மனிதன் 2.0 NS
அறிவியல்

மனிதன் 2.0 : அடுத்த சில லட்சம் ஆண்டுகளில் மனிதன் எப்படி இருப்பான்? - வாவ் தகவல்

சைபார்க் அளவுக்குப் போகாவிட்டாலும், தனது மொத்த மூளையையும் ஒரு மைக்ரோ சிப்புக்குள் பதிந்து வைத்து இறந்தபின்னும் உயிர்வாழ மனிதர்கள் முயற்சி செய்வார்கள். மரணம் பற்றிய புரிதல்களை இது மாற்றும். இதுவும் மனிதனின் பரிணாம வளர்ச்சியை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

NewsSense Editorial Team

10,000 பி.சி திரைப்படத்தை நினைவிருக்கிறதா? ஒவ்வொரு நிமிடமும் சுற்றியிருக்கும் சூழல் மற்றும் பெரு விலங்குகளுடன் ஒரு இனக்குழு போராடிக்கொண்டிருப்பதை அந்தப் படத்தில் காட்டியிருப்பார்கள். உருவான புதிதில் மனித இனத்தின் நிலை அதுவாகத்தான் இருந்தது.

ஆச்சரியம் என்னவென்றால், ஹோமோ சேப்பியன்ஸ் என்ற தனி இனமாக நாம் 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானோம். பூமியின் வயதோடு ஒப்பிட்டால் பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் என்பது கை சொடுக்கும் நேரம்தான், இந்தக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மனித இனம் தனது மொத்த சூழலையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் மனித இனத்தின் சராசரி உயரம் 10 சென்டிமீட்டர் அதிகரித்திருக்கிறது, பாலில் உள்ள லாக்டோஸ் என்ற பொருளை ஜீரணிப்பதற்கான ஆற்றல் நமக்கு வந்திருக்கிறது, மூளையின் செயல்திறன் அதிகரித்திருக்கிறது, பலவிதமான நோய்களுக்கான எதிர்பாற்றலைப் பெற்றிருக்கிறோம், தொழில்நுட்பத்தில் எக்கச்சக்கமான பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறோம்.

அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? பரிணாம வளர்ச்சி மிகவும் மெதுவாகத்தான் இருக்கும் என்பதால் இன்னும் சில லட்சம் ஆண்டுகளில் புதிய மனித இனம் உருவாகுமா?

இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினம். ஏனென்றால் குரங்கிலிருந்து பரிணமித்த நமது மூதாதையர்களைப் போல நாம் சூழலின் கட்டுப்பாட்டில் இல்லை. நாம்தான் சூழலைக் கட்டுப்படுத்துகிறோம். ஆகவே சுற்றுச்சூழல் மாறும்போது பரிணாம ரீதியாகப் புதிய தகவமைப்புகள் வரும் என்று நேர்க்கோட்டில் சொல்ல முடியாது. ஆனாலும் உலகத்தின் போக்கை கவனித்துவரும் அறிஞர்கள் சில கணிப்புகளை முன்வைக்கிறார்கள்:

  • காலநிலை மாற்றம் மனித இனத்துக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும், இதன் தீவிரத்தைப் பொறுத்து மனித இனம் வாழத் தகுதியான இடமே பெருமளவில் சுருங்கலாம். அந்த சூழலில் மனித இனம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அவற்றில் சில மாற்றங்கள் பரிணாம ரீதியானவையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

  • ரோபோகாப் (Robocop) போன்ற திரைப்படங்களில் காட்டியிருப்பதுபோல, எதிர்காலத்தில் இயந்திரத்துடன் தங்களைப் பிணைத்துக்கொள்ளும் ஹைப்ரிட் சைபார்க் மனிதர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. சிறப்பாகப் பார்க்க லேசர் கண்கள், சைபர்நெடிக் கைகள் என எல்லா உடல் பாகங்களையுமே மனிதர்கள் மேம்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். 

  • சைபார்க் அளவுக்குப் போகாவிட்டாலும், தனது மொத்த மூளையையும் ஒரு மைக்ரோ சிப்புக்குள் பதிந்து வைத்து இறந்தபின்னும் உயிர்வாழ மனிதர்கள் முயற்சி செய்வார்கள். மரணம் பற்றிய புரிதல்களை இது மாற்றும். இதுவும் மனிதனின் பரிணாம வளர்ச்சியை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

  • மனித இனத்தின் தலை அளவு கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாகக் குறைந்துவருகிறது - இது தொடர்ந்தால், எதிர்காலத்தில் இன்னும் சின்னத் தலையும் அதிகமான உயரமும் கொண்ட மனிதர்கள் தோன்றலாம். மூளையின் செயல்திறனும் காலப்போக்கில் அதிகரிக்கும்.

  • மரபணுப் பொறியியலில் நாம் பல பாய்ச்சல்களை நிகழ்த்துகிறோம். ஆகவே எதிர்காலத்தில் தான் என்னவாக மாறவேண்டும் என்பதைத் திட்டமிட்டு, மனித இனம் அதைப் போலவே தன்னை வடிவமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது! (இதைக் கணிக்கும்போதே விஞ்ஞானிகள் இந்த மரபணுப் பொறியியலில் உள்ள அறம்சார்ந்த பிரச்சனைகளைப் பற்றியும் எச்சரிக்கிறார்கள்)

  • இப்போது ட்விட்டரை ஒரு வாலிபால் போல தூக்கிப் போட்டு விளையாடிக்கொண்டிருக்கும் எலான் மஸ்க், உண்மையிலேயே தான் முன்பு சொன்னதுபோல மனிதர்களை விண்வெளியில் குடியேற்றினால் அது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய சூழலே பரிணாமத்துக்குக் காரணமாக அமையும். ஈர்ப்பு விசை குறைவான கிரகங்களில் நாம் வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டியிருக்கும். இதனால் நமது கால்-கைகளின் நீளம் அதிகரிக்கும், எடை இல்லாமல் லேசாக உணர்வோம். ஆக்சிஜன் குறைவாக இருக்கும் கிரகங்களில் வாழும் மனிதர்கள், செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமலேயே குறைவான ஆக்சிஜனையும் சுவாசிக்கும் ஆற்றல் கொண்டவர்களாகப் பரிணாம வளர்ச்சி அடையலாம்! குளிரான கிரகங்களில் வாழும் மனிதர்களுக்கு மீண்டும் உடல் முழுவதும் ரோமங்கள் வரவும் வாய்ப்பு உண்டு! நாம் எந்த கிரகத்தில் குடியேறப் போகிறோமோ அதைப் பொறுத்து நமக்குப் புதிய தகவமைப்புகள் வரலாம். வேற்று கிரகங்களின் சூழல் முற்றிலும் புதியது என்பதால் மனிதர்கள் அதற்காகத் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், அல்லது இது எதுவுமே நடக்காமல் இப்போது உள்ள மனிதர்கள் அப்படியே இருந்துகொண்டு தங்களால் செய்ய முடியாத எல்லாவற்றையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுத்தலாம்.

மனித இனம் 2.0

ஒருவேளை மனித இனம் 2.0  வந்தாலும் அதற்குக் குறைந்தது பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை ஆகும். அதுவரைக்கும் வயதானால் நரைக்கும் முடி, அதிகம் தேவையில்லாத ஒரு அப்பெண்டிக்ஸ் உறுப்பு, இரண்டு காலில் தொடர்ந்து நடப்பதால் மனித இனத்துக்கு வரும் முதுகு மற்றும் மூட்டுப் பிரச்சனைகள் என்று இதே பழைய மாடல் உடலுடன் நாட்களை ஓட்டவேண்டியதுதான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?