Ambani Twitter
பிசினஸ்

Jio அம்பானி கதை: திருபாய், ராஜீவ் காந்திக்கு பாலமான ஒரு இந்தி நடிகர் | பகுதி - 19

Gautham

இப்படி ரிலையன்ஸ் பல சோதனைகளை எதிர் கொண்டிருக்கும் போது, 1986 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளாக மாற்றப்படக் கூடிய கடன் பத்திரங்களை வெளியிட்டது. அது ஏழு மடங்கு கூடுதலாக விண்ணப்பங்களை ஈர்த்தது. ஆக ரிலையன்ஸுக்கு எதிராக அரசாங்கமோ, அரசு உயர் பதவியில் இருப்பவர்களோ என்ன நடவடிக்கை எடுத்தாலும், முதலீட்டாளர்கள் ரிலையன்ஸை நம்பினர் என்பதற்கு இதுவே சாட்சி.

மறுபக்கம், 1986 ஆம் ஆண்டு திருபாய் அம்பானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவர் உடலின் வலது பக்கம் செயல் இழந்தது. அரசியல் களத்தில் விபி சிங் மற்றும் ராஜீவ் காந்திக்கு இடையிலான கருத்து வேறுபாடு முற்றி 1987 ஆம் ஆண்டு நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார் விபி சிங்.

ஒருகட்டத்தில் திருபாய் அம்பானியை எதிர்த்த ராஜிவ் காந்தி, அம்பானிக்கு ஆதரவாக நடந்து கொள்ளத் தொடங்கியதாகச் செய்திகள் வெளியாகத் தொடங்கின இதனை அம்பானிக்கு எதிராக செயல்படாமல் இருந்தார் எனலாம். 1980களில் இந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவரின் மூலம், ராஜீவ் காந்தியை சந்திக்க அம்பானி ஏற்பாடு செய்தார். என்ன ஆனதோ, ஏதானதோ, ராஜிவ் காந்தி அதன் பின் பெரிதாக திருபாய் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் மீது தாக்குதல் நடத்தவில்லை. மாறாக அவரை விமர்சித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடந்தன.

ராஜிவ் காந்தி


1987 நவம்பர் டிசம்பர் காலத்தில் அரசு எந்திரம் அம்பானியை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்த குருமூர்த்தி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. ஒருகட்டத்தில் குருமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சதித் திட்டம் தீட்டுவது மற்றும் official secrets act-ன் கீழ் கைது செய்து சில நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, நுஸ்லி வாடியா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மீதும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு சோதனைகள் எல்லாம் நடத்தப்பட்டன.

ஏன் விபி சிங் தொடர்ந்து திருபாய் அம்பானியைக் கட்டம் கட்டினார்?

பாம்பே டையிங் தலைவர் நுஸ்லி வாடியா, பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நட்பு பாராட்டி வந்தார். அதில் விபி சிங்கும் ஒருவர் என பரவலாக பத்திரிக்கைச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அம்பானியோ நேரடியாக ராஜீவ் காந்தியோடு நட்பு பாராட்ட விரும்பினார். ராஜீவ்காந்தியை விமர்சித்து அரசியலில் முன்னேற விரும்பிய விபி சிங், அம்பானியை கட்டம் கட்ட தொடங்கியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

Ambani

சரி மீண்டும் ரிலையன்ஸ் கதைக்கு வருவோம்.

விபி சிங் வெளியேறிய பிறகுதான், கிடப்பில் போடப்பட்டிருந்த பல ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமங்கள் உடனடியாக கையெழுத்தாயின. அதேபோல ரிலையன்ஸின் பழைய மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் ஈக்விட்டிகளாக மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டன.

1987 கடைசியில், கையில் போதிய பணமில்லாமல் சுங்க வரி மற்றும் சிபிஐ வழக்குகள் நிலுவையிலிருந்தது. அப்போது ரிலையன்ஸின் நிதி நிலையும் மோசமாக இருந்தது. மறுபக்கம் போஃபர்ஸ் ஊழலைக் கையில் எடுத்துக் கொண்டு குருமூர்த்தி மற்றும் ராம் ஜெத்மலானி அணு தினமும் ராஜிவ் காந்தி அரசைக் கிழித்துத் தொடங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்தும் விதத்தில், ஏற்கனவே ரிலையன்ஸின் முதலீடு செய்துள்ளவர்களிடமிருந்து பணத்தைத் திரட்ட விண்ணப்பித்து 10 நாட்களுக்குள் அனுமதி கொடுக்கப்பட்டது.

ஒருவழியாக எல்லாம் அமைந்து வருவதற்குள், 1989ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக மற்றும் இடது சாரிகளின் கூட்டணியோடு பிரதமரானார் விபி சிங்.

Dhirubhai Ambani

விபி சிங் பழிவாங்கல்:

விபி சிங் பிரதமரான பின், மே 1990ல் ரிலையன்ஸின் பாதால் கங்காவில் ஒரு சுங்க வரித்துறை அணி புகுந்து கடும் சோதனை நடத்தியது. இந்த முறை உள்ளே புகுந்த அணியினர், மொத்த 413 டீ கப்புகள் இருக்கின்றன, 254 குண்டூசிகள் இருக்கின்றன... என்கிற அளவுக்கு நுணுக்கமாக எல்லாவற்றையும் குறிப்பெடுத்தனர்.

சோதனைக்குப் பிறகு சுமார் 100 பக்கத்துக்கு மேல் விவரங்கள் நிரம்பிய நோட்டிஸை ரிலையன்ஸுக்கு அனுப்பியது சுங்க வரித்துறை. அதில் பிடிஏ ஆசிட் உற்பத்திக்கு 75,000 டன் அளவுக்கு மட்டுமே உரிமம் உள்ளது ஆனால், 1,90,000 டன் கொள்ளளவுக்கு எந்திரங்கள் இருப்பதாகக் கேள்வி எழுப்பியது.

அதே போல 51,000 டன் உரிமம் உள்ள பாராக்சிலின் ஆலையில் 4,00,000 டன் உற்பத்தி செய்யும் அளவுக்குக் கொள்ளளவு இருப்பதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியது.

தற்செயலோ, இறைவன் செயலோ... சுங்க வரித் துறை விசாரணை தீவிரமடைவதற்குள், வி பி சிங்கின் ஆட்சி கலைந்தது. வி பி சிங்கைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமரானார். உடல் நலமின்றி இருந்த திருபாய்க்கு இந்த ஆட்சி மாற்றம் ஒரு சிறிய ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கலாம்.

1991ஆம் ஆண்டு திருபாய் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்திய அரசியல் மற்றும் இந்தியப் பொருளாதார அரங்கில் நடந்தேறின.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?