பிரான்செஸ்கா போர்டியர் எனும் பெண் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக இவருக்கு பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் அவரது பூனையும் கலந்து கொண்டதால் அதற்கும் பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது பல்கலைக்கழகம்.
ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்த நாம் அனைவருக்கும் நமது செல்ல பிராணிகள் தனிப்பெருந்துணையாக இருந்ததை மறுக்க முடியாது. உளவியல் ரீதியில் பலர் பாதிக்கப்பட்ட போது செல்ல பிராணிகள் அவர்களது உரிமையாளர்களைக் காப்பாற்றியது என்றே கூறலாம். அதேப் போல அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த பிரான்செஸ்கா போர்டியர்க்கும் அவரது சுகி என்ற பூனை துணையாக இருந்துள்ளது.
தனது பட்டமளிப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவி பிரான்செஸ்கா, “என்னுடைய பூனை எனது எல்லா ஜூம் வகுப்புகளிலும் பங்கேற்றது. அதனால் நாங்கள் இருவரும் பட்டம் பெறப்போகிறோம்” என்ற தலைப்புடன் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.
அவரது பூனைக்கும் பட்டமளிப்பு விழாவுக்கான அங்கியை அணிவித்த புகைப்பட பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலானது. மாணவி படித்த டெக்ஸாஸ் பல்கலைக்கழகமும் அவரது பதிவிற்குப் பதிலளித்துள்ளது. "உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பல்கலைக்கழகம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.
பிரான்செஸ்கா போர்டியர் மற்றும் சுகிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust