Flight Twitter
Wow News

வீட்டுக்கு வீடு விமானம் : ஓர் 'அடடே' நகரம்

உங்கள் எதிர்வீடு, அடுத்த வீடு, உங்கள் தெருவில் எல்லாரும் விமானம் வைத்திருந்தால் எப்படியிருக்கும்? உண்மையாகவே அப்படி ஒரு பகுதி இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில். அவை airparks அல்லது fly-in communities என்று அழைக்கப்படுகின்றன.

Antony Ajay R

உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் என்ன வாகனம் வைத்திருக்கிறார்? ஒரு சிடி 100 பைக்? அல்லது ராயல் என்ஃபில்ட் பைக்? இன்னும் கொஞ்சம் வசதியான பகுதியில் நீங்கள் வசித்தால் சிஃப்ட் அல்லது ஆடி கார் கூட வைத்திருக்கலாம். ஒரு வேளை உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் ஒரு Flight வைத்திருந்தால் உங்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? உங்கள் எதிர்வீடு, அடுத்த வீடு, உங்கள் தெருவில் எல்லாரும் விமானம் வைத்திருந்தால் எப்படியிருக்கும்? உண்மையாகவே அப்படி ஒரு பகுதி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், இருக்கிறது. ஆனால், அமெரிக்காவில். அவை airparks அல்லது fly-in communities என்று அழைக்கப்படுகின்றன.

இந்த வீட்டுக்கொரு விமானம் திட்டம் உருவானது எப்படித் தெரியுமா? அது இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டம். அமெரிக்காவில் பல விமானத்தலங்கள் உருவாகின. 1939 மற்றும் 1946 இடையிலான காலகட்டத்தில் விமானிகளின் எண்ணிக்கை 36000 முதல் 4 லட்சமாக அதிகரித்தது.

இதனால் சிவில் ஏரோநாட்டிக்ஸ் நிர்வாகம் ஒரு திட்டத்தை வகுத்தது. நாடுமுழுவதும் குடியிருப்பு விமான நிலையங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இராணுவத்தால் கைவிடப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தலாம். அங்கு ஓய்வு பெற்ற விமானிகளைக் குடியமர்த்தலாம் என்பது தான் அது. இப்படியாக உருவாக்கப்பட்டது தான் இந்த Fly - in - Communities.

1946ம் ஆண்டு கலிபோர்னியாவில் முதல் குடியிருப்பு விமான தளம் உருவானது. நாம் சாலைகளில் கார்களைக் கடந்து செல்வது போல அங்கு விமானங்களைக் கடந்து சென்றனர். வீட்டிற்குப் பக்கத்தில் ஷெட் அமைத்து அதில் விமானங்களை நிறுத்தி வைத்தனர். இந்த குடியிருப்புகளில் வசித்த அனைவருக்கும் விருப்பமான செயல் ஒன்று இருந்தது அது தான் விமானப் பயணம்.

சென்னை மீனம்பாக்கத்தில் நின்று விமானநிலையத்தை வெறிக்கப் பார்த்து விமானம் கடக்கும் போதெல்லாம் உற்சாகமடையும் நாம் இந்த பகுதிகளுக்குச் சென்றால் மிரண்டுவிடுவோம் தான். இன்ஸ்டாகிராமில் சில நாட்களுக்கு முன் வெளியான வீடியோவில் தெருக்களில் விமானம் நிற்கும் காட்சியும், வீடுகளில் பார்க் செய்திருக்கும் விமானங்களும் வைரலாகின.

அட ஒரு பகுதி முழுவதும் இத்தனை விமானங்கள் இருந்தால் அந்த சாலையில் எப்படிச் செல்வது எனக் கவலைப் பட வேண்டாம். அங்குச் சாலைகள் மிக அகலமாக இருக்கின்றன. தெருவில் நின்று எதிர் வீட்டுக்காரரிடம் பேசவேண்டுமென்றால் ஸ்பீக்கர் தான் உபயோகிக்க வேண்டும். இந்த தெருக்களுக்குக் கூட விமானம் தொடர்பான பெயர்கள் தான் சூட்டப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக போயிங் சாலை என்பது ஒரு தெருவின் பெயர்.

இந்த விமானங்களை இதன் உரிமையாளர்கள் டாக்சியாக பயன்படுத்துகின்றனர். அருகில் இருக்கும் விமான நிலையங்களுக்கு இவற்றைப் பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு பகுதி என நினைக்க வேண்டாம். உலகில் மொத்தம் 630 விமானத்தள குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றில் 610 அமெரிக்காவில் தான் இருக்கிறது. ஒரு குடியிருப்பில் எத்தனை வீடுகள் விமானங்கள் இருக்கும்?

ஃபுளோரிடாவிலுள்ள Spruce Creek எனும் பகுதியில் 650 விமானங்கள் உள்ளன. இதில் தனியார் ஜெட் முதல் 1940களின் போர்க்கால விமானங்கள் வரை அடங்கும். இது அமெரிக்காவின் பெரிய குடியிருப்பு விமானத்தலங்களில் ஒன்று.

வீட்டுக்கு வீடு விமானம் இருக்கும் இந்த பகுதிகளில் உணவகங்கள், கடைகள், விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள் போன்றவை உள்ளன. ஆகா இது போன்ற பிரம்மாண்டங்கள் நிறைந்த இடத்தில் தான் வசிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அது தான் முடியாது. இந்த பகுதியில் வசிக்கும் யாரோ ஒருவர் உங்களை அழைத்தால் மட்டும் தான் நீங்கள் அங்குச் செல்ல முடியும் என்பது ஒரு மோசமான உண்மை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?