மதுரை முதல் நியூ யார்க் வரை: உலகில் உள்ளா 'தூங்கா நகரங்கள்' பற்றி தெரியுமா? Twitter
உலகம்

மதுரை முதல் நியூ யார்க் வரை: உலகில் உள்ள 'தூங்கா நகரங்கள்' பற்றி தெரியுமா?

City That Never Sleeps என அழைக்கப்படும் நகரங்கள் குறித்தும் இரவை எப்படி இந்த நகரங்கள் கொண்டாட்டமானதாக மாற்றுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

Antony Ajay R

இரவு தூங்குவதற்காக என உலகம் முழுவதும் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சில நகரங்கள் அதிலிருந்து விலகி தனித்தன்மையுடன் இருக்கின்றன.

இந்த ஊர்களைப் பொறுத்தவரையில் இரவு என்பது அடுத்த நாளுக்கு தயாராவதற்கான நேரம், தொடர்ந்து உழைப்பதற்கான நேரம், பார்டிகளுக்கான நேரம்.

தூங்கா நகரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது மதுரை தான். இரவில் கூட சுடசுட கறிதோசையும் பன் பரோட்டாவும் கிடைக்கும். மனிதர்கள் மதுரைக்கு வந்து செல்வதற்கு நேரங்காலமே கிடையாது.

மதுரை மட்டுமல்லாமல் உலகில் பல தூங்கா நகரங்கள் இருக்கின்றன. City That Never Sleeps என அழைக்கப்படும் நகரங்கள் குறித்துப் பார்க்கலாம்.

நியூ யார்க்

செயற்கை கோள் வழியாக இரவு உலகத்தைப் பார்வையிட்டால் மிகவும் பிரகாசமான நகரமாக தெரிவது நியூ யார்க்காக தான் இருக்கும்.

இங்கு விளக்குகள் அணைக்கப்படுவதே இல்லை. நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ்களில் வருவது போல பார்டிகளும், பார்களும், தியேட்டர்களும் நிறைந்த நகரமாக இருக்கும் நியூ யார்க்.

வாஷிங்டன் டி.சிக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட நகரமாக இருந்தாலும் அமெரிக்காவின் கலாச்சார மற்றும் வணிக தலைநகரமாக நியூ யார்ர்க் திகழ்கிறது.

பாரிஸ்

இரவில் பரபரப்பாக இருக்கும் ஐரோப்பிய நகரம் பாரிஸ். சூரிய மறைவை இங்குள்ள கடைகள், உணவகங்கள் பொருட்படுத்துவதில்லை.

சூரியன் சென்றாலும் ஈஃபிள் கோபுரம் இரவில் ஒளிர்ந்துகொண்டு இருக்கும்.

கெய்ரோ (Cairo)

உலகமே தூங்க செல்லும் போது கெய்ரோ மக்கள் டீயும் பப்ஸும் சாப்பிட வெளியில் செல்வார்கள். எகிப்து நாட்டின் தலைநகரும் ஒரு தூங்கா நகரம் தான்.

நைல் நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரம் பல பிரமிடுகளுடன் அட்டகாசமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கும். இரவில் இந்த நகரில் சுற்றித் திரிவது நம்மை காலப்பயணம் செய்ய வைத்து பழங்காலத்துக்கு அழைத்துச் சென்றதைப்போல உணர வைக்கும்.

டெல் அவிவ்

இஸ்ரேல் தலைநகர் உருவானது முதலே வளர்ந்துவரும் நகரமாக இருக்கிறது. புதிய புதிய மாற்றங்களை தினமும் சந்திக்கும் நகரம் எப்படி உறங்கும்?

இரவு வாழ்க்கையை இனிமையாக்க இங்கு உணவங்கள், கஃபேக்களுடன் கலைக்கூடம், அருங்காட்சியகம், தியேட்டர்கள் இருக்கின்றன.

மரகேச்

மொராக்கோவின் தலைநகர் இது. இந்த நகருக்கு சென்றீர்கள் என்றால் இரவு முழுவதும் சுடசுட சாப்பிட பல வகையான உணவு விடுதிகள் திறந்திருக்கும்.

நடு இரவு வரை பார்கள் திறந்திருப்பதைப் பார்க்கலாம்.

பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires)

இரவில் கண்ணுறங்காத இந்த நகரம் எத்தனை இரவுகள் நாம் தங்கினாலும் சலிக்காதது.

லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் தலைநகர் இது. இரவில் இசை விருந்துகளும் நடன நிகழ்ச்சிகளும் என களைகட்டும் இந்த நகரம். இரவு முழுவதும் பார்டியில் திழைத்திருக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் இந்த நகரில் ஒரு நண்பரை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்.

Buenos Aires

ஹாங்காங்

"Once the Sun sets, The City Wakes Up" என்ற வாக்கியம் ஹாங்காங்கை எளிமையாக விளக்கும். உள்ளூர் மக்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி ஹாங்காங்கில் விரும்புவது இரவு வாழ்க்கையைத்தான்.

மும்பை

மும்பை பற்றி நாம் நன்றாகவே அறிந்திருக்கிறோம். இந்தியாவின் வணிக தலைநகராக இருக்கும் ஊர் இது. பார்களும் நைட் கிளப்களும் சீக்கிரமாக மூடிவிட்டாலும் இரவைக் கழிக்க எண்ணற்ற வழிகளைக் கொண்டிருக்கிறது மும்பை நகரம்.

பணக்காரர்கள் மட்டுமல்லாமல் குறைந்த செலவிலும் இங்கு கொண்டாட்டமாக இரவைக் கழிக்கலாம்.

மாட்ரிட்

எஸ்பானிய தலைநகரான மாட்ரிட்டில், "இரவைக் கொல்லாமல் யாரும் உறங்க செல்வதில்லை" என புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெம்மிங்வே கூறியிருக்கிறார்.

வளர்ந்த ஸ்பானிஷ் நகரமான மாட்ரிட்டில் இரவை மிகச் சரியாக கழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாலை 3 மணிக்கு கூட இங்கு ட்ராஃபிக் ஜாம் இருக்கும்.

பார்ட்டி என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த நகரம் மாட்ரிட் தான்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?