டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30

ரத்தன் டாடா, அத்தனை நிறுவனங்களையும் இந்தியாவில் தனியார்மயம் உலகமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் சரியாகப் பயன்படுத்தி, டாடா குழுமத்தின் வியாபாரத்தை உலக அளவுக்கு கொண்டு சென்றார்.
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30

Twitter

Published on

ஜேஆர்டி டாடா ஏர் இந்தியா, டாட்டா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் டிசிஎஸ் என பல நிறுவனங்களை முன்கூட்டியே வெற்றிகரமாக தொடங்கி நடத்தியவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ரத்தன் டாடாவோ, அத்தனை நிறுவனங்களையும் இந்தியாவில் தனியார்மயம் உலகமயம் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் சரியாகப் பயன்படுத்தி, டாடா குழுமத்தின் வியாபாரத்தை உலக அளவுக்கு கொண்டு சென்றார்.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு கைப்பற்றிய பிறகு, 2001ஆம் ஆண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து டாடா ஏஐஏ என்கிற நிறுவனத்தை தொடங்கியது டாடா குழுமம்.

Tata Play

Tata Play

Facebook

ரத்தன் டாடா சாதனைகள்

2006 ஆம் ஆண்டு டாட்டா குழுமம் இந்திய குடும்பங்களின் டிவிக்குள்ளும் புகுந்தது. உலகமே சாட்டிலைட் டிவியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது டாடாவும் அதில் இணைந்து கொண்டு டாடா ஸ்கை என்கிற நிறுவனத்தை தொடங்கியது. அது இப்போது டாடா ப்ளே என்றழைக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் இந்திய மக்களின் கார் என்கிற பெயரோடு டாடா நானோ அறிமுகப்படுத்தியது மேற்கு வங்கத்தில் நிறுவப்பட்ட டாடா நானோ, பல்வேறு அரசியல் பிரச்சனை காரணமாக, இந்தியாவின் ஒரு மூலையில் இருக்கும் மேற்கு வங்கத்தில் இருந்து, மற்றொரு மூலையில் இருக்கும் குஜராத் மாநிலத்துக்கு ஒட்டுமொத்த ஆலையையும் இடமாற்றம் செய்தது. டாடா குழுமத்தின் திறத்தை பறைசாற்றியது இந்நிகழ்வு.

ஒருகட்டத்தில் டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 60 சதவீதம் டெர்ன்ஓவர், வெளிநாடுகளில் இருந்து வந்தது என்றால் ரத்தன் டாடா டாடா குழுமத்தை எந்த அளவுக்கு விரிவுபடுத்தி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதுபோக ஒரு இந்திய நிறுவனத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட காரான இண்டிகா, டிசிஎஸ் நிறுவனத்தின் 'ஏகா' சூப்பர் கம்ப்யூட்டர், டேட்டா ஆப் புரோசெசிங் நிறுவனமாக இருந்த டிசிஎஸ் ஒரு மென்பொருள் ஜாம்பவானாக பரிணமித்து இன்று உலகின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக ஜொலிப்பது போன்றவைகளை ரத்தன் டாடாவின் சாதனைகளில் ஒன்றாக பட்டியலிடலாம்.

டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
வெவ்வேறு சேனல்களில் நாயகனாக களமிறங்கும் இளம் நடிகர் ! - பிரைம் டைம் ஸ்லாட் அப்டேட்

Noel Tata

Noel Tata

Twitter

டாடா குழுமத் தலைவரை தேர்வு செய்ய ரத்தன் டாடா 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்

இதை எல்லாம் சாதித்த ரத்தன் டாடா, சக்கர நாற்காலியில் தல்லாடிக் கொண்டே அலுவலகத்துக்கு வர விரும்பவில்லை. ருசி மோடி, தர்பாரி சேத், அஜித் கேர்கர் போன்ற மிகப்பெரிய டாடா தலைவர்கள் வெளியேற காரணமாக இருந்த டாடா குழுமத்தின் ஓய்வு பெறும் வயது விதியின்படி ரத்தன் டாடாவும் குழும தலைவர் பதவியிலிருந்து வெளியேற தயாரானார்.

தனக்கு அடுத்து டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கும் நபரை, தன் 73ஆவது வயதிலேயே தேடத் தொடங்கினார்.

அடுத்த டாடா குழுமத் தலைவரை தேர்வு செய்ய ரத்தன் டாடா 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா ஒட்டுமொத்த குழுமத்தின் அடுத்த தலைவராக வரலாம் என வதந்தி பரவியது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தையும் டாடா குழுமத்தின் டிரென்ட் நிறுவனத்தையும், ஸ்டார் பஜார் நிறுவனத்தையும் வெற்றிகரமாக வழிநடத்தியவர் என்பதால் கேமராக்கள் அவர் பக்கம் திரும்பின.

நோயல் டாடாவுக்கு ஒட்டுமொத்த டாடா குழுமத்தையும் நிர்வகிக்கும் அளவுக்கு போதிய அனுபவம் இல்லை என வெளிப்படையாக கூறி, விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Cyrus Mistry

Cyrus Mistry

Facebook

சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்

மேலும் டாடா குழுமத்தின் அடுத்த தலைவராக வர இருப்பவர் நல்ல தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு குடும்பத்தை வழி நடத்தக்கூடிய அளவுக்கு இளைஞராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் ரத்தன் டாடா.

கடைசியில் ஐந்து பேர் கொண்ட கமிட்டியில் இருந்த சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல் என்கிற நிறுவனத்தை கைப்பற்றியது, அதுதான் இப்போது டாடா ஸ்டீல் யூரோ என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் போதும், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன திட்டத்தின் போதும் ரத்தன் டாடாவுக்கு வலதுகரமாக இருந்து செயல்பட்டவர் சைரஸ் மிஸ்திரிதான்.

அவர் டாடா குழுமத்தின் பல முக்கிய முடிவுகளில் பணியாற்றியது மற்றும் அவருடைய அமைதியான குணாதிசயம் அவருக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்தது. ரத்தன் டாடா ஓய்வுக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு, 43 வயதான சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றுக் கொண்ட பின் ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட ஆர் கே கிருஷ்ணகுமார், ஜேஜே இராணி, கிஷோர் செளகர், இஷாத் ஹுசேன், ரவிகாந்த், கோபாலகிருஷ்ணன், டி சி எஸ் ராமதுரை, டாட்டா ஸ்டீல் முத்துராமன், தாஜ் ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்த ரேமண்ட் என பலரும் வயது காரணமாகவோ மற்ற பல காரணங்களாலோ வெளியேறினர்.

தான் நினைத்தபடி உயர்பதவிகளில் ஆட்களை அமரவைக்க, அது சைரஸ் மிஸ்திரிக்கு சாதகமாகவே அமைந்தது. சைரஸ் மிஸ்ட்ரி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் எல்லாவற்றையும் எண்களாக பார்க்க தொடங்கினார். டாடா குழுமத்தில் நஷ்டமீட்டும் வியாபாரங்களைக் கண்டுபிடித்து, மூட உத்தரவிடத் தொடங்கினார்.

உதாரணமாக இங்கிலாந்தில் இருந்த ஸ்டீல் வியாபாரத்தை விற்க தீர்மானித்தார். பெபெர்முடாஸ் நாட்டைச் சேர்ந்த ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்கிற 22 நாடுகளில் 45 ஹோட்டல்களைக் கொண்ட நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

அதேபோல டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் யூரியாவை இறக்குமதி செய்துகொண்டிருந்த பிரிவையும் மூடினார்.

வெல்ஸ்பன் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி வியாபாரத்தை வாங்கி, டாடா பவர் நிறுவனத்தோடு இணைத்தார்.

Natarajan Chandrasekaran

Natarajan Chandrasekaran

Twitter

ரத்தன் டாடா இடைக்கால தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்

2014 - 15 சைரஸ் மிஸ்திரி காலத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (விஸ்தாரா) மற்றும் ஏர் ஏசியா இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. விஸ்தாராவில், அதே ஆண்டில் சுமார் பத்து லட்சம் வாடிக்கையாளர்கள் பறந்து டாடாவின் சேவைக்கு சான்றளித்தனர்.

