காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27

ஈர்ப்பு முக்கியம். காரணம், மனிதர்களுக்குக் காம இச்சையை அதிகரிக்க முதலில் கவர்ச்சிதான் தேவைப்படுகிறது. இந்தக் கவர்ச்சி இரண்டு விதமான காரணங்களால் வரும்.
Attraction
AttractionCanva

தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டால் குடும்ப உறவுகளில் பாதிச் சிக்கல்கள் மறைந்துவிடும். அதைக் காமச்சூத்திரம் அழகாகச் சொல்லித்தருகிறது.

தாம்பத்திய உறவில் ஈர்ப்பு மிகவும் முக்கியம். வெளிப்படையாகப் பலர் இதை மறுத்தாலும், உண்மையான விஷயம் ‘ஈர்ப்பு’... இந்த ஈர்ப்பு இல்லாமல் காதல் கொள்ள முடியாது. கலவியில் ஈடுபடவும் ஈர்ப்பு முக்கியம். ஈர்ப்பு இல்லாத கலவி, இன்பம் அளிக்காது… நீண்ட காலம் நீடிக்காது. உடல் ரீதியான பிடித்தத்தைப் பெரிதாக எவரும் கண்டுகொள்வதில்லை. இதை அலட்சியப்படுத்தும் நபர்கள் பின்னாட்களில் வேறொரு உறவுமுறையைத் தேடிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட் நிபுணர்கள்.

பொருளாதாரம், குடும்பம், பணம், நிறம், ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்கின்றனர். ஆனால், உண்மையில் இருவருக்குமான ஈர்ப்பு உள்ளதா என்பதைக் கேட்கவோ உணரவோ செய்வதில்லை. ஈர்ப்பு முக்கியம். காரணம், மனிதர்களுக்குக் காம இச்சையை அதிகரிக்க முதலில் கவர்ச்சிதான் தேவைப்படுகிறது. இந்தக் கவர்ச்சி இரண்டு விதமான காரணங்களால் வரும்.

ஒன்று, உடலைச் சுத்தமாகப் பராமரித்துக் கொள்வதால்… சிகரெட், மது, புகையிலை தொடர்பானவை பயன்படுத்தாமல் இருப்பது. இது மாதிரியான பழக்கங்களால் வாய், சுவாசம் இரண்டிலுமே துர்நாற்றம் வீசும். புகையிலை தொடர்பானவை சுவாசத்தில் நிக்கோட்டின் கலந்திருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நிக்கோட்டின் துர்நாற்றத்துடனே அவர்களின் சுவாசம் இருக்கும்.

இந்தப் பழக்கத்தில் இருப்போருக்கு அவர்கள் உடலிலிருந்து வருவதால் அவர்களுக்குத் தெரியாது.. உணருவது கிடையாது. ஆனால், அடுத்தவருக்கு இந்தத் துர்நாற்றத்தை உணர முடியும். கலவியில் ஈடுபடுவது கொடுமையாக இருக்கும். அதுபோல வியர்வை துர்நாற்றமும்… வியர்வை துர்நாற்றமாவது, வயிறு அசுத்தமின்மையால் வருகிறது… செரிமானம், மலச்சிக்கல், வாயு தொந்தரவுகள் இருக்கக்கூடும். எனவே சிகரெட், மது, புகையிலை, வியர்வை துர்நாற்றம் ஆகியவை இல்லாத உடல் பராமரிப்பு… சுத்தமாக இருப்பது, ஈர்ப்புக்கான முதல் காரணம்.

இரண்டாவது காரணம், எப்போதும் புத்துணர்வோடு இருப்பது… அலங்கார பொருட்களைப் பயன்படுத்தி உடலை அழகாகப் பராமரித்து, கவனித்துக் கொள்வதால்… புத்துணர்வு எப்படி வரும் என்றால், அவை உடல் மற்றும் மனம் தொடர்பானது. கவலை, ஸ்ட்ரெஸ், பயம் போன்ற நெகடிவிட்டி இல்லாதோருக்கு முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் முகம் புத்துணர்வாக இருக்கும்.

கணவன் மனைவி இருவருமே தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். இங்கு அலங்காரப் பொருட்கள் எனச் சொல்வது தங்கம், வைரம் அல்ல… காஸ்மெடிக்ஸூம் அல்ல… இயற்கையான பொருட்களில்கூட உடலைப் பராமரித்துக்கொள்ள முடியும். தன்னை அழுகுப்படுத்திக்கொள்ள வேண்டும்.. அவ்வளவுதான். அதற்கான விலை உயர்ந்த பொருட்கள்தான் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. இதை நிறையப் பேர் புரிந்துகொள்வதில்லை.

