Ambedkar : பெண்கள், தொழிலாளர்களுக்கான அம்பேத்கர்! - நீங்கள் அறியாத 10 குறிப்புகள் Twitter
இந்தியா

B R Ambedkar : பெண்கள், தொழிலாளர்களுக்கான அம்பேத்கர்! - நீங்கள் அறியாத 10 குறிப்புகள்

Antony Ajay R

இந்திய அரசியலில் ஒரு நபரை எவ்வளவு பாராட்டிப் பேசினாலும் மிகையாகாது, ஒருவரை எத்தனைக் கொண்டாடினாலும் போதாது என்று கூறும்படியான ஒரு தலைவர் இருந்தார் என்றால் அது அம்பேத்கர் மட்டுமே!

அரசியல் அமைப்பை உருவாக்கியவர் என்ற வகையில் மட்டுமே அம்பேத்கரை பெரும்பாலனவர்கள் அறிந்து வைத்திருக்கிறோம்.

பொருளாதார நிபுணரும், கல்வியாளருமான அம்பேத்கரின் பல முகங்களை நாம் நிச்சயமாக தெரிந்துவைக்கொள்ள வேண்டும்.

சமூகத்தில் இருந்து பாகுபாடுகளை நீக்கவும், சமூகத்தை சீரழிக்கும் களைகளை அகற்றவும் மனிதர் அனைவரையும் சமமென உணரவைக்கவும் அயராது உழைத்தார் அம்பேத்கர்.

ஏப்ரல் 14, 1891 இல், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோவில் பெற்றோர்களான ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் முர்பத்கர் சக்பால் ஆகியோருக்கு பிறந்தார் அம்பேத்கர்.

அம்பேத்கர் எளிமையான பின்புலத்திலிருந்து வந்தவர், ஆனால் அவர் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக மாறினார். அவரது பிறந்தாளில் அம்பேத்கர் குறித்து அதிகமாக நமக்கு தெரிந்திடாத 10 விஷயங்களைப் பார்க்கலாம். இவை அம்பேத்கரைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

அம்பேத்கரின் முதல் பெயர் அம்பாவடேக்கர்

அம்பேத்கரின் பூர்வீக கிரமமான அம்பாவாடே எனும் இடத்தினைக் குறிப்பாக கொண்ட அம்பாவடேக்கர் என்பதே அம்பேத்கரின் பெயராக இருந்தது. அவரது ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர் என்பவரின் பெயரைக் குறிப்பிடும்படியாக அம்பேத்கர் என மாற்றப்பட்டது.

அம்பேத்கர்

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்

இந்தியாவின் முதல் பொருளாதார முனைவர் பட்டம்

பெற்றவர் மட்டுமல்ல, தெற்கு ஆசியாவில் இரட்டை முனைவர் பட்டம் பெற்ற முதல் நபரும் அம்பேத்கர் தான்.

அவரது காலத்தில் இந்தியாவிலேயே அதிகம் படித்த நபராக திகழ்ந்தார் அம்பேத்கர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த 3 ஆண்டுகளில் அம்பேத்கர் பொருளாதாரத்தில் 29 பட்ட படிப்புகளும், வரலாற்றில் 11 பட்ட படிப்புகளும், சமூக அறிவியலில் 9 பட்ட படிப்புகளும், தத்துவத்தில் 5 பட்ட படிப்புகளும், 4 பட்ட மானுடவியல் படிப்புகளும், 3 பட்ட அரசியல் படிப்புகளும், ஒரு ஜெர்மன் மற்றும் ஒரு பிரஞ்சு பட்ட படிப்பும் முடித்தார்.

1935 - ரிசர் வங்கி உருவாக்கத்தில் அம்பேத்கரின் பங்கு

அம்பேத்கர் ஹில்டன் யங் கமிஷனுக்கு (இந்திய நாணயம் மற்றும் நிதி தொடர்பான ராயல் கமிஷன் என்றும் அழைக்கப்படுகிறது) தனது புத்தகமான தி ப்ராப்ளம் ஆஃப் தி ரூபி - இட்ஸ் ஆரிஜின் அண்ட் இட் அட் சோல்யூஷன் என்ற புத்தகத்தில் (The Problem of the Rupee – Its Origin and Its Solution.) வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இந்திய ரிசர்வ் வங்கி கருத்துருவாக்கப்பட்டது.

அம்பேத்கர் ரூபாயில் இருக்கும் சிக்கல் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வீக்கத்துடன் தொடர்புடையது என்பதை அறிந்திருந்தார்.

Ambedkar

1927 மஹத் சத்தியாகிரகம், அம்பேத்கரின் முதல் முக்கிய போர்

அம்பேத்கரின் அரசியல் சிந்தனை மற்றும் செயல்பாட்டின் மிகச் சிறந்த உதாரணம் மஜத் சத்தியாகிரகம். இது காந்தியின் தண்டி யாத்திரைக்கு 3 ஆண்டுகளுக்கும் முன்பு நடத்தப்பட்டது.

மஹத்தில் உள்ள சதாவர் என்ற பொது ஏரியில் தண்ணீர் எடுக்க தலித் மக்களை முன்நடத்திச் சென்றார் அம்பேத்கர்.

அந்த தினத்தில் அம்பேத்கர் தலித் மக்களின் தண்ணீர் எடுக்கும் உரிமையை மட்டும் நிலைநாட்டவில்லை சமத்துவத்துக்கான விதையை விதைத்தார்.