2016 அக்டோபர் 24ஆம் தேதி ஹார்வர்ட் வணிகப் பள்ளியின் தலைவர் நிதின் ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் தலைவர் நிதின் நோரியா மற்றும் ரத்தன் டாடா இருவரும் சைரஸ் மிஸ்திரியைச் சந்தித்தனர்.

டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து சைரஸ் விலக வேண்டுமென குழு விரும்புவதாகக் கூறினார் நிதின்.

அதனைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் இயக்குனர் குழு, பல்வேறு காரணங்களை முன்னிட்டு சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியிலிரந்து நீக்குவதாகக் கூறி தீர்மானத்தை நிறைவேற்றினர்.

கடந்த பதினைந்து தசாப்த கால வரலாற்றில் டாடா குழுமத்தின் தலைவர் இயக்குனர் குழுவால் வெளியேற்றப்படுவது அதுவே முதல் முறை.

சைரஸ் மிஸ்திரி இயக்குநர் குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார். நுஸ்லி வாடியாவின் ஆதரவும் சைரஸுக்கு முழுமையாக இருந்தது. இதே நுஸ்லி வாடியவைத் தான் தனக்குப் பிறகு டாடா குழுமத்தின் வாரிசாக்க ஜஹாங்கீர் டாடா முயற்சித்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

சைரஸ் மிஸ்திரியை இயக்குனர் குழு வெளியேற்றியது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க 2016ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் காலகட்டத்தில் அப்போது இந்திய பிரதமராக இருந்த நரேந்திர மோடியை சந்தித்து பேசினார் ரத்தன் டாடா.

அந்த அளவுக்கு டாடா குழும தலைவர் பிரச்சனை இந்திய அரசியலின் உயர் பதவி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போதுவரை சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தில் இருந்து தன்னை நீக்கியது தொடர்பாக உச்சநீதிமன்றம் டாடாக்களுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு சமர்பித்துள்ளார். அவ்வழக்கு வரும் மார்ச் 9ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

ரத்தன் டாடா இடைக்கால தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

அடுத்து டாடா குழுமத்தின் தலைவர் யார் என பத்திரிகைகளும் டாடா குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

கடைசியில் டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. சந்திரசேகரன் பதவி ஏற்றுக் கொண்டபோது டாடா குழுமத்தில் கவனிக்கப்பட வேண்டிய பல பிரச்சனைகளும், பல விமர்சனங்கள் இருந்தன.

அதில் தலையாய பிரச்சனை டொகொமோ நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பணம். சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவர் ஆன பின் முதல் வேலையாக 1.18 பில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்து சர்வதேச அளவில் டாடாக்களின் பெயரைக் காப்பாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் டாட்டா குழுமத்தின் ஸ்டீல் வியாபாரம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. உலக அளவில் இரும்பு வியாபாரத்தில் நிலை மேம்பட்டது மற்றும் டாடா ஸ்டீல் ஜெர்மனியைச் சேர்ந்த தைசன்குருப் குழுவுடன் ஒரு இணை ஒப்பந்தம் செய்து கொண்டது போன்ற சில நடவடிக்கைகளால் இரும்பு வியாபாரம் நிலை பெறத் தொடங்கியது.

இந்தியாவில் பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை சுமார் 35,000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது, ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமம் வாங்கியது, டாடா எஸ் ஐ ஏ இனிய ரிலையன்ஸ், ஏர் ஏஷியா இந்தியா, ஏர் இந்தியா என தற்போது டாடா குழுமம் ஒட்டுமொத்த இந்திய விமான சந்தையில் சுமார் 25 சதவீதத்தை தன் கையில் வைத்திருப்பது, டாடா சூப்பர் ஆப் என ஒரு இ - காமர்ஸ் தளம் மூலம் எல்லாவற்றையும் இணையத்தின் மூலம் விற்க வழி வகுத்தது என, டாடா குழுமத்தை தொலைநோக்குப் பார்வையோடு வழிநடத்தியது, பிக்பாஸ்கட் நிறுவனத்தைக் கைப்பற்றியது என சந்திரசேகரனின் பல நடவடிக்கைகள் ரத்தன் டாடா உட்பட பலராலும் பாராட்டப்பட்டது.

