Indian Railways: 13 மணிநேர வேலை; கழிவறை கூட பிரச்னை - ரயில் ஓட்டுநர்களின் கஷ்டங்கள் என்ன?  Twitter
இந்தியா

Indian Railways: 13 மணிநேர வேலை; கழிவறை கூட பிரச்னை - ரயில் ஓட்டுநர்களின் கஷ்டங்கள் என்ன?

VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் பைலட்கள் விழித்திருப்பதை உறுதி செய்கிறது. இந்த டிவைசில் உள்ள பட்டனை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை அழுத்த வேண்டும். அழுத்தவில்லை என்றால்...

Antony Ajay R

உலகில் உள்ள ஒவ்வொரு தொழிலும் கடினமானது தான். ஆனால் எல்லா பணியாளர்களுக்கும் அவர்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. முக்கியமாக டிரைவர்கள்.

பஸ் ஓட்டுபவர் முதல் விமானி வரை எல்லாருக்கும் அவரவர்களுக்கான பணிச்சுமையும் பொறுப்புகளும் இருக்கும்.

குறிப்பாக, 100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயில் ஓட்டுநர்கள் அல்லது லோகோ பைலட்கள்.

8 மணி நேர வேலை என்ற உரிமையை பாதுகாக்க தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்ததைப் பார்த்தோம். ஆனால் பொதுவாகவே பல ரயில்வே ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்து வருகின்றனர்.

லோகோ பைலட்கள் இன்றைய சூழலில் 13 மணிநேரம் வரை வேலை செய்கின்றனர். வேலைக்குப் பிறகு 16 மணி நேரம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்புகின்றனர்.

ஒரு ரயில் சரியாக நாம் செல்லுமிடத்துக்கு அழைத்துச் செல்வதற்குள் லோகோ பைலட்டுகள் சந்திக்கும் சவால்கள் என்ன? ஒரு ரயில் எப்படி ஓடுகிறது என்பதைக் காணலாம்.

லோகொ பைலட்டுக்கு (LP) துணையாக இருக்கும் நபர் உதவி லோகோ பைலட் (ALP). இருவரும் இணைந்து தான் ரயிலை இயக்க வேண்டும். இருவருமே அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

லோகோ பைலட் ஒரு முறை சிகப்பு சிக்னலை மீறினாலே யாராவது ஒருவர் பணியைக் கூட இழக்க நேரிடலாம்.

ரயிலை இயக்குவதற்கான பொருட்செலவு மிகவும் அதிகம். ரயில் ஓடாமல் நின்றுகொண்டிருந்தாலே ஒரு மணி நேரத்துக்கு 25 லிட்டர் டீசல் வீணாகும். 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் வீணாகும்.

ஒரு ரயில் பிரேக் அடித்தால் அது நிற்க அதன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஆகும். கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர்.

13 மணி நேரம் வேலைப்பார்ப்பவர்களால் தூங்க முடியுமா? எனக் கேட்டால் நிச்சயமாக முடியும். ஆனால் ஒரே நேரத்தில் முடியாது.

அசந்தாலும் கூட அவர்களால் தூங்க முடியாது. VCD எனப்படும் விஜிலன்ஸ் கண்ட்ரோல் டிவைஸ் பைலட்கள் விழித்திருப்பதை உறுதி செய்கிறது.

இந்த டிவைசில் உள்ள பட்டனை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை அழுத்த வேண்டும். பிரேக் பிடிக்கும் போதும் வேகத்தைக் கூட்டும்போதும் அழுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த பட்டனை அழுத்தாமல் விட்டால் 8 வினாடிகளில் விளக்கு எரியும். அப்போதும் அழுத்தவில்லை என்றால் சத்தம் போடத் தொடங்கும். அப்போதும் அழுத்தவில்லை என்றால் ஆட்டோமடிக் பிரேக்கிங் சிஸ்டம் மூலம் வண்டி தானாகவே நின்றுவிடும்.

நவீன ரயில்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் டெட்மேன்'ஸ் லிவர் என்ற கம்பியை இழுத்து இழுத்து விட வேண்டும்.

ரயில் ஓட்டுநர்களுக்கு தனியாக கழிப்பறைகள் கிடையாது. அடுத்த ஸ்டேஷன் வரை அடக்கிக்கொள்ள வேண்டும். ஸ்டேஷனிலும் சிக்னல் விழுந்ததும் ரயிலை எடுக்க வேண்டும். பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் தான் ரயில் நிற்கும்.

ரயிலை சீராக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட வேண்டும். இதற்கிடையில் இஞ்சின் பிரச்னைகள், டிராக் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். டிராக்கில் யாரேனும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் ஹார்ன் அடிக்க வேண்டும்.

இத்தனை வேலைகளையும் சூடான எஞ்சினுக்கு அருகில் இருந்து செய்ய வேண்டும். அப்படியே இரவு நேரத்தில் வண்டியின் வேகத்தைப் பொறுத்து குளிரையும் தாங்க வேண்டும். அதற்காக வேகத்தை குறைக்கவோ கூட்டவோ கூடாது. ரயில்வே டைமிங்கை பேண வேண்டும்.

எப்போதாவது செயின் இழுத்து ரயில் நிற்கும். நடுக்காட்டில் நடுஇரவில் அப்படி நிற்கும் போது உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

சரியான நேரத்தில் ரயில் வந்து சேரவில்லை என்றால் விளக்கம் கொடுக்க வேண்டும். பயணிகள் ரயில் மட்டுமல்ல சரக்கு ரயில் ஓட்டுபவர்களுக்கும் எல்லாமும் பிரச்னைதான்.

16 முதல் 18 மணி நேரம் வண்டி ஓட்டும் போது சரியான சாப்பாடு கிடைக்காது. கழிவறை செல்ல நேரமிருக்காது. ஒரு நாளில் எத்தனை ரயில் நிலையத்தை கடந்து சென்றாலும் யாரும் சாப்பிட்டீங்களா? தூங்கினீங்களா? எனக் கேட்கப்போவது கிடையாது...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?