Mice
Mice Pexels
அறிவியல்

வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்

Antony Ajay R

பல்லி, கரப்பான் பூச்சிக்கு அடுத்தபடியாக நாம் பயப்படுவது வீட்டிலிருக்கும் எலிகளைப் பார்த்துத் தான். ஆனால் எலிகள் வெறும் வாழைப்பழத்துக்கு அச்சப்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது. அதுவும் ஆண் எலிகள் மட்டும்.


கனடாவிலுள்ள மெக்கில் பல்கலைகழகத்தில் இந்த முடிவுகள் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆண் எலிகள் கர்ப்பமான அல்லது பாலூட்டும் பெண் எலிகளை நெருங்கும் போது அவற்றில் மன அழுத்தம் தரக் கூடிய ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்து அவற்றுக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்த பயம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்த ஆய்வாளர்கள் பெண் எலியின் சிறுநீர் தான் காரணம் எனக் கண்டறிந்தனர். பெண் எலியின் சிறுநீரில் இருக்கும் n-pentyl acetate எனும் கலவை தான் ஆண் எலிகளை அச்சுறுத்துகிறது எனக் கூறப்படுகிறது. சரி இதற்கும் வாழைப்பழத்துக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்கள் தானே?

n-pentyl acetate எனும் இந்தக் கலவை தான் வாழைப்பழத்திற்கு அதன் நறுமணத்தை வழங்குகிறது. இந்த விஷயங்கள் ஆச்சரியமளிக்கும் விதமாகக் கண்டறியப்பட்டனவாம்.

Rat

வேறொரு ஆய்வுக்காக கர்ப்பமான எலிகளை பல்கலைக்கழக ஆய்வகத்தில் வைத்திருந்திருக்கின்றனர். அப்போது ஆண் எலிகள் அசௌகரியமான வெறுக்கத்தக்கச் செய்கைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. இதனை அங்கிருந்த பட்டதாரி மாணவர் ஒருவர் கவனித்து வந்திருக்கிறார். இதற்கான காரணத்தைத் தேடும் போது இவை விளங்கின என ஜெஃப்ரி மோகில் என்ற உளவியல் பேராசிரியர் கூறியுள்ளார்.

ஆண் எலிகள், குறிப்பாக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிடாத ஆண் எலிகள் (virgin Mice) தங்களது மரபணு தகுதியைக் காட்டுவதற்காகச் சிசுக் கொலையில் ஈடுபடுமாம். இதிலிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க எலிகளின் உடலில் வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இது ஆண் எலிகளை நெருங்க விடாமல் சமிக்ஞைகளை அனுப்புகின்றது.

இதனைக் கவனித்த ஆய்வாளர்கள் n-pentyl acetate மற்ற காரணிகளிலிருந்து வெளிவரும் போதும் எலிகள் அஞ்சுகின்றனவா என ஆராய்வதற்காக வாழைப்பழ எண்ணெய்யைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இப்படியாக இந்த முடிவு கண்டறியப்பட்டிருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?