தெலங்கானாவில் மாநிலத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த இளம் பெண்ணை நான்கு நபர்கள் காரில் வந்து தந்தை கண் முன்னால் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை இன்று காலை ஏற்படுத்தியது.
கடத்தல் காணொளியும் இணையத்தில் வைரலாக பரவியது.
ஆனால், கடத்தப்பட்ட ஐந்து மணி நேரத்தில் தான் மண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை அப்பெண் வெளியிட்டார்.
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தன்னுடைய மகள் ஷாலினியுடன் (18) இன்று செவ்வாய்க்கிழமை காலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று இருந்தார்.
சாமி கும்பிட்ட பிறகு இருவரும் கோயிலில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் ஷாலினியை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.
மகளை கடத்தி செல்பவர்களை தடுத்து நிறுத்த முயன்ற சந்திரய்யாவை அந்த கும்பல் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனே சந்தரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
சந்திரய்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருக்கும் இளம்பெண் கடத்தல் தொடர்பான காட்சிகளை கைப்பற்றினர்.
சில மணி நேரங்களில் அந்தப் பெண் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தையும் காணொளியையும் வெளியிட்டார்.
அந்தக் காணொளியில் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருக்கிறார். அவரை கடத்திய நபரும் திருமண உடையில் அந்தப் பெண் அருகே நிற்கிறார்,
அந்த காணொளியில் அந்தப் பெண், “தனக்கு ஒரு வருடம் முன்பே திருமணம் ஆகிவிட்டது. அப்போது எனக்கு 17 வயது. என் பெற்றோர் திருமணத்தை ஒப்புக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, எனது கணவரையும் என் அப்பா அளித்த புகாரின் காரணமாக காவல்துறை கைது செய்தது.?
இப்போது எனக்கு 18 வயது ஆகிவிட்டது. இதனால் இப்போது அவரை மீண்டும் கோயில் வைத்து திருமணம் செய்துள்ளேன்,” என்று கூறி உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust