Doomsday: வருடம் ஒருமுறை மட்டுமே நகரும் கடிகாரம் - உலக அழிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு? Twitter
உலகம்

Doomsday: வருடம் ஒருமுறை மட்டுமே நகரும் கடிகாரம் - உலக அழிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

உலகம் அழியும் போது இந்த கடிகாரம் 12 மணியைத் தொடும். உலக அழிவு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் காட்டுவதே இந்த கடிகாரத்தின் பணி. உலக அழிவில் இருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? என்னென்ன காரணிகள் இந்த கடிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன? என்பதைப் பார்க்கலாம்.

NewsSense Editorial Team

டூம்ஸ் டே கடிகாரம் ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே நகர்த்தப்படுகிறது. இதனை நகர்த்தும் பணியை பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.

உலகம் அழியும் போது இந்த கடிகாரம் 12 மணியைத் தொடும். உலக அழிவு எவ்வளவு அருகில் இருக்கிறது என்பதைக் காட்டுவதே இந்த கடிகாரத்தின் பணி.

இப்போது இந்த கடிகாரம் எத்தனை மணியைக் காட்டுகிறது? உலக அழிவில் இருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? என்னென்ன காரணிகள் இந்த கடிகாரத்தைக் கட்டுப்படுத்துகின்றன? வாருங்கள் பார்ப்போம்.

டும்ஸ் டே கடிகாரம்

இந்த பூமி, அழிவுக்கு எத்தனை அருகில் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு குறியீட்டுக் கடிகாரம்தான் டூம்ஸ் டே கடிகாரம். எப்போது இந்த கடிகாரத்தில் மணி 12 ஆகிறதோ, அப்போது உலகம் அழிவதாகப் பொருள்.

பூகோள அரசியல் பிரச்சனைகள், ஆயுதங்களினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், அதீத தொழில்நுட்ப வளர்ச்சி, காலநிலை மாற்றம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று… போன்ற பல்வேறு காரணங்கள் இந்த அழிவுக்கு வித்திடலாம்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஏற்படும் உலக நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு பல விஞ்ஞானிகள் பல்வேறு மதிப்பீடுகளைச் செய்து, இந்தக் கடிகாரத்தை அவ்வப்போது மாற்றியமைப்பர். இந்த மதிப்பீடுகளைப் பொறுத்து, கடிகாரத்தின் முள்ளை 12 மணிக்கு நெருக்கமாக அல்லது தொலைவாக வைக்கலாம்.

இந்தப் பணியை அமெரிக்க நாட்டில், சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த லாப நோக்கற்ற புல்லட் இன் ஆஃப் தி அடாமிக் சையின்டிஸ்ட்ஸ் (The Bulletin of the Atomic Scientists ) என்கிற அமைப்பு மேற்கொள்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தக் கடிகாரத்தை மாற்றியமைக்கிறார்கள்.

யார் எல்லாம் இந்தக் குழுவில் இருக்கிறார்கள்?

பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், அணுசக்தி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள், காலநிலை மாற்ற விவகாரங்களில் ஆழ்ந்த அறிவு கொண்டவர்கள்… இந்த கடிகாரத்தை மாற்றி அமைக்கும் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் நோபல் பரிசு பெற்ற 13 பேர் இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு உலக நிகழ்வுகள், அச்சுறுத்தல்கள், பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து கடிகாரத்தின் முள்ளை எங்கு நிலை நிறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இந்த கடிகாரம் கிட்டத்தட்ட ஏழு தசாப்த காலங்களுக்கு முன் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் கடிகாரத்தை உருவாக்கிய குழுவில், உலகில் ஆகச்சிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டினும் இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மேன்ஹட்டன் ப்ராஜெக்ட் என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் அணு ஆயுத திட்டத்திலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பணியாற்றினார் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.

Russia - Ukrain war

இப்போது கடிகாரத்தில் மணி என்ன?

12 மணி ஆக இன்னும் 90 வினாடிகளில் இருக்கின்றன. டும்ஸ் டே கடிகாரம் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போதுதான் 12 மணிக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது உலகம் அழிவுக்கு மிக அருகில் இருக்கிறது என்ரு பொருள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு 12 மணி ஆக 100 வினாடிகள் இருப்பதாக கடிகாரம் மாற்றியமைக்கப்பட்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் அது உலக அழிவுக்கு வழி வகுக்கலாம் என்கிற அச்சம் நிலவுவது இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Russia - Ukrain war

கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு 12 மணியாக ஏழு நிமிடங்கள் இருப்பதாக இந்த கடிகாரம் செயல்படத் தொடங்கியது.

1991 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கு இடையிலான பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்த போது, 12 மணி ஆக 17 நிமிடங்கள் இருப்பதாக இந்த கடிகாரம் மாற்றியமைக்கப்பட்டது.

அதுதான் கடிகார வரலாற்றிலேயே 12 மணியில் இருந்து நிமிட முள், தொலைதூரத்தில் வைக்கப்பட்ட காலகட்டம். அதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஸ்ட்ராட்டஜிக் ஆம்ஸ் ரிடக்‌ஷன் ட்ரீட்டி என்கிற ஆயுதங்களை குறைக்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?