அதற்கு சான்றாக சந்திரசேகரன் நடராஜனுக்கு மீண்டும் அடுத்த 5 ஆண்டுகள் டாடா குழுமத்தின் தலைவராக இருக்க டாடா சன்ஸ் இயக்குனர் குழு அனுமதியளித்துள்ளது.

முந்தைய பகுதியைப் படிக்க

டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : தமிழ்நாட்டுக்கு தொப்புள் கொடி உறவாக இருந்த டைட்டன் | பகுதி 29

TATA குழுமம் வரலாறு : தொலைத் தொடர்பு துறையில் தோல்வியடைந்த டாடா | பகுதி 28
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : கோலியின் முன்னேற்றத்திற்கு காரணமான டாடா | பகுதி 27
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ரத்தன் டாடா | பகுதி 26
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : துரோகிகளை வீழ்த்திய ரத்தன் டாடா | பகுதி 25
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : கோஹினூர் வைரம் என்று பாராட்டிய முரசொலி மாறன் | பகுதி 24
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : உலகத்தை திரும்பி பார்க்க வைத்த டாடாவின் 'கார்' கனவு | பகுதி 23
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : அனைவராலும் வெறுக்கப்பட்ட ரத்தன் டாடா | பகுதி 22
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : மோடியை வீழ்த்த துடித்த ரத்தன் டாடா பரபரப்பு அத்தியாயம் | பகுதி 21
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : ரதன் டாடாவுக்கு அனுபவம் தேவை என்று கருதிய ஜே ஆர் டி |பகுதி 20
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : டாடாவை வம்பிற்கு இழுத்த மொரார்ஜி தேசாய் அரசு| பகுதி 19
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : ஆசியாவின் காபி சாம்ராஜ்யத்தை கட்டி ஆளும் டாடா | பகுதி 18
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : இந்திரா காந்தியை வீழ்த்த துடித்த ஜே ஆர் டி| பகுதி 17
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : லோகோமோட்டிவ் நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய டாடா| பகுதி 16
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : ஏர் இந்தியா போனால் என்ன, ரசாயன துறையில் இறங்கிய டாடா - பகுதி 15
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : அரசு vs டாடா - ஏர் இந்தியா யாருக்கு சொந்தம் ? பழைய பஞ்சாயத்து - 14
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : "நான் முதலில் டாடா என நிரூபிக்க வேண்டும்" - ஜே ஆர் டி | பகுதி 12
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா டூ டாபர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே செயல்பட்டு வரும் 11 நிறுவனங்கள்
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : மனைவியின் நகையை விற்று இரும்பு ஆலையை நடத்திய டாடா | பகுதி 10
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : யுனிலிவர் நிறுவனம் டாடா குழுமத்தைக் கண்டு அஞ்சியது ஏன் ? |பகுதி 9
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிய டாடா | பகுதி 8
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : டாடா சந்தித்த அவமானங்கள் | பகுதி 7
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
TATA குழுமம் வரலாறு : இந்தியாவை எஃகு கோட்டையாக மாற்ற போராடிய இரும்பு மனிதன் |பகுதி 6
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
TATA குழுமம் வரலாறு : அறிவியல் நிறுவனம் தொடங்க போராடிய ஜாம்செட்ஜி டாடா | பகுதி 5
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : தாஜ் ஹோட்டலை கட்டியது இதனால் தானா ? |விறுவிறுப்பான கதை | 4
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் வரலாறு : ஒரு குடும்பம் ஒரு நாட்டை கட்டமைத்தது எப்படி? - விறுவிறுப்பான கதை | 3
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் : இப்படியும் ஒரு முதலாளி - ஆச்சர்ய வரலாறு | பகுதி 2
டாடா குழுமம் வரலாறு : எதிர்காலத்தை தீர்மானித்த அந்த 5 பேர் - விறுவிறுப்பான கதை | பகுதி 30
டாடா குழுமம் : போரினால் லாபம் அடைந்த Tata நிறுவனம் | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com