இயக்குநர் கார்திகி கோன்சால்வேஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்துக்காக ஆஸ்கர் வென்று சாதனை படைத்திருக்கின்றனர்.
ஆஸ்கருடன் இந்தியா திரும்பியவர்கள் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்துள்ளனர்.
பொம்மன் மற்றும் பெள்ளி ஆஸ்கரை வைத்திருக்கும்படியாக கார்திகி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் இணையவாசிகளின் மனங்களை வென்றுள்ளது.
முன்னதாக கார்திகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தார்.
தமிழக முதல்வர் ஆவணப்பட இயக்குநருக்கு ரூபாய் 1 கோடி ஊக்கத்தொகை அளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் கார்திகி கோன்சால்வேஸ், "நாங்கள் பிரிந்து நீண்ட நான்கு மாதங்கள் கடந்துவிட்டன, இப்போது நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன்"
இந்த பதிவில் பல பிரபலங்களும் நெட்டிசங்களும் மனமுருகி கமண்ட் செய்துள்ளனர்.
சிறந்த குறு ஆவணப்படத்துக்காக ஆஸ்கர் வெல்லும் முதல் இந்தியப்படம் தி எலிபண்ட் விஸ்பரர்ஸ். இது முதுமலையில் அனாதையாக இருக்கும் யானைக்குட்டிகளை வளர்க்கும் தம்பதியைப் பற்றி பேசியது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படத்தை காண முடியும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust