கார்ல் புஷ்பி Twitter
உலகம்

உலகைச் சுற்றி சாகச 'நடை பயணம்' - 2 நாடுகளில் சிறை தண்டனை? 24 வருட பயணக் கதை!

Antony Ajay R

1998 ம் ஆண்டு கார்ல் புஷ்பி என்ற நபர் தென்னமெரிக்காவிலிருந்து தனது நடை பயணத்தைத் தொடங்கினார். உலகைச் சுற்றி நடக்கத் திட்டமிட்டவர் அதற்காக 58,000 கிலோ மீட்டர் நீளமான வழியைத் தேர்வு செய்து நடக்கிறார். அதில் 42,000 கிலோ மீட்டரை முடித்து விட்டவருக்கு இப்போது பிரச்னைக்கு மேல் பிரச்னைகள்!

புஷ்பி ஒரு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர். 12 ஆண்டுகள் இராணுவத்தில் வேலை செய்து திரும்பியவருக்கு விவாகரத்து நடந்தது. தான் ஒரு இராணுவ வீரனோ அல்லது குடும்பஸ்தனோ இல்லை என்ற நிலை அவர் விரக்தியடைய செய்துள்ளது. தன்னைப் பற்றிய சந்தேகங்கள் தேடல்கள் அவருக்கு இருந்திருக்கிறது.

அந்த நேரத்தில் தனது மனதின் இறுக்கத்திலிருந்து விடுபட இதுவரை யாரும் செய்யாத ஒன்றை செய்ய நினைத்தார். ஆபத்துகள் நிறைந்த கடினமான ஒரு விஷயத்தைச் செய்வதே தனக்கு தேவையான ஒன்று என நினைத்த அவர் தனது ”கோலியாத் எக்ஸ்பெடிஷன்” என்ற பயணத்தைத் தொடங்கினார்.

தெரிந்த சிலரிடம் இருந்தும், பிரிடிஷ் இராணுவத்திலிருந்தும் உதவிகள் பெற்றார். தனக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். இங்கிலாந்திலிருந்து தென்னமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து நவம்பர் 1,1998ல் புறப்பட்டார். இப்போது வரை 23 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கொண்டிருக்கிறார்.

கடுங்குளிர் வீசும் நாடுகளிலும், புழுதி சூறையாடும் பாலைவனத்திலும் நடந்திருக்கிறார். பல மனிதர்களைச் சந்தித்ததுடன், மிருகங்களையும் தாண்டியிருக்கிறார். இரண்டு வெவ்வேறு நாடுகளில் சிறையிலும் இருக்க வேண்டிய சூழல் இவருக்கு வந்தது.

ஆங்காங்கே டென்ட் போட்டு தங்கிக்கொள்கிறார். கையில் பணம் தீரும்போது இருக்குமிடத்தில் சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்கிறார்.

சிலியிருந்து தனது பயணத்தைத் தொடங்கியவர் வட அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்றடைந்தார். அப்போது ஆர்டிக் கடலை கடக்க வேண்டிய நிலை உருவானது. ரஷ்யாவின் சைபீரியாவைச் சென்றடைய அது தான் வழி. பனிக்காலத்தில் உறைந்து கிடக்கும் ஆர்டிக்கடலை நடந்து கடக்க துணிந்தார்.

அந்த வாழ்வா? சாவா? பயணத்தில் பிரெஞ்சு சாகச வீரர் டிமிட்ரி கீஃபர் புஷ்பியுடன் இணைந்துக்கொண்டார். இருவரும் இணைந்து அலைகள் இல்லாத குளிரால் உறைந்து இறுகிய கடலின் மீது 90 கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பனி மட்டுமே சூழ்ந்திருந்த பகுதியில் திக்கு தெரியாமல் 153 கிலோமீட்டர் நடந்து சைபீரியாவைச் சென்றடைந்தனர்.

ரஷ்யாவின் சைபீரியா புஷ்பியை வரவேற்கத் தயாராக இல்லை. 80களில் ராணுவத்தில் இருந்தபோது ரஷ்யாவின் எதிரி புஷ்பி. இப்போது அதே ரஷ்ய பாதுகாப்புப் படையினரை ஒரு பயணியாக எதிர்கொள்கிறார். பிரிட்டிஷ் இராணுவத்திடமிருந்து உதவிகள் வேறு பெற்று வந்திருந்தார். ரஷ்யா அவரது கதையை நம்பவில்லை, கைது செய்து சிறையில் அடைத்தது.

அங்கிருந்து மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் வாஷிங்டன் டி.சியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்டார். பிரிட்டிஷ் அரசு மூலமாக திரும்பவும் சைபீரியா சென்று தனது பயணத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார். அவர் சிறையிலிருந்தது மொத்தம் 71 நாட்கள்.

சைபீரியாவிலிருந்து சீனா, கஜகஸ்தான் வழியாக ஈரான் அருகில் உள்ள துர்க்மேனிஸ்தான் வந்தடைந்தார். 2019ல் கொரோனா காரணமாக எந்த நாட்டு எல்லையையும் கடக்க முடியாத சூழல் இருந்தது. அதன் பிறகு அரசியல் காரணங்களுக்காக பிரிட்டிஷ் மக்களுக்கு விசா கொடுப்பதை ஈரான் நிறுத்திவிட்டது. வந்த வழியாக திரும்பிச் சென்று ரஷ்யாவை அடைய முயற்சிக்கையில் உக்ரைன் போர் ஏற்பட்டதனால் ரஷ்யாவும் விசா கொடுக்க மறுத்துவிட்டது. அவரது 23 ஆண்டுகால பயணம் அர்த்தமற்று ஸ்தம்பித்து நிற்கிறது.

1998ம் ஆண்டு மொபைல் போன் கூட கண்டுபிடிக்கப்படாத நேரத்தில் பயணத்தைத் தொடங்கிய புஷ்பியை இப்போது ஆன்லைனில் அனைவரும் பின் தொடர முடியும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னையும் வளர்த்துக்கொண்டார் அவர்.

கஜகஸ்தானிலிருந்து காஸ்பியன் கடலைக் கடந்து அசர்பைஜனை அடைந்தால் அவரது பயணத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் அவரது பயணத்தில் எந்த வாகனத்தையும் உபயோகப்படுத்தக்கூடாது என்பது அவரே வகுத்துக்கொண்ட விதி. 257 கி.மீ தொலைவை நீந்திக் கடப்பதே ஒரே தீர்வு.

"இந்த அளவு தூரத்தை நீந்தக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் நான் அவர்களில் ஒருவனில்லை. இப்போது எனக்கு 53 வயதாகிவிட்டது" என்கிறார் புஷ்பி. புஷ்பியால் அவரது பயணத்தை முடிக்க முடியுமா?

இன்னும் சில பயணக்கதைகள்:

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?