மதுரை  :  உலகளவில் பழமையான நகரங்கள் பட்டியலில் ஒரு தமிழ் நகரம் - வாவ் செய்தி
மதுரை : உலகளவில் பழமையான நகரங்கள் பட்டியலில் ஒரு தமிழ் நகரம் - வாவ் செய்தி Twitter
உலகம்

மதுரை : உலகளவில் பழமையான நகரங்கள் பட்டியலில் ஒரு தமிழ் நகரம் - வாவ் செய்தி

Antony Ajay R

பழமையான இடங்களைப் பார்க்கும் போது படிக்கும் போதும் அவை நம் சிந்தனையை வேர்களை நோக்கித்தள்ளுவதை உணர முடியும்.

நம் முன்னோர்கள் மூதாதையர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே மிகுதியாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

யார் மூத்த வம்சத்தினர் என்று சண்டை போடுவது மட்டுமே வரலாறு இல்லை. மனித நாகரீகத்தின் வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்ளும் போது தான் நம்மால் வருங்காலத்தையும் தொலைநோக்கு பார்வையுடன் அணுக முடியும்.

எனவே வரலாறு முக்கியம் அமைச்சரே... உலக வரலாற்றில் மிகவும் பழமையான நகரங்களாக அறியப்படும் சில நகரங்கள் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.

ஜெரிக்கோ (Jericho)

பாலஸ்தீனத்தில் ஜோர்தான் பாள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த நகரம்.

இதன் மேற்கு பக்கத்தில் ஜெருசலேமும் கிழக்கு பக்கத்தில் ஜோர்தான் நதியும் உள்ளது.

இந்த நகரில் இப்போது 25,000 மக்கள் வசிக்கின்றனர்.

1967ம் ஆண்டு இங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியிறுப்புகள் இருந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளன.

டமாஸ்கஸ் (Damascus)

ஆய்வாளர்களால் உலகின் மிக பழமையான நகரமாக பார்க்கப்படும் டமாஸ்கள் சிரியா நாட்டில் உள்ளது.

இந்த நகரம் அரபு கலாச்சாரத்தின் தலைநகரமாகவும் கருதப்படுகிறது.

இந்த நகரத்தை அடைவதும் பல மன்னர்களுக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கனவாக இருந்தது.

இங்கு ஆரேமியர்கள் என அழைக்கப்படும் (Arameans) மக்கள் வசித்து வந்தனர்.

பின்னர் இந்த நகரம் அலெக்சாண்டர் மன்னரால் கைப்பற்றப்பட்டது.

இங்கு பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் இருப்பதனால் சுற்றுலாவுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

1970ம் ஆண்டு இந்த நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

அலெப்போ (Aleppo)

இப்போது 44 லட்சம் மக்கள் தொகையுடன் சிரியா நாட்டில் அதிக மக்கள் வாழும் நகரமாக இருக்கிறது அலெப்போ.

இது 8,000 ஆண்டுகள் பழமையான நகரம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்த நகரம் முதலில் ஹிட்டிடே கட்டுப்பாட்டில் இருந்தது. கி.மு 800 வரை அசிரியர்கள், கிரேக்கர்கள் மற்றும் பெரிசியர்கள் கைகளில் இருந்தது.

பின்னர் ரோமானியர்கள், பைசண்டைன்கள் மற்றும் அரேபியர்கள் இந்த நகரத்தை கைப்பற்றினர்.

சிலுவைப்போர்களிலும் இந்த நகரம் முற்றுகையிடப்பட்டது. மங்கோலியர்கள் மற்றும் ஒட்டோமான்களால் பின்னர் ஆளப்பட்டது.

சிரிய பிராந்தியத்தில் பெரிய நகரமாகவும், ஒட்டாமன் பேரரசின் மூன்றாவது பெரிய நகரமாகவும் திகழ்கிறது.

பைப்லோஸ் (Byblos)

லெபனான் நாட்டில் உள்ள இந்த நகரம் ஃபீனீசியன்களால் அமைக்கப்பட்டது.

Gebal என இருந்த இதன் பெயரை கிரேக்கர்கள் பைப்லோஸ் என மாற்றினர்.

இந்த நகரின் பெயரில் இருந்தே பைபிள் என்ற சொல் உருவானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நகரில் நடக்கும் இசைத்திருவிழா இப்போதும் புகழ் பெற்ற ஒன்றாக இருக்கிறது.

ஏதேன்ஸ் (Athens)

ஏதேன்ஸ் மேற்கத்திய நாகரீகத்தின் தொட்டில் என வழங்கப்படுகிறது.

7000 ஆண்டுகள் பழமையான இந்த நகரில் ஒட்டோமான், பைசண்டைன் மற்றும் ரோமானிய நாகரிகங்கள் இருந்ததற்கான தடயங்களைப் பார்க்க முடியும்.

பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற புகழ் பெற்ற தத்துவாதிகள் இந்த நகரில் பிறந்தவர்கள்.

சுசா (Susa)

கி.மு 8000 நூற்றாண்டில் எலாமைட் பேரரசின் தலைநகராக இருந்தா சுசா இன்று இல்லை.

எனினும் இந்த நகரின் தொடர்ச்சியாக சுஷ் என்ற சிரிய ஊர் இருக்கிறது.

சுசா அசிரியர்கள் இதனை எலாமைட் பேரரசில் இருந்து கைப்பற்றினர்.

பின்னர் சைரஸ் கிரேக்கர்களின் அச்செமின்ட்ஸ் பேரரசின் கீழ் ஆளப்பட்டது.

இன்றைய ஈரானில் இருக்கும் இந்த நகரம் விலிவிலியத்தில் அதிகமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எர்பில் (Erbil)

ஈராக் குர்திஸ்தானில் இருக்கும் இந்த நகரத்துக்காக பல பேரரசுகள் சண்டையிட்டுக்கொண்டன.

அசிரியர்கள், பெர்சியர்கள், சசானிகள், அரேபியர்கள் மற்றும் ஒட்டோமான்களால் மீண்டும் மீண்டும் ஆளப்பட்டது இந்த நகரம்.

பட்டுவழிச் சாலையில் மிகவும் முக்கிய நிறுத்தமாக இந்த 6000 ஆண்டுகள் பழமையான நகரம் இருக்கிறது.

சிடோன் (Sidon)

லெபனானில் இருக்கிற 6000 ஆண்டுகள் பழமையான நகரம் இது.

இது மிகப்பழமையான ஃபீனீசிய (Phoenician) நகரமாகும்.

கி.மு 333ல் அலெக்சாண்டர் இந்த நகரத்தை கைப்பற்றினார்.

இயேசு மற்றும் பவுல் இருவருமே இந்த நகரத்துக்கு வருகைத் தந்துள்ளனர்.

ப்லோதிவ் (Plovdiv)

6000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம் பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாக அறியப்படுகிறது.

திரேசிய நகரமான ப்லோதிவ் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டது.

பல்கேரியாவை ஒருங்கிணைக்கும் முன் பைசண்டைன் மற்றும் ஒட்டோமான் பேரரசுகள் இந்த நகரை மாறி மாறி ஆண்டனர்.

815ம் ஆண்டும் பல்கேரியா இந்த நகரை அடைந்தது.

வாரணாசி

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் வாரணாசி பழமையான நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்தியாவின் பழமையான நாகரீகத்தின் தொட்டில் என இது அறியப்படுகின்றது.

காசி என்று பெனாரஸ் என்றும் இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் புனித நகரமாக வாரணாசி பார்க்கப்படுகிறது.

ஜெருசலேம் (Jerusalem)

இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் 4000 முதல் 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பழமையான நகரம் என்பதைத் தாண்டி மூன்று முக்கிய மதங்களின் பிறப்பிடமாக ஜெருசலேம் திகழ்கிறது.

கிறிஸ்தவம், யூத மதம் மற்றும் இஸ்லாமியம் ஆகிய மதங்களை பின்பற்றுபவர்களுக்கு புனித நிலமாக திகழ்கிறது ஜெருசலேம்.

வரலாற்றில் கொடிய தாக்குதல்களைக் கண்டதும் ஜெருசலேம் தான்.

இரண்டு முறை முற்றிலுமாக ஜெருசலேம் அழக்கப்பட்டது. 23 முறை முற்றுகையிடப்பட்டுள்ளது. 52 முறைக்கு மேல் தாக்கப்பட்டுள்ளது.

மதுரை (Madurai)

உலகின் பழமையான நகரங்களின் பட்டியலில் இன்னும் சில நகரங்களுக்கு பிறகு தமிழகத்தின் மதுரைக்கு நிச்சயமாக இடமிருக்கிறது.

கிழக்கின் ஏதேன்ஸ் என்று அழைக்கப்படுமளவு பழமையானது இந்த நகரம்.

மதுரை கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என நம்பப்படுகிறது.

பாண்டிய மன்னர்களின் தலைநகராக திகழ்ந்தது. சில காலம் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது.

1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மதுரைக்கு வருகை தந்து சில வளங்களை கொள்ளையடித்திருக்கின்றனர் என்றாலும் மதுரையை ஆளவில்லை.

1323ம் ஆண்டு துக்ளக் ஆட்சியின் கீழ் டெல்லி சாம்ராஜ்ஜியத்தின் மாகணமாக மதுரை மாற்றப்பட்டது.

பின்னர் 1371ல் விஜயநகர ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது மதுரை.

விஜயநகர ஆட்சியில் கவர்னர்களாக இருந்த நாயக்கர்கள் 1530ம் ஆண்டுக்குப் பிறகு மதுரையை ஆளத் தொடங்கினர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?