காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25

எந்த திருமணத்தில் கணவன் மனைவி இடையே காதலும் நேசமும் இருக்கிறதோ அதுதான் சிறந்த திருமணம். ஒரு திருமணத்தில் தம்பதி இடையே காதலும் ஈர்ப்பும் இல்லையென்றால், அந்த திருமணம் அர்த்தமற்றது.
Love
LoveCanva

காதல் நிறைந்த உறவுக்கான அர்த்தத்தை சென்ற பகுதியில் பார்த்தோம். ஏற்கனவே ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு பேர் இணையும் இந்த உறவில், இருவரும் வைத்திருக்கும் ஆசை, அபிமானம் எல்லாம் வெளிப்படும் என்பதால் அவர்கள் விரும்புகிற அளவுக்கு உறவு நீண்ட நேரம் நீடிக்கும்.

இருவரும் ஏற்கனவே சந்தித்து இருக்கலாம். ஆனால் மனம் விட்டுப் பேசும் அளவுக்கு வாய்ப்பு இருந்திருக்காது. ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருக்கும் அன்பு ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. அந்த நிலையில் அவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் தாம்பத்திய உறவு, ஆஹார்ய ராகம். அதாவது எதிர்காலத்தில் அன்பை வெளிப்படுத்தச் செய்யும் உறவு.

ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த ஒருவர், அந்த கலைகளைப் பயன்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது குர்திமராகம். இந்த வகையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமான அன்போ நேசமோ காதலோ இருக்காது. முறையற்ற உறவாகக் கூட இருக்கலாம். செயற்கையான அன்பால் இணைந்த உறவாகக்கூட இருக்கலாம்.

<div class="paragraphs"><p>Love,Lust and Pschology</p></div>

Love,Lust and Pschology

Twitter

உறவின் ஆரம்பத்திலிருந்து முடியும்வரை ஒரு பெண்ணோடு இணைந்திருக்கும் ஆண் மனதுக்குள் தான் நேசிக்கும் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதாகக் கற்பனை செய்து இன்பம் அனுபவிப்பது, வியவஹித ராகம். அதாவது அன்பை மாற்றிக்கொள்ளும் உறவு.

துணையும் இல்லாத காதலும் இல்லாத ஏதோ ஒரு சூழலில் யாருடனாவது இணைவது, போதரதம். அவசரமாக ஆரம்பித்து நேரடியாக உறவுக்கு போய் சீக்கிரமே முடிந்துவிடும். இது இச்சையைத் தணித்துக்கொள்ளும் உறவு.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நெருக்கமாக நீண்டநாள் அறிந்தவர்கள். ஒருவர் மீது இன்னொருவருக்குப் பாசமும் நேசமும் உள்ளது. நிலைத்த அன்பும் உள்ளது. இப்படி அன்பால் இணைந்த இருவர் தாம்பத்திய உறவில் விரும்பி இணைவது அநியந்த்ரித ரதம் எனப்படும். தானாகக் கிளர்ந்தெழும் அன்பால் இணைந்த உறவு.

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24

எந்த திருமணத்தில் கணவன் மனைவி இடையே காதலும் நேசமும் இருக்கிறதோ அதுதான் சிறந்த திருமணம். ஒரு திருமணத்தில் தம்பதி இடையே காதலும் ஈர்ப்பும் இல்லையென்றால், அந்த திருமணம் அர்த்தமற்றது.

சாஸ்திரப்படி திருமணங்கள் நடப்பதைவிட அன்பால் நிறைந்து நடப்பதுதான் சரி. அன்புதான் திருமணத்துக்கு அஸ்திவாரம். அன்பும் காதலும் இருவரும் விருப்பமும் குணமும் ஒத்துப்போகின்ற வகையில் திருமணம் செய்துகொள்வது நல்லது. சாஸ்திரங்கள் காதலை ஆதரிக்கின்றன. காதலின் அர்த்தத்தைச் சொல்கின்றன. “வெறும் இனக்கவர்ச்சி; தூரத்தில் இருந்தபடி ஒரு பெண்ணைப் பார்த்துப் பார்த்து, அவள் மீது அளவில்லாத காதல் வந்துவிட்டது என்று சொல்வது தவறு.”

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23

காதலை பற்றி அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் துறை பேராசிரியர் லியோ நீண்ட ஆய்வு செய்து, தெளிவாக சொன்னார். ‘காதல் என்பது ஒரு உணர்வு; அதேபோன்ற எதிர்வினையைத் தரும் ஒரு உணர்வு’.

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22

ஒரே ஒரு பார்வை பார்த்தேன். அதிலேயே காதல் வந்துவிட்டது எனச் சொன்னால் அது அபத்தம். முதல் பார்வையிலேயே காதல் கண்டிப்பாக வராது. ஒரு உணர்வு வந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர சில காலம் பிடிக்கும். ஒரு ஆணோ பெண்ணோ இன்னொருவர் மீது இப்படிக் காதல் வளர்த்தால் பதிலுக்கு அந்த இன்னொருவரிடமும் அதே உணர்வு உருவாக வேண்டும். அதுவும் உருவாகக் கொஞ்சம் காலம் பிடிக்கும். இன்னொரு தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லையென்றால், அதைக் காதல் என்று சொல்ல முடியாது.

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21

அதாவது ஒருதலைக் காதல் என்பதெல்லாம் வெறும் கதைதான்… நிஜத்தில் காதல் என்பது இருவழிப் பாதை. ஒருவர் பொழியும் உணர்வுகளுக்கு இன்னொருவரிடமிருந்து அதேபோன்ற உணர்வு அதே அளவுக்குத் திருப்பி வர வேண்டும். இதைப் புரிந்துகொள்ளாமல் ஒருத்தர் மட்டும் காதலிப்பது என்பது ராட்சஸத்தனம். பிடிக்காத இன்னொருவர் மீது, வலுக்கட்டாயமாக ஒருவரின் உணர்வுகளைத் திணிப்பது அராஜகம். அதைக் காதல் எனச் சொல்லி கொச்சைப்படுத்த கூடாது.


.தொடரும்

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : கலவி எந்த பொசிஷனில் இருந்தால் சரி? - 15
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com