1990களுக்கு முன்பு வரை இந்தியா, உலகின் முக்கிய நாடுகளின் பட்டியலில் பெரும்பாலான இடங்களில் இருக்காது. ஆனால் இன்று நிலைமையே வேறு.
உலக அளவில் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது அல்லது ஒரு சேவை வடிவமைக்கப்படுகிறது என்றால், இந்தியர்களுக்கு இது எளிதாக இருக்குமா, இந்தியர்களுக்குத் தகுந்தார் போல கஸ்டமைஸ் செய்து கொடுக்க முடியுமா என்கிற அளவுக்கு நிறுவனங்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.
அதற்கு இந்திய நடுத்தர மக்கள் மற்றும் அவர்கள் கையில் இருக்கும் 'வாங்கும் திறன்' ஒரு முக்கிய காரணம். அது போக, கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிறந்த இளைஞர் படை, இன்று உலகம் முழுக்க எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தலைமைப் பதவிகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளது.
உலகின் டாப் பிரபல நிறுவனங்களை, இந்தியர்கள் முதன்மைச் செயல் அதிகாரிகளாக இருந்து வழிநடத்தத் தொடங்கியுள்ளனர். இக்கட்டுரையில் யார் எந்த நிறுவனத்தை வழிநடத்துகிறார்கள், அவர்கள் இந்தியாவில் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்ப்போம்.
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட லீனா, மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜார்கண்டில் தன் முதுகலை வணிக மேலாண்மைப் படிப்பை நிறைவு செய்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுக் காலம் யுனிலிவர் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 2021ஆம் ஆண்டு 'சேனல்' என்கிற லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 110 ஆண்டு பாரம்பரிய சொகுசு ஆடை அலங்கார பொருட்கள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். சேனல் நிறுவன வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதன்மைச் செயல் அதிகாரி பதவியை எட்டிப் பிடித்தவர் லீனாதான். புதிய உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள் மேடம்.
ட்விட்டர் நிறுவனத்துக்கு அறிமுகம் தேவை இல்லை. உலக அளவில் அரசியல் களத்தையே மாற்றியமைக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்த சமூக வலைத்தளத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கடந்த டிசம்பர் 2021-ல் பொறுப்பேற்றுக் கொண்டார் பராக். அப்போது அவருக்கு 37 வயது தான். இவர் ஒரு மும்பைக்காரர். ஐஐடி பம்பாயில்தான் தனது இளங்கலைப் பொறியியலைப் படித்தார். மைக்ரோசாஃப்ட், யாஹூ, ஏ டி & டி லேப்ஸ் போன்ற நிறுவனங்களில் ஆய்வுத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர் 2011ஆம் ஆண்டு ட்விட்டரில் பணிக்குச் சேர்ந்தார்.
போட்டோஷாப்பைக் குறித்துத் தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது. அதன் தாய் நிறுவனம் தான் அடோப் இன்க். கலிஃபோர்னியாவைத் தலைமை இடமாகக் கொண்ட அடோப் நிறுவனத்துக்கு உலகம் முழுக்க சுமார் 1.2 கோடி பயனர்கள் இருக்கிறார்கள். அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார் ஷந்தனு. இவர் ஹைதராபாத்தில் பிறந்து, படித்து, வளர்ந்தவர். ஷந்தனு இந்தியாவை விட்டுச் சென்று சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும், இப்போதும் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அடோப் மென்பொருட்களை வழங்கி உதவி வருகிறார்.
சுந்தர் பிச்சை
சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சையைக் குறித்துக் கிட்டத்தட்ட அனைத்து தமிழர்களும் அறிவர். உலகையே ஆட்டுவிக்கும் அளவுக்கு வலிமை கொண்ட கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கடந்த 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். கரக்பூர் ஐஐடியில் தன் இளங்கலை பொறியியல் பட்டத்தைப் பெற்றவர், அதே கல்லூரியில் தன் காதல் மனைவியையும் கண்டு கொண்டார். இவருக்கு 2014ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைய ஒரு அழைப்பு விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எஸ் எஸ் டி டிஸ்க், டி ஆர் ஏ எம் டிஸ்க், ஃப்ளாஷ் மெமரி.... போன்றவற்றைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கான்பூரைச் சேர்ந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா. இவர் பிட்ஸ் பிளானியில் தன் இளங்கலைப் படிப்பை நிறைவு செய்தார். சாண்டிஸ்க் என்கிற ஹார்ட் டிஸ்க் மற்றும் பெண்டிரைவ் நிறுவனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அதன் நிறுவனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் நான்கு மிகப்பெரிய ஆலோசனை மற்றும் தணிக்கை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் சி ஏ எனப்படும் பட்டைய கணக்காளர் படிப்பைப் படிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், இந்த பிக் 4 நிறுவனத்தில் பணியாற்றுவது அவர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும். அதில் டிலாய்ட்டி நிறுவனமும் ஒன்று. 2015ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் முதன்மைச் செயலதிகாரியாக பணியாற்றி வருகிறார் புனித் ரன்ஜன். இவர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கைச் சேர்ந்தவர். ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை எட்டிப் பிடித்திருப்பது இதுவே முதல் முறை.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகக் கடந்த 2014 முதல் பணியாற்றி வரும் இவர், ஹைதராபாத்தில் பிறந்தவர். கர்நாடகாவின் மணிபால் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் பதவியேற்ற பிறகு மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரியில் பிறந்த இவர், ஐஐடி கான்பூரில் தன் இளங்கலை பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், பிறந்து புனேவில் தான். டெல்லியில் உள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரமும், ஐஐஎம் அகமதாபாத்தில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார் அஜய்பால் சிங். தொடக்கத்தில் நெஸ்ட்லே நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
ஒகே குபிட், டிண்டர் போன்ற 45க்கும் மேற்பட்ட டேட்டிங் செயலிகளை இயக்கும் சக்தி ஷர்ஸ்மிதா தூபே தான். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஜாம்ஷெட்பூரில் தான். ஐஐடி கரக்பூரில் சுந்தர் பிச்சையோடு படித்தவர். மேட்ச் என்கிற நிறுவனத்தில் பணியாற்றி, 2020ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ஆனார்.
டெட்டால் தயாரிக்கும் நிறுவனம் என்றால் நாம் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அதன் முதன்மைச் செயல் அதிகாரியாக கடந்த 2019 முதல் செயலாற்றி வருகிறார் லட்சுமன். இவர் புனேவைச் சேர்ந்தவர். பெப்ஸிகோ உட்பட பல உலக நிறுவனங்களில் பணியாற்றியவர். இவரால் ஆறு மொழிகளில் சரளமாகப் பேச முடியுமாம்.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ரேவதி அத்வைதி பிட்ஸ்பிளானியில் படித்தவர். பல நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தற்போது ஃப்ளெக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உபர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இடம் பிடித்திருக்கிறார். பிட்ஸ் பிளானியில் பெண்கள் மெக்கானிக்கல் பிரிவில் அதிகம் சேராத போது துணிந்து அத்துறையில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust