சுனாமி Twitter
உலகம்

சுனாமி : ஜப்பான் முதல் இந்தோனேசியா வரை - உலகின் வரைபடத்தை மாற்றிய மோசமான 8 சுனாமிகள்

பேரழிவுகள் எல்லாமே கொடூரமானவை. சுனாமி அவற்றில் மிக மோசமானது. உலகில் இதுவரை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்திய 8 சுனாமிகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Antony Ajay R

உலகம் பல பேரழிவுகளைக் கடந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல அழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. காட்டுத்தீ, நிலநடுக்கம், புயல்,வெள்ளம் என பலவற்றைச் சந்தித்து வரும் நாம் சுனாமி என்றால் ஒரு வினாடி அதிர்ந்துவிடுகிறோம் என்பது தான் உண்மை. பேரழிவுகள் எல்லாமே கொடூரமானவை. சுனாமி அவற்றில் மிக மோசமானது. உலகில் இதுவரை தீவிரமான விளைவுகளை ஏற்படுத்திய 8 சுனாமிகளைத் தெரிந்துகொள்ளலாம்.

2004 tsunami

2004, டிசம்பர் 26, இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, இந்தோனேசியா

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகின் பல நாடுகளில் சுனாமி வந்தது. குறிப்பாக 26ம் தேதி இந்தோனேசியா மிகத் தீவிர பாதிப்பைக்கண்டது. 9.1 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைச் சந்தித்தது இந்தோனேசியா. இதனால் 50 மீட்டர் அளவு உயரமான சுனாமி ஏற்பட்டது. கடலிலிருந்து 5 கிலோமீட்டர் வரை உள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டன.

இந்த சுனாமியால் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 2,30,000 மக்கள் இறந்தனர். இந்தோனேசியா மட்டுமின்றி இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த சுனாமியால் பாதிக்கப்பட்டன.

2011 Tsunami

2011, மார்ச் 11, டொஹொக்கோ சுனாமி, ஜப்பான்

பெரிய கிழக்கு ஜப்பான் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த சுனாமி வந்தது. 1900களிலிருந்து நவீன நிலநடுக்க அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியது முதல் இது நான்காவது பெரிய சுனாமி. இதனால் ஏற்பட்ட சுனாமி 10 மீட்டர் வரை உயரமாக இருந்தது. மணிக்கு 500 மைல்கள் வேகத்தில் அந்த சுனாமி தாக்கியதில் ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பைக் கண்டது.

சுனாமியால் ஃபுகுஷிமா டைசீ அணு உலை பாதிப்பு நடந்தது. ஒட்டு மொத்தமாகச் சுனாமியால் 19,747 பேர் இறந்தனர், 2,556 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. 15 - 35 அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

1755, நவம்பர் 1, லிஸ்போன் நிலநடுக்கம் மற்றும் சுனாமி

போர்ச்சுகல் நாட்டிலுள்ள லிஸ்போன் நகரத்தை 1755ல் தாக்கிய சுனாமி மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 6-20 மீட்டர் உயரத்துக்கு எழுந்ததாகக் கூறப்படும் சுனாமியால் 12000 முதல் 50000 பேர் இறந்ததாகக் கணிக்கப்படுகிறது.

1883. மே 20, கிரகடோவா வெடிப்பு மற்றும் சுனாமி

இந்தோனேசியாவிலுள்ள கிரவோடா தீவில் ஏற்பட்ட இந்த சுனாமியால் அந்த தீவின் 70% சிதைந்தது. மே 20ம் தேதி தொடங்கிய சுனாமி 27ம் தேதிவரை பாதிப்பை ஏற்படுத்தியது. 46 மீட்டர் உயரம் வரை எழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த சுனாமியால் 36000 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சுனாமி ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களை நிலநடுக்கம் குறித்து அதிகம் ஆராய உந்தியது. நிலநடுக்க வியல் கண்டறியப்பட்டது இந்த சுனாமியிலிருந்தே.

சுனாமி

1498,செப்டம்பர் 20, Meiō பூகம்பம் மற்றும் சுனாமி, ஜப்பான்

ஜப்பான் அடிக்கடி சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய நாடாகும். Nankaidō எனும் ஜப்பானின் முக்கிய பகுதி இதனால் பாதிக்கப்பட்டது. இந்த சுனாமிக்கு முந்தைய நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 8.6 என ஆய்வாளர்கள் இப்போது கணித்திருக்கின்றனர்.இதன் உயர் 17 மீட்டர் வரை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஜப்பானின் housed the Great Buddha எனும் கோவில் இந்த சுனாமியால் இடிந்தது. 5000 முதல் 41000 பேர்வரை இதனால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

1707 அக்டோபர் 28, Hōei நிலநடுக்கம் மற்றும் சுனாமி

2011 வரை ஜப்பான் வரலாற்றில் மிகப் பெரிய நிலநடுக்கமாக இது கருதப்பட்டது. இதனால் 5000 மக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சுனாமி ஏற்பட்ட 49 நாட்களில் ஃபூஜி எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததால் அதனைத் தூண்டியதாகவும் இந்த நிகழ்வு கருதப்பட்டது.

1896, ஜூன் 15, சான்ரிகு நிலநடுக்கம் மற்றும் சுனாமி

ஜூன் 15, 1896ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 சுனாமிகள் ஏற்பட்டன. இதனால் 9 ஆயிரம் வீடுகள் இடிந்தன. 22000 மக்கள் இறந்தனர். 38 மீட்டர் உயரம் வரை பெரிதாக வந்த இந்த சுனாமி அதுவரை வந்ததிலேயே மிக உயரமானதாகக் கருதப்படுகிறது.

1868, ஆகஸ்ட் 13, அரிகா நிலநடுக்கம் மற்றும் சுனாமி

8.5 - 9.0 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல சுனாமிகள் வந்தன. இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் 25000 மக்கள் இறந்தனர். பல கப்பல்கள் சுனாமியால் தூக்கியெறியப்பட்டன. கடலில் நங்கூரமிட்டு நின்ற 3 கப்பல்கள், தரையில் 800 மீட்டர் வரைத் அடித்துச் செல்லப்பட்டன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?