Moreh : மணிப்பூரில் ஒரு மெட்ராஸ் - தமிழ் மக்கள் வடகிழக்கு சென்றது எப்படி? Twitter
Wow News

Moreh : மணிப்பூரில் ஒரு மெட்ராஸ் - தமிழ் மக்கள் வடகிழக்கு சென்றது எப்படி?

Antony Ajay R

பயணம் செய்வது நம்மை தொலைத்து நிம்மதி பெருவதை விட பல விஷயங்களை அறிந்துகொண்டு மேம்படுவது என நினைப்பவரா நீங்கள்.

பல கலாச்சாரங்கள், மக்கள், வாழ்க்கைமுறையை தெரிந்துகொள்ள விரும்பினீர்களென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.

மணிப்பூரில் உள்ள முரே என்ற இடம் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. தென்னூபல் (Tengnoupal) மாவட்டத்தில் இந்தியா - மியான்மர் எல்லையில் ஆசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த பகுதி.



ஆசிய நெடுஞ்சாலை என்பது டோக்கியோவில் இருந்து கொரியா, சீனா, தென்கிழக்கு ஆசியா வழியாக பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ஈரானைக் கடந்து துருக்கி, பல்கேரியாவில் ஐரோப்பிய சாலை E80 இல் இணைகிறது.

இந்தியாவில் இருக்கும் சாலை முத்தரப்பு சாலை எனப்படுகிறது. இது முரேவை (Moreh) மியான்மரின் மாண்டலே வழியாக தாய்லாந்தின் மே சோட் (mae sot) பகுதியுடன் இணைக்கிறது.


சாதாரண இடங்களுக்கு நீங்கள் செல்வது போல அழகான பசுமையான இடங்களை இங்கு ரசிக்க முடியாது. மாறாக சர்வதேச வியாபாரம் நடக்கும் Border Haat Trade என்ற இடத்தை இங்குப் பார்க்கலாம்.

இங்கு நீங்கள் இந்தியா மற்றும் மியான்மர் இடையிலான பண்டமாற்று வியாபாரத்தைப் பார்க்கலாம். இங்குள்ள சந்தையில் மணிப்பூர் மட்டுமல்லாமல் மியான்மர் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். இப்படி ஒரு ஊரை வேறு எங்கும் உங்களால் பார்க்க முடியாது.



முரேவில் தமிழ் வம்சாவழி மக்களையும் நாம் அதிகமாக காணமுடியும். 1960, 70களில் பர்மாவில் இருந்து தமிழ் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலனவர்கள் சென்னைக்கு திரும்பினர். தமிழகத்தின் வாழ்க்கைமுறையுடன் ஒத்துப்போக முடியாதவர்கள் மீண்டும் வடகிழக்கு பகுதிக்கு திரும்பினர். அப்படிப்பட்ட மக்கள் முரேவில் வாழ்ந்து வருகின்றனர்.

பல தலைமுறைகளாக அங்கு வசித்தாலும் தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றியே அந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தியாவின் வடகிழக்கு பிரதேசம் மிகவும் தனித்துவமானது. இங்குள்ள யாரும் அறியாத ஒரு கிராமத்தில் பெரிய அளவில் ஒரு திராவிட கோவில் இருப்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடியுமா!

வடகிழக்கில் இரண்டாவது பெரிய கோவில் வளாகமாக கருதப்படும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் முரேவில் இருக்கிறது.



இங்கிருந்து ஆயிரக்கணகான கிலோமீட்டர்கள் தள்ளிச் சென்றால் இதுவும் நம் வீடுதான் என அழைக்க தமிழ் மக்கள் இருப்பது அதிசயமல்லவா?

கோவிட் 19 மற்றும் தொடர்ந்துவந்த அரசியல் காரணங்களால் முரேவில் சுற்றுலா தடுக்கப்பட்டுள்ளது. நாம் இந்தியா - மியான்மர் நட்பு பாலம் வரை சென்றுவர முடியும்.

அரசியல் சச்சரவுகள் ஓய்ந்து மீண்டும் முரே பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?