி பாரிஸ் உருவாக்கியதாம் பிரான்ஸ் அரசு.

வியப்பாக இருக்கலாம், ஆனால் அது உண்மை தான்.

உலக நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை காட்ட சிறிய நாடுகள் மீது போர் தொடுத்தது. இன்னொரு பக்கம் தங்கள் நாட்டின் அடுத்த வாரிசு கொல்லப்பட்டதை அடுத்து, உலகப்போரையே தொடங்கியது ஆஸ்த்ரியா.

இந்த முதலாம் உலகப்போர் தி கிரேட் வார் என்றே அழைக்கப்பட்டது. 1914ஆம் ஆண்டு தொடங்கி, 1918ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த பெரும் போரில் சுமார் 9 மில்லியன் பேர் மரணமடைந்தனர். 

இந்த உலகப்போரில் இரண்டு முக்கிய கூட்டணிகள் இருந்தன:

  • ஜெர்மனி, ஆஸ்த்ரியா - ஹங்கேரி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய triple alliance.

  • இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய triple entente.

இந்த போர் தொடங்கிய 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜெர்மனியின் குண்டு வீசும் விமானிகள் பாரிஸ் மீது குண்டு வீசினர். நான்கு சிறிய குண்டுகள் பாரிஸ் மீது வீசப்பட்டது. 

இதனால் பெரும் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் தங்கள் நாட்டுக்கு இருக்கும் ஆபத்தினை உணர்ந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. 

இந்த நிலை தொடர்ந்தால் நகரமே, ஏன் நாடே கூட அழியக்கூடும். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பொறியாளர் ஒருவருக்கு பொறி தட்டியது

இந்த சம்பவத்திற்கு பிறகு குறிப்பிடத்தக்க வான்வழி தாக்குதல்களை எதிர்கொண்டது பாரிஸ். மரணங்களும் நிகழ்ந்தன. 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி, இந்த தாக்குதல்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் நாடர் டேம் சர்ச்சின் தெருவில் அணிவகுத்திருந்தனர். கிட்ட தட்ட 6 வண்டிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் கொண்டுவரப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், இனி எந்த சாமானியனின் உயிரும் பறிபோகக்கூடாது, எதிரி நாட்டு படைகளை வீழ்த்துவோம் என்று சபதம் எடுத்தார் பாரிஸின் ஆர்ச் பிஷப். 

ஆனால் அது தான் நடக்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களிலும் பிரான்ஸின் தலைநகர் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த நிலை தொடர்ந்தால் நகரமே, ஏன் நாடே கூட அழியக்கூடும். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பொறியாளர் ஒருவருக்கு பொறி தட்டியது.

போலியான பாரிஸ் நகரம் ஒன்றை உருவாக்க நினைத்தார் ஃபெர்னாண்ட் ஜக்கோபோசி என்ற பொறியாளர். இவர் ஒரு எல்க்ட்ரிகல் இஞ்சினியர். 

இவருக்கு இந்த யோசனை தோன்றியது என்பதும், பின்னாட்களில் அரசின் உதவியோடு இந்த யோசனை அமலாக்கப்பட்டது என்பதற்கும் சான்றுகள் இருக்கிறது.

ஆனால், இவரை அரசு எப்படி கண்டுபிடித்தது, எப்படி தன் ஐடியாவை அவர்களுக்கு எடுத்து சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால் 1917ஆம் ஆண்டில் பிரான்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் ஃபெர்னாண்ட் ஜக்கோபோசியை அழைத்து இந்த போலி பாரிஸை உருவாக்கச் சொன்னது.

கேட்பதற்கு கொஞ்சம் வியப்பாக இருக்கலாம். நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!

ஒரு போலியான பாரிஸ் நகரம் அமைக்கப்பட்டது. அச்சு அசலாக பாலங்கள், கட்டடங்கள், ரயில் நிலையங்கள் உள்பட நகரத்தை உருவாக்கினர்.

