வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா? Twitter
உலகம்

வெனிஸ் முதல் மெக்சிகோ வரை : விரைவில் கடலில் மூழ்கப்போகும் அழகிய நகரங்கள் - ஏன் தெரியுமா?

2018ம் ஆண்டு வெளியான வெனிசிலின்ஸ் அறிக்கையின்படி, அட்ரியாடிக் ராணி என அழைக்கப்படும் வெனிஸ் நகரம் இன்னும் 20 ஆண்டுகளில் மூழ்கிவிடும் அபாயம் இருக்கிறது.

Antony Ajay R

காலநிலை மாற்றம் இன்றைய காலக்கட்டத்தில் நாம் சந்தித்துவரும் மிக முக்கியப் பிரச்னையாகும். இதன் விளைவாக பனிக்கட்டி உருகுதல், கடல் மட்டம் அதிகரிப்பு, தொடர்ச்சியான வெள்ளம், புயல் மற்றும் பல இயற்கை பேரிடர்களை மனிதர்கள் சந்திக்க நேரிடுகிறது.

கடல் மட்ட அதிகரிப்பினால் இன்னும் சில தசாப்தங்களில் உலகின் பல அழகிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் 6 நகரங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

ஜாகர்த்தா, இந்தோனேசியா

2018ம் ஆண்டு பிபிசி கொடுத்த அறிக்கையின் படி விரைவாக கடலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது இந்தோனேசியாவின் தலைநகரம்.

வடக்கு ஜாகர்த்தா கடந்த 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் வரை தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 25 சென்டிமீட்டர் மேலும் நீருக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது ஜாகர்த்தா.

மேலும் ஜாகர்த்தாவில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதனாலும் மக்கள் தொடர்ந்து பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மியாமி பீச், ஃப்ளோரிடா

உலகின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றான மியாமியும் கூட ஆபத்தில் இருக்கிறது. மியாமி நகரம் கடல்மட்டத்தில் இருந்து 3 அடிக்கும் கொஞ்சமே உயரமாக அமைந்திருக்கிறது.

கடல் மட்டமானது இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் 3 அடி உயரத்தை எட்டிவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில தகவல்கள் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதனால் விரைவாக கடல்மட்டம் 6 அடிவரை உயர வாய்ப்பிருப்பதாக கூறுகின்றன.

மியாமி பீச் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியிருக்கும் ஃப்ளோரிடாவின் பிற பகுதிகளும் பாதிக்கப்படலாம் எனவும் கணித்திருக்கின்றனர்.

வெனிஸ், இத்தாலி

2018ம் ஆண்டு வெளியான வெனிசிலின்ஸ் அறிக்கையின்படி, அட்ரியாடிக் ராணி என அழைக்கப்படும் வெனிஸ் நகரம் ஏற்கெனவே மில்லிமீட்டர் கணக்கில் மூழ்கத் தொடங்கிவிட்டது.

இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் வெனிஸ் நகரம் நெருக்கடியை சந்திக்கும். சுற்றியுள்ள தீவுகளிலும் இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும்.

Mexico City

மெக்சிகோ சிட்டி

மெக்ஸி நகரில் மக்கள் நிலத்தடி நீரையும் நீர் நிலைகளையும் முழுவதுமாக காலி செய்வதனால், நிலமானது மூழ்குவதற்கு அதிக வாய்புகள் இருக்கின்றன.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை 30 அடிவரை மெக்சிகோ நகரம் மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

நகரின் பல அழகிய கட்டடங்கள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருக்கின்றன.

நியூ ஓர்லியன்ஸ், லூசியானா

மிசிசிபி நதி நகரம் ஏற்கெனவே பாதி கடலில் மூழ்கிவிட்டது. கணிப்புகள் சரியாக இருந்தால் 2050ம் ஆண்டு அந்த நகரம் இருக்காது.

நியூ ஓர்லியன்ஸ் நகரின் சில பகுதிகள் ஆண்டுக்கு 2 இன்ச் வரை உயரம் குறைவதாக நாசா கூறியுள்ளது.

இந்த கொண்டாட்டமான நகரமும் முடிவுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Lagos, Nigeria

லாகோஸ். நைஜீரியா

ஆப்ரிக்காவில் உள்ள அதிக மக்கள் தொகைக்கொண்ட ஊரான லாகோஸ் தொடர்ந்து மூழ்கிவருவதைக் கண்டறிந்துள்ளனர்.

கடல் 3 அடி முதல் 9 அடி வரை உயரமாக எழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?