9/11 : பாவப்பட்ட அமெரிக்க மக்களுக்கு பசுக்களை பரிசளித்த பழங்குடிமக்கள் - ஒரு சுவாரஸ்ய கதை!  representative image
உலகம்

9/11 : பாவப்பட்ட அமெரிக்க மக்களுக்கு பசுக்களை பரிசளித்த பழங்குடிமக்கள் - ஒரு சுவாரஸ்ய கதை!

இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு அமெரிக்கா உட்பட்டதை தாமதமாக தான் மசாய் பழங்குடி மக்கள் அறிந்துகொண்டனர். "பாவப்பட்ட அந்த மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்" என பழங்குடிமக்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

Antony Ajay R

9/11 தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் துன்பகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற அந்த தாக்குதலில் 90 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.

உலகத்துக்கே தலைப்புச் செய்தியாக மாறியது இரட்டைக் கோபுர தாக்குதல். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இதனை செய்தியில் பார்த்து தெரிந்துகொண்டனர்.

ஆனாலும் பல சிற்றூர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் இந்த விஷயம் தாமதமாகத்தான் போய் சேர்ந்தது. இதனால் நடைபெற்ற ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் "அமெரிக்காவுக்கு 14 பசுக்கள்!"

வில்சன் கிமேலி நயோமா என்ற கென்ய இளைஞர் 2001ம் ஆண்டு கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் படித்துவந்தார். இவர் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மசாய் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.

கிமேலி நியூயார்க் வந்த போதுதான் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஒருமாதம் கழித்து அவர் கென்யா சென்று தனது உறவினர்களுக்கு தெரிவித்த பிறகுதான் மசாய் பழங்குடி மக்களுக்கு விஷயமே தெரியவந்துள்ளது.

கிமேலி சொன்னதைக் கேட்ட அந்த பழங்குடி மக்களில் பெரியவர், "பாவப்பட்ட அந்த மக்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்" எனக் கேட்டுள்ளார்.

மசாய் பழங்குடி மக்கள் அமெரிக்கர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து மீண்டுவர ஊக்குவிக்கும் விதமாக பசுக்களை தானமாக அவர்களுக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.

மசாய் பழங்குடிமக்களைப் பொறுத்த வரையில் பசுக்கள் தான் அவர்களுக்கு வாழ்க்கையே! அவர்களின் ஊரில் எல்லாருமாக இணைந்து 14 பசுக்களை பரிசாக அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளனர்.

ஒரு சிறப்பு நிகழ்வில் அமெரிக்க தூதரிடம் பசுக்களை வழங்கினர். பசுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் வழிகளை மேற்கொண்டனர். ஆனால் அவற்றை கென்யாவிலேயே வைத்துப் பராமரிப்பதுதான் நல்லதாக இருக்கும் என முடிவு செய்தனர்.

இன்றும் அந்த பண்ணை நன்றாக செழித்து வருகிறது. மசாய் பழங்குடியினர் அமெரிக்க மக்களிடம் காட்டிய அன்பின் வெளிப்பாடாக கிமேலியும் அவரது நண்பரும் இணைந்து இரண்டு ஓவியங்களை வரைந்தனர்.

இந்த ஓவியங்களில் ஒன்று அமெரிக்காவில் உள்ள 9/11 மியூசியத்தில் உள்ளது. மற்றொன்று கென்யாவில் இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு 14 பசுக்கள் (14 Cows to America) என்ற குழந்தைகளுக்கான புத்தகம் உருவாக்கப்பட்டது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?