அம்பேத்கர் அந்த சத்தியாகிரத்துக்கு செல்லும் போது இவ்வாறு பேசினார், "நாம் வெறுமனே சதாவர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக செல்லவில்லை. நாமும் மற்றவர்களைப் போன்றே மனிதர்கள் தான் என்பதை வலியுறுத்தச் செல்கின்றோம். சமத்துவ நெறியை அமைக்கவே நாம் இதனை மேற்கொள்கிறோம்" எனப் பேசினார்.

அம்பேத்கரின் சுயசரிதை கொலாம்பியா பல்கலைகழகத்தில் பாடப்புத்தகமாக இருந்தது!

1935-36ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு சென்று திரும்பிய அம்பேத்கர் எழுதிய புத்தகம் தான் "விசாவுக்காக காத்திருக்கிறேன்". இதில் சிறுவயது முதல் அம்பேத்கர் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எழுதியிருப்பார்.

இந்த புத்தகத்தை கொலாம்பியா பல்கலைக்கழகம் பாடபுத்தகமாக பயன்படுத்தியது.

அம்பேத்கர்

ஆர்டிகள் 370-ஐ எதிர்த்தார்

ஜம்மு காஷ்மிர் மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்துக் கொடுக்கும் சட்டதிருத்தத்தை ஏற்க மறுத்தார் அம்பேத்கர்.

அந்த சட்டம் பாகுபாடானது, நாட்டின் ஒற்றுமை கொள்கைகளுக்கு எதிரானது என அம்பேத்கர் கூறினார்.

இருந்த போதும் கோபால்ஸ்வாமி அய்யங்கார் என்பவர் ஆர்டிகள் 370-ஐ எழுதினார். இவர் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்குக்கு திவானாக இருந்தவர் என்பது குறுப்பிடத்தக்கது.

பெண்களுக்காக...

பெண்களுக்கான உரிமைகளை வழங்கும் இந்து கோட் மசோதாவை உருவாக்க 3 ஆண்டுகள் போராடினார்.

அம்பேத்கரின் விரிவான இந்து குறியீடு மசோதாவை இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்ற மறுத்தது. இதனால் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்துப் பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவது மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல் ஆகிய இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்து குறியீடு மசோதா ( Hindu Code Bill).

அம்பேத்கர், "நான் பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே சமூகத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன்" எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற தலைவர்களுடன் அம்பேத்கர்

பிகார், மத்திய பிரதேச பிரிவினை

பிகார் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களின் பிரிவினையை முதன்முதலாக முன்வைத்தவர் அம்பேத்கர்.

மொழிவாரி தேசியங்கள் பற்றிய சிந்தனைகள் (Thoughts on Linguistic States) என்ற புத்தகத்தில் மத்திய பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களைப் பிரிப்பது குறித்து எழுதியிருந்தார் அம்பேத்கர்.

2000ம் ஆண்டில் பிகாரில் இருந்து ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவானது. மத்தியபிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிந்தது.

நீர் மற்றும் மின்சாரம்

அம்பேத்கரின் முயற்சிகள் இந்தியாவின் நீர் மற்றும் மின்சாரத்திற்கான தேசியக் கொள்கையின் வளர்ச்சியில் முன்னோடியாக இருந்தன.

இந்தியாவில் பல்நோக்கு நதி பள்ளத்தாக்கு திட்டங்களின் முன்னோடியாக, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், பக்ரா நாங்கள் அணைத் திட்டம், சன் ஆறு பள்ளத்தாக்கு திட்டம் மற்றும் ஹிராகுந்த் அணைத்திட்டம் ஆகியவற்றை அம்பேத்கர் தொடங்கினார்.

மத்திய மற்றும் மாநில அளவில் நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த 'மத்திய நீர் ஆணையத்தை' தொடங்கினார்.

மத்திய தொழில்நுட்ப சக்தி வாரியம் (CTPB) மற்றும் மத்திய மின்சார ஆணையம் அம்பேத்கரால் தொடங்கப்பட்டது. மின்சாரத்துறையில் ஹைடல் மற்றும் அனல் மின் நிலையங்களின் சாத்தியக்கூறுகள் இதன் மூலம் ஆராயப்பட்டது.

மின்சாரத்துறையில் கிரிட் சிஸ்டம் அம்பேத்கரால் வலியுறுத்தப்பட்டது. இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.

மேலும் இந்தியாவில் திறன் மிக்க பொறியாளர்கள் தேவை என்பதை அன்றே முன்வைத்தார் அம்பேத்கர்.

வேலை நேரத்தை 14 மணிநேரத்தில் இருந்து 8 மணிநேரமாக மாற்றினார்

1942 முதல் 1946 வரை வைஸ்ராய் கவுன்சிலில் தொழிலாளர் உறுப்பினராக இருந்த டாக்டர் அம்பேத்கர் பல தொழிலாளர் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றினார். நவம்பர் 1942ல் புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் மாநாட்டின் 7வது அமர்வில் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணிநேரமாக மாற்றினார்.

மேலும் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும்படி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அகவிலைப்படி, பணியாளர் காப்பீடு, மருத்துவ விடுப்பு, சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதிய விகிதத்தில் அவ்வப்போது திருத்தம் என சொல்லுக்கொண்டே போகலாம்.

தொழிற்சங்கங்கள் வலிமையானவையாக உருவாக முயற்சிகளை மேற்கொண்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?