அந்த சமயத்தில் ரேடார்கள் இல்லை. இதனால் எதிரிகள் தோராயமாக தான் வானில் இருந்து நகரத்தை கண்டறிந்து தாக்கினர். மொத்தம் மூன்று சோன்களை உருவாக்க திட்டமிட்டது பிரான்ஸ் அரசு. ஆனால் 1918ல் போர் முடிந்ததால், ஒரு சோன் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டது.

இவர்கள் கட்டிமுடித்தது, பாரிசின் அதிக போக்குவரத்து இருந்த காரெ டி லெஸ்ட் என்ற ரயில் நிலையத்தின் மாதிரியை.

தனது எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் மூளையை பயன்படுத்தி  இத்தாலியன் ரயிலின் பெட்டிகளுக்கு மர பலகைகளைப் பயன்படுத்தினார், மேலும் உட்புற விளக்குகளுக்கு அவர் ஒரு கன்வேயர் பெல்ட்டில் ஒரு தனித்துவமான விளக்கு அமைப்பாக மாற்றினார். வானில் இருந்து பார்க்க இது ரயில் நகர்வது போல் தெரிந்தது.

அதேபோல ஒரு தொழிற்சாலையையும் உருவாக்கினார் ஜக்கோபோசி. அதிகமாக விளக்குகளை பயன்படுத்தி, ஜெர்மன் படைக்கு சந்தேகம் வந்துவிடாமல் இருக்க, குறைவான அலங்காரத்தினையே மேற்கொண்டார்.

மேலும் இந்த நகரின் மற்ற இடங்களிலும் விளக்குகள் எரிந்தன.

அதாவது, எதிரி நாட்டு படையினர் இரவில் தான் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் பாரிஸ் நகரம் முழுவதும் இரவில் அடங்கிவிடும். உருவாக்கப்பட்ட போலி நகரத்தில் ஆங்காங்கே விளக்குகள் எரியவிடப்பட்டன. 

இதனை பாரிஸ் என நினைத்து தாக்கியது எதிரி நாடு.  துரதிர்ஷ்டம் என்னவென்றால், நகரம் முழுமடையும் முன்னரே மற்றொரு தாக்குதல் நடந்தது.

செப்டம்பர் 16ஆம் தேதி ஜெர்மனியின் கோதா விமானம் தலைநகரை தாக்கியது. சுமார் 22,000 கிலோ குண்டுகளை வீசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

அடுத்த தாக்குதல் நடப்பதற்கு முன்பாக முழுமையாக பாரிஸ் மாதிரி நகரத்தை உருவாக்கவேண்டும் என நினைத்தனர்.

ஆனால், இரண்டு மாதங்களில் போர் முடிவுக்கு வந்துவிட்டது. பொறியாளரின் உதவிக்கும் தேவை தீர்ந்தது

பிரென்சு அரசாங்கம் அவர்கள் நினைத்த காரியத்தில் பாதி வெற்றி கண்டனர் என்று சொல்லலாம்.

இந்த தந்திரம் 1920ஆம் ஆண்டு வரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. பிரிட்டிஷ் நாட்டின் பத்திரிகையான தி க்ளோப் இதனை முதலில் கண்டறிந்தது. ஆனால் முழு தகவலை வழங்கி, உலகுக்கு பிரான்ஸ் நாட்டின் போர் யுக்தியை வெளிச்சம் போட்டு காட்டியது தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ் பத்திரிகை தான்.

அந்த செய்திக்கு,  “A False Paris Outside Paris — a ‘City’ Created to be Bombed.” என்று பெயரிடப்பட்டு இருந்தது. இதில், புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் விளக்கங்கள், அனைத்தும் இருந்தன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வளர்ப்பு நாய்க்கு ₹2.5 லட்சத்தில் தங்கச் சங்கிலி பரிசளித்த பெண்!

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?