Stephen Zechariah: "என் லைஃப் மாறுன நொடி"- சிங்கபூர் பாடகர் தமிழ் மனங்களை வென்றது எப்படி?

ஸ்டெபன் செக்கராயா இசையை தனது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தபோது, சுற்றி இருந்த அனைவரும்… நண்பர்கள் கூட அவரை புறக்கணித்தனர். “உன்னால் முடியாது” என்ற கூற்று அவரது காதுகளில் விழுந்தவண்ணமே இருந்தது.
Stephen Zechariah
Stephen ZechariahTwitter
Published on

இந்த காலத்து இசை ரசிகர்களில் தனக்கென ரசிகர் பட்டாளம் ஒன்றை உருவாக்கிகொண்டவர் ஸ்டெபன் செக்கராயா. இவரது பாடல்களான அடிப்பெண்ணே ஒருமுறை நீ சிரித்தால், நான் உன் அருகே நெசமாகுறென், தெருவோரம் பறந்துவந்த பைங்கிளியே போன்ற பாடல்கள் யூடியூபில் ஹிட் அடித்து 2கே கிட்ஸ்களில் ரிங்டோனாக மாறின.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஸ்டெபன் செக்கராயா உலகம் முழுவதுமுள்ள தமிழர்களில் பிளேலிஸ்டில் இடம் பிடித்துள்ளார். இவரது பயணம் எங்கேத் தொடங்கியது? இசையுலகில் தனக்கெனத் தனியிடத்தை பிடித்தது எப்படியெனக் காணலாம்…

ஸ்டெபன் சிறுவயதில் இருந்தே பாடுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். சிறந்த திரைப்பிரபலமாகவும் மக்களை மகிழ்விப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரது கனவு.

10 வயதில் ட்ரம்மராக வாசிக்கக் கற்றுக்கொண்டார். 17 வயதில் கீபோர்டும் கற்றுக்கொண்டு தனது வரிகளுக்கு தானே இசையமைக்கப் பழகினார். 

ஸ்டெபனின் குடும்பத்தினர் அனைவருக்குமே இசை கைவந்திருந்தது. அவரது அம்மா காரைக்காலைச் சேர்ந்தவர், அப்பா சிங்கப்பூர்காரர். அவரது இரண்டு அண்ணன்களும் இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்கள்.

ஆனால் ஒரு பாடகராகவும் நடிகராகவும் எளிதாக உருவாகும் நிலையில் அவர் இல்லை. அவரது உருவத்தையும் குரலையும் ஆரம்பத்தில் அதிகமாக கேலி செய்திருக்கின்றனர். 

ஒருவிபத்தில் ஸ்டெபனின் மூக்கு உடைந்த பின்னர் குரலில் மாற்றம் இருந்திருக்கிறது. எனினும் ‘மூக்கால பாடுற’ போன்ற கேலிகளை அவர் தொடர்ந்து எதிர்கொண்டுவந்தார். 

அப்படி இருந்தும் அவருக்குள் இருந்த தானாக எழுந்துவரும் மெட்டுகளை முனுமுனுக்கத் தவறவில்லை. அவரது உணர்வுகளை வெளிப்படுத்த இசை மட்டுமே அவருக்கு உதவியிருக்கிறது.

சுற்றி இருந்த அனைவரும்… நண்பர்கள் கூட அவரை புறக்கணித்தனர். “உன்னால் முடியாது” என்ற கூற்று அவரது காதுகளில் விழுந்தவண்ணமே இருந்தது. 

ஸ்டெபன் சிறுவயதில் இருந்தே சர்ச்சில் வளர்ந்ததால் சர்ச் பாடல்களும் அதற்கு பயன்படுத்தப்படும் இசையும் அவருக்கு அத்துபடி, அதே இசையை திரைப்படங்களிலும் பயன்படுத்தியிருப்பதைக் கவனித்தவருக்கு தன்னாலும் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கைப் பிறந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவின் இசைதான் அவருக்கு ஊக்கமாக உள்ளது. மற்றொரு பக்கம் நல்ல நடிகனாகவும் இருக்க வேண்டும் என்ற அவரது லட்சியத்தையும் துரத்தினார்.

Stephen Zechariah
Ar Rahman : உண்மையான பெயர் திலீப் குமாரா? ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்

2016ம் ஆண்டு  Joe: The Black Assassin என்ற படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார் ஸ்டெபன். அப்போது சாரல் மழையே என்ற பாடலை உருவாக்கினார்.

பாடலின் மெட்டை பதிவு செய்ய தானே பாடினார். படக்குழுவினர் இவரது குரலையே விரும்பி பாடக் கூறியுள்ளனர். ஆனாலும் அதிகமாக கேலி கிண்டல்களை சந்தித்திருந்த ஸ்டெபன் தனது குரல் குறித்த தாழ்வு மனப்பான்மையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில், “எப்படியும் 1000 பேர் தான் கேப்பாங்க, அதில 10 பேர் கிண்டல் பண்ணா என்ன. என்று நினைத்துத்தான் பாடினேன்” எனக் கூறியுள்ளார். 

ஆனால் நேர்மாறாக ஸ்டெபனின் குரலுக்கு அந்த பாடலில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக “வேண்டும் உந்தன் மடிமீது உறக்கம், இதுதான் அன்பே நான் ஏங்கும் சொர்க்கம். ஆகாதிது போல் வேறெந்த உறவும், நீதான் அன்பே என் தாயின் வடிவம்” என்ற வரிகளை அவர் பாடியது பலரது மனதுக்கு நெருக்கமான தருணமானது.

இந்த பாடலுக்கு பிறகு தான் தன்னால் ஏதோ ஒன்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவருக்குப் பிறந்திருக்கிறது. பாஸிடிவான ரிவியூக்கள் வந்த நொடிகள் தான் அவரது வாழ்க்கையை மாற்றின எனலாம்.

இண்டிபெண்டண்ட் இசைக்கலைஞராகவும் வெற்றி பெற்றுள்ளார் ஸ்டெபன் செக்கராயா. இந்திய மியூசிக் ட்ரையாலஜியாக வெளியான உசுரையே தொலைச்சேன், சகியே மற்றும் விலகாதே பாடல்கள் ஹிட் அடித்தன. 

Stephen Zechariah
PK Rosy : முதல் மலையாள நடிகைக்கு டூடுல் வெளியிட்ட கூகுள் - யார் இவர், இவரது கதை என்ன?

  Joe: The Black Assassin மட்டுமல்லாமல் அவதாரம், நாம், பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் செக்கராயா. 

ஸ்டெபனின் காதல், காதல் வலியைப் பேசும் பாடல்களுக்கு தனி ரசிகர்பட்டாளம் உண்டு. பாடல்களை அவரே எழுதவும் பாடவும் செய்வதால் அவரது உணர்வுகளை மேற்பூச்சின்றி வெளிப்படுத்தும் விதமாக அவரது பாடல்கள் இருக்கும்.

அவரது பாடல்கள் சிங்கபூரைத் தாண்டி இந்தியா, மலேசியா மற்றும் இலங்கைத் தமிழர்களையும் ஈர்த்துள்ளது. இவரும் பிற நாடுகளில் உள்ள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். 

Stephen Zechariah
கீரவாணி: ஆஸ்கர் வென்ற 2வது இந்திய இசையமைப்பாளர்; இந்திய இசையின் பாகுபலி - இவரது கதை என்ன? 

உதாரணமாக இலங்கை தமிழ் ராப்பர் MC SAI உடன் ‘தெருவோரோம்’, பிரபல பின்னணி பாடகி பிரியங்கா NK உடன் ‘அல்லி பூக்கள்’ மற்றும் சென்னையை சேர்ந்த பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடிய ‘அடி பெண்ணே’ பாடல்களைக் கூறலாம். 

நெசமாகுறேன் பாடலில் இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமாரின் மனைவி சைந்தவியுடன் இணைந்திருந்தார். பெரிய தமிழ் நடிகர்களுக்கு இணையான வெற்றியைப் பெற வேண்டும் என்பதே ஸ்டெபனின் கனவு.

ஹாலிவுட்டில் பெரிய நடிகரான டாம் குரூஸுக்கும் சிங்கரான ஜஸ்டின் பெய்பருக்கும் இணையான ரசிகர்பட்டாளம் இருப்பது போல தனிட்ராக்கில் பயணிக்கும் தனக்கும் இந்த உலகில் வெற்றி கிடைக்கும் என நம்பிகிறார் ஸ்டெபன். 

Stephen Zechariah
பிரேம் குமார்: 12 வயதில் வேலைக்கு சென்ற சிறுவன் - சினிமா ஆசையால் கோடீஸ்வரரானது எப்படி?

அவரது சிறந்த பாடல்கள் சில,

Stephen Zechariah
Vaisagh : Rant முதல் துணிவு வரை - இந்த 2கே கிட்ஸ் 'மனதின் குரல்' யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com