காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவின் முழு இன்பம் கிடைக்க என்ன செய்யவேண்டும்? - 30

அதிக நேரம் உடலுறவில் ஈடுபடாத ஆண்கள் மீது பெண்களும் அதிகம் ஆர்வம் கொள்ள மாட்டார்கள். கணவனாக அமைந்தால் வெகு சீக்கிரமே ஆர்வம் நீங்கிவிடும். இந்த ஆர்வத்தை நிலைபெறச் செய்யச் சில வழிகளைச் சொல்கிறது காமச்சூத்திரம்.
Love
LoveCanva

தாம்பத்திய உறவு எதன் அடிப்படையில் வைத்துக் கொள்கிறோம்? ஒன்று, குழந்தைபேறுக்காக… இரண்டாவது, இன்பத்துக்காக, சுகத்துக்காக… குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கத் தெருவுக்குத் தெரு மருத்துவர்கள் இருக்கின்றனர். அதுபோல கருத்தரிப்பு மையங்களும் கூடிவிட்டன. ஆனால், தாம்பத்திய உறவில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க போதுமான அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

தாம்பத்திய உறவில் எது முக்கியமான தேவையாக இருக்கிறது? இன்பம், சுகம், சௌகரியம். பெண்களுக்கு, ஆண் நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், ஆண் வெகு சீக்கிரமே தளர்ந்துவிட நேரிடும். இந்த வகையை ‘மந்தவேகன்’ என ஏற்கெனவே காமச்சூத்திரம் வகைப்படுத்தியதைப் பார்த்து இருந்தோம். இந்த வகை சார்ந்த ஆண்களால் பெண்ணுக்கு இன்பம் அளிக்க முடியாது. இந்த வகை ஆண்களைப் பெண்களும் அதிகம் ஆர்வம் கொள்ள மாட்டார்கள். கணவனாக அமைந்தால் வெகு சீக்கிரமே ஆர்வம் நீங்கிவிடும். இந்த ஆர்வத்தை நிலைபெறச் செய்யச் சில வழிகளைச் சொல்கிறது காமச்சூத்திரம்.

நீண்ட நேரம் தாம்பத்திய உறவை மேற்கொண்டாலே ‘அஸ்தினி’ எனப்படும் பெண் யானை வகையைச் சேர்ந்த பெண்ணை உடலுறவில் திருப்தி ஏற்படுத்த முடியும். ஆனால், உடலுறவில் வெகு சீக்கிரமே தளர்ந்துவிடும் ‘மந்தவேகன்’ வகை ஆண்கள், பெண்களைத் திருப்திப்படுத்த முடியாது. எனவே, இந்த வகை ஆண்கள் தாம்பத்திய உறவில் நேரடியாக ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

Love
"என் பாலியல் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல" - நடிகை டாப்ஸி கூறியது ஏன்?

முதலில், தன் விரல்களால் பெண் உறுப்பைத் தூண்டிவிட்டு, பெண்ணுக்கு உணர்ச்சியைத் தூண்டிவிட வேண்டும். அந்தப் பெண் பரவசம் அடைந்து உச்சக்கட்டத்தைத் தொடப் போகிறாள் என்பதை உணர்ந்த பிறகே, நேரடியாகத் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும். இப்படிச் செய்தால், பெண்ணுக்கு முழு இன்பம் கிடைக்கும்.

உயிரணு விரைவிலே, வெகு சீக்கிரமே வெளியாகும் பிரச்சனை உள்ள ஆண்கள், வயதான ஆண்கள், ஏற்கெனவே தாம்பத்திய உறவில் ஈடுபட்டுச் சோர்ந்து இருக்கும் ஆண்கள் ஆகியோர் வாய்வழி உறவால் பெண்ணுக்குத் தாம்பத்திய இன்பம் தரலாம்.

sex
sexTwitter

அப்படி இல்லாவிட்டால் செயற்கை கருவிகள் அதாவது செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தலாம். அந்தக் காலத்திலே செயற்கை கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். பிளாஸ்டிக்கால் அல்ல… அபதிரவியம் எனப்படும் ஆணுறுப்பு போன்ற அந்தப் பொருட்களைத் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, யானைத் தந்தம், எருமைக் கொம்பு போன்றவற்றில் உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கிறார்கள். செக்ஸ் டாய்ஸ் எனும் செயற்கை கருவிகள் புதியவையும் அல்ல. ஆபத்தானவையும் அல்ல. அந்தக் காலத்தில் கிடைத்த பொருட்களை வைத்துச் செயற்கை கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.

Love
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

மெனோபாஸ் அறிகுறிகள் உள்ள பெண்கள், பெண் உறுப்பில் வலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள், இறுக்கமான பிரச்சனை உள்ளவர்கள், புற்றுநோயாளிகள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள், செக்ஸில் ஆர்வம் இல்லாதவர்கள், தன் துணையிடம் இருந்து முழு இன்பம் கிடைக்காமல் அவதிபடுவர்கள், துணை இல்லாதவர்கள், உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய விரும்புபவர்கள் என யார் வேண்டுமானாலும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தலாம். இது தவறான விஷயமோ கூச்சப்பட்டு வெட்கப்பட வேண்டிய விஷயமோ அல்ல.. எதுவும் புதியதும் அல்ல… அந்தக் காலத்திலிருந்தே செக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துவதால் நன்மைகளே பல கிடைக்கின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும்…

  • தொடரும்

Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் - 29
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணுக்கு பாலியல் உணர்வைத் தூண்டுவது எது ? - 28
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
Love
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com