காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் - 29

தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் நான்கு வகை எனச் சொல்கிறார் புகழ்பெற்ற செக்ஸாலஜி நிபுணரான ஜான் மணி.
Attraction
AttractionCanva

ஆணுக்கு செக்ஸ் உணர்வைத் தூண்டும் வழிகள் பற்றிச் சென்ற பதிவில் பார்த்தோம். காமச்சூத்திரம் சொன்ன வழிகள் அவை. அறிவியல் மருத்துவ முறை செக்ஸ் உணர்வைத் தூண்ட என்ன மாதிரியான வழிகளை வைத்திருக்கிறார்கள்.

தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் நான்கு வகை எனச் சொல்கிறார் புகழ்பெற்ற செக்ஸாலஜி நிபுணரான ஜான் மணி. முதலாவது, ஆக்டிவேட்டர் (Activator) - செக்ஸ் உணர்வைத் தூண்டச் செய்பவை.

இரண்டாவதாக, ரெஜ்ஜூவனேட்டர் (Rejuvenator), உடலுக்குத் தெம்பை அளிப்பவை. மூன்றாவதாக, ஸஸ்டெனன்ட் (Sustenant), செக்ஸ் உறவை நீண்ட நேரம் நீடிக்கச் செய்பவை. நான்காவதாக, ஆம்பிளிஃபையர் (Amplifier) தாம்பத்திய சுகத்தை அதிகரிக்கச் செய்பவை.

இந்த நான்கு வகைப்படிப் பார்த்தால் அந்தக் காலத்தில் பயன்படுத்திய மூலிகைகளும், இந்தக் காலத்தில் பயன்படுத்தப்படும் லேகிய வகைகளும் ரெஜ்ஜூவனேட்டர் (Rejuvenator), வகையைச் சேர்ந்தது எனச் சொல்லலாம். மேலும், இந்த நவீன அறிவியல் காலத்தில், ஆக்டிவேட்டர் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதுதான் வயாக்ரா வகை! இவை திறமையான மருந்துகள் என நவீன அறிவியல் மருத்துவ முறைகள் சொல்கின்றன.

இதேபோல SSRI - Selective Serotonin Reuptake Inhibitors குரூப் மருந்துகள் பலவும், விந்து வெளியேறும் நிலையைத் தாமதப்படுத்துகிறது தாம்பத்திய உறவை நீடிக்க வல்லவை. இவற்றை மூன்றாவது வகையாகச் சொன்ன ‘ஸஸ்டெனன்ட்’ வகை மருந்துகள் எனச் சொல்லலாம்.

viagra
viagraCanva

மேற்சொன்ன எல்லாமே நல்ல பலன்களை அளிக்கக் கூடிய மருந்துகள் என்றாலும் கூடவே பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தானாகப் பயன்படுத்துவது ஆபத்தான முயற்சி.

Attraction
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

வயாக்ராவுக்கு நிறையப் பக்க விளைவுகள் வருகின்றன. தலைபாரம், தலைவலி, மயக்கம், வயிறு அப்செட், மங்கலான பார்வை, வெளிச்சம் பார்ப்பது முடியாமல் போதல், பச்சை, மஞ்சள் நிறம் தெரியாமல் போகுதல், குமட்டல், இதயப் பாதிப்பு ஆகியவை வரலாம். முக்கியமான விஷயம், சிலர் தங்களது இதய நோய்க்காக நைட்ரேட் மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். அவர்கள் வயாக்ராவை சாப்பிடவே கூடாது. அவசியம் தவிர்க்க வேண்டும். மீறிச் சாப்பிட்டால் ஆபத்து நேரலாம். ரத்த அழுத்தம் உடனடியாகக் குறைந்து, மரணம் ஏற்படலாம். இந்த மாதிரியான தவறான காம்பினேஷன் மருந்துகள் மிகவும் ஆபத்தானவை.

வயாக்ராவை போலவே SSRI மருந்துகளைச் சாப்பிட்டாலும் தலைச்சுற்றல் பிரச்சனை, சோர்வு, பதற்றம் ஆகிய பிரச்சனைகள் வருகின்றன. யாருக்கு என்ன மருந்து ஒத்துக்கொள்ளாது, யாருக்கு எந்த மாதிரியான மருந்துகள் பொருந்தும், பொருந்தாது என முடிவு செய்பவர்கள் மருத்துவர்கள் மட்டுமே.

காதல், காமம், கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்Pexels

விறைப்புத்தன்மைக்காக, விந்து விரைவில் வெளியேறும் பிரச்சனைக்கான மருந்துகளை உட்கொண்டாலும் பக்க விளைவுகள் வரத்தான் செய்கின்றன. உடல் வலி, தலை வலி, செரிமானக் கோளாறுகள், பார்வையில் பிரச்சனை, மூக்கில் நீர் வழிதல் இன்னும் சில… எனவே தகுதியான மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதே சிறந்த வழி.

Attraction
Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!


காமச்சூத்திரத்திலும் செக்ஸூக்காக மருந்து சாப்பிட ஆயுர்வேதம் தெரிந்த நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொள்ளச் சொல்லப்படுகிறது. இன்டர்நெட், யூ-டியூப், போலி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்ற மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.

மேலும், காமச்சூத்திரம் சொல்வது இதுதான்,

ஆரோக்கியமான உணவும் வாழ்வியலும் ஆரோக்கியத்தைத் தரும். நல்ல எண்ணங்கள், நற்செயல்கள் செய்கின்றவர்களுக்கு நல்ல மனம் இருக்கும். இந்த ஆரோக்கியமான உடலும் மனமும் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உறவு அமையும்.

காமசூத்திரம்

  • தொடரும்

Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணுக்கு பாலியல் உணர்வைத் தூண்டுவது எது ? - 28
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
Attraction
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com