செலென்ஸ்கி  Facebook
உலகம்

குறையும் ரஷ்யாவின் ஆயுத பலம், மீண்டும் வலுபெறும் உக்ரைன்- என்ன சொல்கிறார் செலென்ஸ்கி ?

விளாதிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய தரப்பு, உக்ரைன் போரில் தொடக்கத்திலிருந்தே எந்த ஒரு இலக்கையும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. அதே போல மேலே குறிப்பிட்ட விஷயங்களில் எதையும் முழுமையாக சாதிக்கவும் இல்லை.

Gautham

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மத்தியிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது, தீவிரமடைந்து தான் வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும், யார் போரில் வெற்றி பெறுவார்... என்கிற பல கேள்விகளுக்கு இன்று வரை எந்த ஒரு உலக நாடுகளிடமோ அல்லது உலக அமைப்புகளிடமோ விடை இல்லை.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடந்து வரும் போரில் உலக நாடுகளின் ஆயுத உதவிகளோடு உக்ரைன் ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது. நீண்டு கொண்டே போகும் இந்த போரில் ரஷ்ய தரப்புக்கு இதுவரை குறிப்பிடும் படியான பெரிய வெற்றிகள் ஏதும் கிடைக்கவில்லை.

உக்ரைனின் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) பதவியிலிருந்து நீக்குவது, கைவ் நகரத்தைக் கைப்பற்றுவது, மேற்கில் ஒரு ஒற்றுமையின்மையை விதைப்பது போன்றவை ரஷ்யாவின் குறிக்கோள்களாக இருந்து வருகின்றன. 

பின்னடைவில் ரஷ்யா

தொடக்கத்தில் ரஷ்யா தன் ஆயுதங்களைக் கொண்டு அதிவிரைவாக முன்னேறி வந்தாலும் 2022 ஏப்ரல் மாத காலகட்டத்திலேயே உக்ரைன் தன் தலைநகரான கைவில் இருந்து ரஷ்யாவை விரட்டி அடித்தது. அதன் பிறகு போரில் எந்த தரப்புக்கும் உடனடியாக பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை அல்லது இரு தரப்பும் சரிசமமாக மோதிக் கொண்டன.

விளாதிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய தரப்பு, உக்ரைன் போரில் தொடக்கத்திலிருந்தே எந்த ஒரு இலக்கையும் முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. அதே போல மேலே குறிப்பிட்ட விஷயங்களில் எதையும் முழுமையாக சாதிக்கவும் இல்லை. அதற்கு மாறாக சமீபத்தில் முன்னாள் எம் ஐ 6 உளவு அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோர் கூறியது போல ரஷ்யா பின்னடைவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

எம் ஐ 6ன் கணிப்பு

சமீபத்தில் பிரிட்டன் நாட்டின் எம் ஐ 6 உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ரிச்சர்ட் மோர் ஒரு கருத்தைக் கூறி, சர்வதேச அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியது இங்கு நினைவுகூரத்தக்கது.  சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள காலராடோ நகரத்தில் நடைபெற்ற ஆஸ்பென் பாதுகாப்பு சம்மேளனத்தில் பேசினார் ரிச்சர்ட் மோர்.

உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவால் தொடர்ந்து இந்த ராணுவ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. உக்ரைன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறி இருந்தார். மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஒரு சிறு வெற்றியை மட்டுமே கண்டிருக்கிறது, அதோடு ரஷ்யாவின் ஆயுத பலம் தீரும் தருவாயில் இருக்கிறது.

எங்கள் மதிப்பீட்டின் படி அடுத்த சில வாரங்களுக்குள், ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்த போதுமான ஆயுதங்கள் மற்றும் ஆட்களின்றி தடுமாறுதலாம், அதே போல, ஏதோ ஒரு வகையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும், அது உக்ரைன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பைக் கொடுக்கும் என்றும் கூறியிருந்தார். ரிச்சர்ட் மோர் கூறியது போலவே தற்போது ரஷ்யாவின் கை தாழ்ந்து கொண்டும், உக்ரைனின் கை ஓங்கியும் வருகிறது.

சமீபத்தைய உக்ரைன் முன்னேற்றங்கள் என்ன?

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா கைப்பற்றி வைத்திருந்த குபியான்ஸ்க் (Kupiansk) பகுதியை உக்ரைன் படைகள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளதாக பிபிசியில் செய்திகள் வெளியாயின. இப்பகுதி ரஷ்ய படைகளுக்குத் தேவையான பல முக்கிய பொருட்கள் விநியோகத்துக்கு பயன்பட்டு வந்தன. 

அதே போல உக்ரைன் தரப்புப் படைகள், சனிக்கிழமை அன்றே கார்கிவ் மாகாணத்தில் உள்ள இஸ்யும் (Izyum) பகுதியை கைப்பற்றிவிட்டதாக மற்றொரு முக்கிய சர்வதேச ஊடகமான அல் ஜெசிரா கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ரஷ்யா சுமார் 6 வாரங்கள் போரிட்டு இப்பகுதியைக் கைப்பற்றினர் என்கிறது அல் ஜெசிரா, ஆனால் உக்ரைன் சுமார் 12 - 24 மணி நேரத்துக்குள் இஸ்யும் பகுதியை கைப்பற்றிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

இஸ்யும் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறும் போது அதனுடைய ஆயுதங்கள் மற்றும் பல போர் சாதனங்களையும் அப்படியே விட்டு வெளியேறியுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உக்ரைன் அதைப் பயன்படுத்தி நிச்சயம் தீபாவளி கொண்டாடும். இஸ்யும் பகுதியில் ரஷ்ய துருப்புகள் தோற்றது மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

"தேவையான ஆயுதம் வழங்கினால், வெற்றி எங்களுக்கே" - செலென்ஸ்கி

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் முன்னேறி வரும் செலென்ஸ்கியின் படைகள், தெற்குப் பகுதியில் ரஷ்யாவோடு கடுமையாக மோதிக் கொண்டிருக்கிறது. ரஷ்ய தரப்பு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தாக்குதல் பாணியை மாற்றியுள்ளதாக பிபிசியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதே கார்கிவ் மாகாணத்தில் வசிலென்கொவோ மற்றும் அர்டெமிவ்கா போன்ற பகுதிகளையும் உக்ரைன் ராணுவம் கைப்பற்றிவிட்டதாக உக்ரைன் அதிபர் வொலொடிமிர் செலென்ஸ்கி தன் உரையில் குறிப்பிட்டார். இந்த மாத தொடக்கத்திலிருந்து, ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை சுமார் 2,000 சதுர கிலோமீட்டர் நிலபரப்பு ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்டு இருப்பதாகவும் தன் உரையில் கூறினார் செலென்ஸ்கி.

"எங்களுக்கு அதிக ஆயுதங்கள் வழங்கப்பட்டால், இந்த போரை நாங்கள் வெகு விரைவாக வெல்வோம், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும்" என உக்ரைன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமைட்ரோ குலெபா (Dmytro Kuleba) ஊடகங்களிடமே கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?