கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகளவில் சீனாவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இது சீனாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையும் மீண்டும் அச்சத்தில் தள்ளி உள்ளது.
இந்திய மக்களும் கொரோனா குறித்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக ஊரடங்கு, சமூக முடக்கம் குறித்த பதற்றம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
இப்படியான சூழலில் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா.
’அச்சமூட்டும் சீனா. ஆனால்…’
கொரோனாவால் சீனாவில் குறைந்தது 10 லட்சம் பேர் 2023 ஆம் ஆண்டு உயிர் இழப்பர் என்ற கணிப்புகள் நிலவும் சூழலில், சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனவாலா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
சீரம் நிறுவனம்தான் கோவேக்ஸின் தடுப்பூசியை உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக இருந்தாலும், நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. நாம் தடுப்பூசிகளைச் சிறப்பாக செலுத்தி உள்ளோம். அதில் குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளோம். அரசு சொல்லும் விதிமுறைகளை நாம் முறையாகக் கடைப்பிடித்தாலே போதுமானது என்று அவர் கூறி உள்ளார்.
அப்போலோ மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சங்கீதா ரெட்டியும் இதனை வழிமொழிந்துள்ளார்.
நாம் சிறப்பான வகையில் பெரும்பாலானவர்களுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்தி உள்ளோம். நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அதே நேரம் நாம் செயலாற்றாமலும் இருக்கக் கூடாது. துரிதமாகச் செயல்பட்டு சீனாவிலிருந்து வரும் செல்லும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும்,” என கூறி உள்ளார்.
அரசின் நடவடிக்கைகள்
சீனாவில் கோவிட் பரவுவதை அடுத்து இந்திய அரசு அனைத்து மாநிலங்களையும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இது தொடர்பாக மாநில அரசாங்கங்களுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlus