நாஸ்ட்ராடாமஸ் Twitter
உலகம்

2023ஆம் ஆண்டு பெரும் போர் வரும் - பீதியூட்டும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

Govind

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் டி நோஸ்ட்ராடேம் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணிப்பவராக கருதப்படுகிறார். அந்த வகையில் இவரது கணிப்புகள் உலக ஊடகங்களில் அவ்வப்போது வெளி வருவது வழக்கம். இரண்டு உலகப் போர்கள் துவங்கி பல கணிப்புகளை இவர் கூறியதாக பலரும் கருதுகின்றனர்.

450 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டு பரவலாக வாசிக்கப்பட்ட அவரது புத்தகத்தின் பெயர் Les Prophéties ஆகும். இதில், இந்த பிரெஞ்சுக்கார தத்துவஞானி எதிர்காலத்திற்கான ஆயிரக்கணக்கான கணிப்புகளைச் செய்தார் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஹிட்லரின் எழுச்சி, அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படுவது மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11இரட்டைக் கோபுர தாக்குதல்களை முன்னறிவித்ததாக இவரைக் கருதுகின்றனர். 

அவரது கணிப்பின்படி, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நிகழும் மோதல் 2023 ஆம் ஆண்டில் ஒரு பயங்கரமான 'பெரும் போரை' கொண்டு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

Ukraine War

பெரும் போர்

நாஸ்ட்ராடாமஸ் தனது எழுத்துக்களில் எழுதுகிறார். 'ஏழு மாதங்கள் பெரும் போர், தீய செயல்களால் இறந்த மக்கள், ரூவன் மற்றும் எவ்ரெக்ஸ் ராஜாவிடம் வீழ்ந்து விடக்கூடாது.' இந்த கணிப்பின் படி அடுத்த ஆண்டு உக்ரைனில் எழும் பிரச்சனைகள் ஒரு பெரிய மூன்றாம் உலகப்போரின் மோதலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய உக்ரைன் போர் விரைவிலோ இல்லை தொலைவிலோ முடிவுக்கு வரலாம் என்று தோன்றினாலும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் பயங்கர அணு ஆயுதங்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஆனால் நாஸ்ட்ராடாமஸ் செய்த பல கணிப்புகள் மிகவும் பயத்தை அளிக்கின்றன.

வான நெருப்பு

இந்த பிரெஞ்சு தத்துவஞானி "அரச கட்டிடத்தில் ஒரு வான நெருப்பு" என்று தனது நூலில் எழுதியுள்ளார். பைபிள் முழுவதிலும், டூம்ஸ்டே அல்லது "காலங்களின் முடிவு" என்று குறிப்பிடப்படுவதன் பொருள் எப்போதும் உலகின் அழிவில் முக்கிய காரணியாக நெருப்பு இருக்குமெனக் குறிப்பிடுகிறது. எவ்வாறாயினும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் நாகரிகத்தின் சாம்பலிலிருந்து ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Elon Musk

செவ்வாய் கிரகம் செல்ல முடியாது

கோடீஸ்வரர்களும் உலகத் தலைவர்களும் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க எப்படி முயற்சி செய்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, "செவ்வாய் கிரகத்தில் ஒளி தோல்வியடைகிறது". அந்த கிரகம் பின்னோக்கிச் செல்லும் என்று கணிப்பு கூறுவதாக வைத்துக் கொண்டாலும் , மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல முயல்வதைக் குறிப்பதாகவும் அது இருக்கலாம்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 2029 ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இறங்குவார்கள் என்று நீண்ட காலமாக பரிந்துரைத்து வருகிறார். இந்த பத்தாண்டின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் குடியேறும் வகையில் திட்டமிட்டுள்ளதாக அவர் மிகவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஒருவேளை நாஸ்ட்ராடாமஸ் கூற்றினால் மஸ்க் தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்வாரா?

2022 ஆம் ஆண்டிற்கான சில முக்கியத்துவம் வாய்ந்த கணிப்புகளை நாஸ்ட்ராடாமஸ் செய்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை உண்மையாகி வருகின்றன. சிறுகோள் தாக்குதல், பணவீக்கம் பட்டினி மற்றும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பூமியைக் கைப்பற்றுவது உட்பட இந்த ஆண்டு பேரழிவுகளை அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் நாஸ்ட்ராடாமஸ் காலத்தில் இன்றிருப்பது போல அறிவியல் வளர்ச்சிகள், பொருளாதாரமோ எதுவுமில்லை. அப்படி இருக்கும் போது அவர் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பூமியைக் கைப்பற்றுவது என்று கூறுவதெல்லாம் அபத்தம்.

உண்மையில் நாஸ்ட்ராடாமஸ் எழுதியிருக்கும் வரிகள் மேற்கண்ட உண்மைகளைக் கூறும் வகையில் நேரடியாக இல்லை. அந்த வரிகளை வைத்துக் கொண்டு ஊடகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பொழிப்புரை எழுதி நடப்பு உலக விசயங்களைச் சேர்க்கின்றனர். பொதுவில் ஜோசியத்திற்கு மக்களிடம் இருக்கும் நம்பிக்கை நாஸ்ட்ராடாமஸ் போன்றவர்களின் கருத்துக்களைத் திரித்து நம்புவதற்கு இடம் கொடுக்கிறது. 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?