Attraction
உடலுறவு : ‘ஃபிங்கரிங்’ செய்வது என்றால் என்ன? | Nalam 360

பெண் பார்க்கும் படலத்தில், பார்க்க வரும் ஆணும், பார்க்கப்படும் பெண் என அனைவரும் தங்களைக் கவனத்துடன் அலங்கரித்துக் கொள்கிறார்கள். திருமணத்தின் போது பல ஆயிரம் ஏன் சிலர் லட்சம் செலவு செய்துகூடத் தங்களை அழகுபடுத்திக்கொள்கிறார்கள். அதிகமான அலங்காரம் மாப்பிள்ளை பெண் இருவரையும் அழகாகக் காட்டுகிறது. எடுப்பான உடைகளில் சிறப்பாக இருப்பதுண்டு. திருமணம் முடிந்த அடுத்த வாரமே, வேஷம் கலைந்துவிடும். பனியன், ஷாட்ஸூடன் ஆண்கள்… நைட் டிரஸ்ஸூடன் பெண்கள்… கழுவாத முகம், வியர்வை துர்நாற்றம், தீய பழங்களால் உடலில் வரும் துர்நாற்றம், கலைந்த தலை, எண்ணெய் வடிந்த முகம், சோர்வு, புதிய வீட்டில் போனதால் இடமாற்றத்தில் வரும் ஸ்ட்ரெஸ், புதிய பொறுப்புகளால் புதிய உறவுகளால் வருகின்ற ஸ்ட்ரெஸ் என எல்லாமே தலைகீழாக மாறிவிடும். மேலும், விருந்து சாப்பாடு நிறையச் சாப்பிட்டு உடல் எடையும் கூடியிருக்கும். இதனால் இருவர் மனதிலும் அடுத்தவர் பற்றிய ஏமாற்றம் குடியேறும். ஆனால், இதை வெளியில் சொல்லாமல் மனதுக்குள்ளே வைத்திருப்பார்கள். அவ்வளவுதான் உறவுச் சிக்கலும் தொடங்கிவிடும்.

Attraction
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

திருமண நாளில் இருப்பது போன்ற அதே ஈர்ப்புக் காலம் முழுக்க ஏற்படக் கவர்ச்சி தேவை. தினமும் குளிப்பது, புத்துணர்வுடன் இருப்பது, அலங்கரித்துக்கொள்வது, பராமரித்துக் கொள்வது ஆகியவை கணவன் மனைவி இருவரிடமும் இருந்தால் மனக்குறை எதுவும் இருக்காது. இதைப் பின்பற்றும் குடும்ப உறவுகளில் சண்டைகள் பெரிதளவில் இருக்காது.

அந்தக் காலத்தில் இதற்காக மூலிகைகளை, நறுமணப் பொருட்களைத் தேடி காடு, மலை சென்றனர். இக்காலத்தில் எல்லாம் கிடைப்பது சுலபம். அலங்கரித்து, பராமரித்துக் கொள்வது மட்டுமே சிறிய மெனக்கெடல் வேண்டும்.

மனம் சலனமற்று தெளிவாக இருந்தால் முகம் பொலிவாக இருக்கும். அளவான, சத்தான உணவு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எளிமையான உடற்பயிற்சிகள் போதும். இருவருமே செய்ய வேண்டும்.

அந்தக் காலத்தில் வசியப்படுத்த என்னென்னமோ செய்தார்கள். அதெல்லாம் இந்தக் காலத்துக்குத் தேவையுமில்லை, அவசியமும் இல்லை. தனது துணைக்கு மகிழ்ச்சி, நம்பிக்கை தரும் விதமாக நடந்து கொண்டாலே மன அமைதி கிடைக்கும். பிஸி என்பது வெறும் வார்த்தைதான். உண்மையில், Prioritiesதான் எல்லாமே… அதாவது எந்த விஷயத்துக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறோம் என்பதில் இருக்கிறது உறவுமுறைக்கான அஸ்திவாரம். பிஸி எனச் சாக்குப்போக்கு சொல்லாமல், தன் துணைக்கு முன்னுரிமை தருவது நல்லது.

Attraction
சுய இன்பம் : இணையத்தில் அதிகம் தேடப்படும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

எனக்கு என்ன பிடிக்கும், தனக்கு என்ன தேவை எனத் தன்னைப் பற்றியே பேசுகிறவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. தனது துணைக்கு என்ன பிடிக்கும், என்ன தேவை எனப் புரிந்துகொண்டு அவர்கள் மனம் அறிந்து பழகுகவர்களே உறவிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கிறார்கள். செக்ஸ் என்பது வெறும் இரு உடல்களின் தேவையோ உரசலோ இன்பமோ மட்டும் இல்லை.

செக்ஸ் என்பது இரண்டு மனங்களின் சங்கமம்! மனம் அறிந்து, மனதால் நெருங்கும் ரகசியம் புரிந்தால் போதும்.. இதைவிடச் சிறந்த வசீகரிக்கும் வித்தை உலகில் வேறு எதுவும் இல்லை.

  • தொடரும்

Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com