நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பேச்சு இன்று அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஒரு ஒன்றாம் வகுப்பு குழந்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டினார்.
அந்த கடிதத்தில், "என் பெயர் கிருத்தி துபே, ஆன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறேன், மோடி ஜீ நீங்கள் மிகப் பெரிய விலையேற்றத்தைச் செய்திருக்கிறீர்கள். என்னுடைய பென்சிலும் ரப்பரும் விலை உயர்ந்திருக்கிறது. மேகியின் விலை கூட உயர்ந்திருக்கிறது.
இப்போது நான் பென்சில் கேட்டால் என் அம்மா என்னை அடிக்கிறார். நான் என்ன செய்ய?" இந்த வரிகளைப் படித்துக்கொண்டிருந்தபோது பாஜகவினர் சத்தம் எழுப்ப அமலி எழுந்தது. அப்போது கனிமொழி,
"நீங்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சற்றுமுன் அமைச்சர் எழுந்து நீங்கள் பேசிய போது நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நாங்கள் பேசும் போது நீங்கள் அமைதியாக இருங்கள் என்று சொன்னீர்கள்... இப்போது அந்த வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை என்றால் எப்படி?" எனக் கேட்டார் கனிமொழியின் இந்த கவுன்டர் அட்டாக்குக்கு கைத்தட்டல்கள் வலுத்தது.
முன்னதாக, பாஜக ஆளாத மாநிலங்களில் கருப்புப்பணம் அதிகரித்திருக்கிறது என்ற பாஜக எம்.பியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசினார்.
"2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பைக் கொண்டு வந்து இதன் பிறகு கருப்புப் பணம் என்பதே இல்லாமல் போய்விடும் என்று கூறினார்கள். ஆனால் அந்த பணமதிப்பிழப்பினால் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கிறது. அப்போது பாஜக உடன் கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியில் பணமதிப்பிழப்பினால் சிறுகுறு தொழில்கள் 50000 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. எத்தனையோ மக்கள் வரிசையில் நின்று உயிரிழந்தனர். எத்தனையோ இன்னல்களை நாடு சந்தித்தது. இதையெல்லாம் நாங்கள் பொறுமையாகக் கடந்தது இவர்கள் கொடுத்த வாக்குறுதி என்னவென்றால் அதன் பிறகு கருப்புப் பணம் இருக்காது என்று. ஆனால் இப்போதும் கருப்புப்பணம் குறித்துப் பேசுபவர்கள், நாங்கள் ஏன் இவ்வளவு இழப்புகளையும் இன்னல்களையும் சந்தித்தோம் என்பதற்கு ஒரு விளக்கம் அளிக்க வேண்டும்" என்று பேசினார்.
"அடித்தட்டு மக்கள் அன்றாடம் அவதிப்படக் கூடிய நிலையை இந்த ஆட்சி உருவாக்கியுள்ளது" எனப் பேசியதுடன் பெட்ரோல் டீசல் விலைக்குறித்தும் பேசினார். உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு குறித்துப் பேசினார். சமையல் எரிவாயுவுக்கான மானியம் சரியாக வருவதில்லை என்றும் பேசினார்.
இந்தியாவில் ஏழ்மை அதிகரித்திருக்கிறது என்றும் அதே வேளையில் ஒரு தொழிலதிபர் மட்டும் உலகின் 4வது பணக்காரராக ஆகியிருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டினார் கனிமொழி.
அரசு கார்ப்பரேட்டுகளை மட்டும் வளர்த்துவிடுவதாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார் அவர்.
வேலை வாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசி தனது உரையை முடித்தார் கனிமொழி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust