லி சிங்-யுயென் : 256 ஆண்டுகள் வாழந்தாரா இந்த சீன மனிதர்? - வரலாறு என்ன சொல்கிறது? Twitter
உலகம்

லி சிங்-யுயென் : 256 ஆண்டுகள் வாழ்ந்தாரா இந்த சீன மனிதர்? - வரலாறு என்ன சொல்கிறது?

"உள்ளார்ந்த அமைதி இருந்தால் எவரும் 100 ஆண்டுகள் வரை வாழ முடியும்" என்பது லீயின் நம்பிக்கை என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

Antony Ajay R

உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த மனிதர் என அறியப்படுபவர் ஜீன் கால்மென்ட். இவர் ஒரு பிரஞ்சு பெண். 122 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

ஆனால் இவரை விட அதிகமாக சீன மனிதர் லி சிங்-யுயென் அதிக ஆண்டுகள் வாழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. லீ இறக்கும் போது அவரது வயது 134 என்கின்றனர்.

ஆரம்பத்தில் லீ, தான் 1736ம் ஆண்டு பிறந்ததாக கூறிவந்தார். அதன் பிறகு அரசு ஆவணங்கள் அவர் 1677ல் பிறந்ததாக தெரிவிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1933ம் ஆண்டு லீ இறந்த போதும் அவரைச் சுற்றி பல குழப்பங்கள் இருந்தன. மூலிகை விற்பனையாளரான லீ தான் உலகிலேயே அதிக ஆண்டு வாழ்ந்த நபரா?

ஜீன் கால்மென்ட்

லீ சிங்-யுயென்

1677-லோ அல்லது 1736-ஓ லீ சிங்-யுயென் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பிறந்துள்ளார்.

அவரது வாழ்க்கையில் முதல் 100 ஆண்டுகளில் பல இடங்களுக்கு பயணம் செய்து மூலிகைகளை சேகரிக்கும் வேலையை செய்துவந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் அந்த மூலிகைகளை விற்பதை வேலையாக செய்துவந்துள்ளார்.

இவரது வாழ்க்கை குறித்து நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, இவருக்கு 24 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், 180 குழந்தைகள் பிறந்ததாகவும் கூறியுள்ளது.

 சீன ஜெனரல் யாங் சென் என்பவர் 1927ல் லீயை சந்தித்துள்ளார். அவர் குறித்து தி இம்மோர்டல் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதே நேரத்தில் போர் வீரரான வு பெய்ஃபுவும் லீ குறித்து தெரிந்துகொண்டு அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தை தேடினார்.

நீண்ட ஆயுளின் ரகசியம்

1920களில் வு பெய்ஃப், லீயை சந்தித்து உரையாடியுள்ளார். வு கூறியதன் படி, லீ பல ஆண்டுகளுக்கு மூலிகைகளையும் அரிசி வைனையும் சாப்பிட்டு உயிர்வாழ்ந்திருக்கிறார்.

உணவு மட்டுமல்லாமல் நம் உள்ளத்தை அமைதியாக வைத்திருப்பது தான் மிகவும் முக்கியமானது என லீ விளக்கியதாக வு தெரிவித்துள்ளார்.

"உள்ளார்ந்த அமைதி இருந்தால் எவரும் 100 ஆண்டுகள் வரை வாழ முடியும்" என்பது லீயின் நம்பிக்கை என நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

"இதயத்தை அமைதியாக வைத்திருங்கள், ஆமையைப் போல உட்கார்ந்து கொள்ளுங்கள், புறாவைப் போல சுறுசுறுப்பாக நடக்கவும், நாயைப் போல தூங்கவும் செய்யுங்கள்" என்பது லீ கொடுக்கும் அட்வைசாம்.

சுவாசப் பயிற்சிகள்

பீட்டர் கெல்டர் எழுதிய Ancient Secret of the Fountain of Youth என்ற புத்தகத்தில் லீயின் மாணவரான டி லியு, சுவாசப் பயிற்சிகள் தான் அவரது ஆயுளுக்கு முக்கிய காரணம் எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"120 ஆண்டுகளாக நான் ஒவ்வொரு நாளும் பயிற்சிகளை தவறாமல், சரியாக, நேர்மையுடன் செய்ததே எனது நீண்ட ஆயுளுக்குக் காரணம்." என லீ அவரது மாணவரிடம் கூறியிருக்கிறார்.

லீ சிங்-யுயென் வயதுக்கு ஆதாரம் இருக்கிறதா?

தான் இறக்கும் போது தனக்கு 256 வயது என லீ கூறியுள்ளார். இதனை பலர் ஏற்றுக்கொண்டாலும் சிலர் புறுவங்களை உயர்த்தினர்.

லீயின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர், தனது தாத்தா குழந்தையாக இருந்த போதும் லீயை பார்த்துள்ளார் என்றும் அப்போதே லீ வயதானவராக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

மின்குவோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வு சங்-சின் என்பவர் அரசு ஆவணங்களில் லீ 1677ல் பிறந்ததற்கான ஆதாரங்களைக் கண்டடைந்துள்ளார்.

சீன ஏகாதிபத்திய அரசு லீயின் 150 மற்றும் 200வது பிறந்தநாள்களுக்கு அதிகாரப்பூர்வமாக வாழ்த்தியிருக்கிறது.

1929ம் ஆண்டு மியாமி ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் லீயின் ஆவணங்கள் உண்மையானவைதான் என்றும் கூறியிருக்கிறது.

ஆனாலும் லீயின் ஆயுள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்திருக்கிறது.

லீ சிங்-யுயென் - சந்தேகங்கள்

ஆஸ்திரேலியா அசோசியேடட் பிரஸ் என்ற செய்தி தளத்தில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்த மரபியல் நிபுணர் தாமஸ் பெர்ல்ஸ் என்பவர், "சாதாரண மக்கள் தொகைக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கூட 240 என்பது சாத்தியமில்லாதது" எனக் கூறியுள்ளார்.

அவர் இறந்த 1933ம் ஆண்டு டைம் செய்தி தளம், "சந்தேகம் கொண்டிருக்கும் மேற்கத்திய கண்கள் அவரை சாதாரண 60 வயது சீன நபராக தான் பார்க்கின்றன" எனக் கூறியுள்ளது.

லீ தனது மூதாதையர்களின் அடையாளத்தையேக் கூட தனக்கும் பொருத்திக்கொண்டு நான்தான் அவர் எனக் கூறியிருக்கலாம் என பலர் சந்தேகித்தனர்.

லீ சிங்-யுயென் இறக்கும் போது அவருடன் இருந்த அனைவரும் குறைந்தபட்சம் ஒன்றரை நூற்றாண்டு இளையவர்களாக இருந்தால் யாராலும் லீயின் வயதைக் கூற முடியாது.

இப்போது அறியப்படும் அதிகபட்ச ஆயுளான 122-ஐ லீ கடந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதனை நம்ப யாரும் தயாராக இல்லை.

சந்தேகத்துக்குரிய எவரும் சாதனையாளராக கருதப்படுவதில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?