காதல்,காமம்,கொஞ்சம் உளவியல் : குழந்தைப்பேறுக்கும் தாம்பத்திய இன்பத்துக்கும் தொடர்பு? - 31

ஒரு பெண்ணுக்கு தாம்பத்திய இன்பம் தருவதும், குழந்தைப்பேறைத் தருவதும் வெவ்வேறு விஷயங்கள் என்பதை இன்றைய மருத்துவ அறிவியல் தெளிவுபடுத்தி இருக்கிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பல பெண்கள் இதை நினைத்து குழம்பிபோயுள்ளனர்.
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல் Istock

செக்ஸ் வைத்துக்கொள்ள இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று குழந்தைப்பேறுகாக, அடுத்தது தாம்பத்திய இன்பத்துக்காக… ஒரு பெண்ணுக்கு தாம்பத்திய இன்பத்தை முழுமையாக அளிக்க முடியாத ஒரு ஆண்கூட ஒரு பெண்ணைத் தாய்மை அடைய செய்வது சாத்தியம்தான். தாம்பத்திய இன்பத்துக்கும் குழந்தைப்பேறுக்கும் தொடர்பு இல்லை. தாம்பத்திய இன்பம் கிடைக்காத பெண் குழந்தைப்பேறு அடைய முடியாது என்று சொல்வது தவறு.

திருமணம் செய்துகொள்வதன் முழுமையான நோக்கம், அடுத்தச் சந்ததியை உருவாக்குவதுதான் என்று நாட்டில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவேதான், திருமணமான அடுத்த 2-3 மாதங்களிலே ஏதாவது ‘குட் நியூஸ்’ இருக்கிறதா எனக் கேட்கின்றனர். ஒரு வருடம் ஆகி அந்தப் பெண் கருவுறவில்லை என்றால், உனக்கு ஏதோ பிரச்சனை, நீ ஃபர்டிலிட்டி கிளினிக்குக்குப் போ எனப் பரிந்துரைக்கின்றனர். எல்லாமே அவசரம்! முதலில் ஒரு வருடம் என்பது பெரிய காலமில்லை. அதற்குள் அந்தப் பெண்ணுக்குக் குழந்தையின்மை பிரச்சனை என்ற முத்திரையைக் குத்திவிடுகின்றனர்.

Pexels

திருமணமான 2-3 மாதங்களுக்குப் பிறகிருந்த ஒவ்வொரு சாதாரண விசாரனையும் குழந்தையைப் பற்றிக் கேட்கும் விசாரணையும் தம்பதியர் இருவர் இடையேயும் அதிக டென்ஷன், பயம், குழப்பம், மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமாக இருக்கும் மனதும் உடலும் பாதிக்கிறது. இல்லாத பிரச்சனை தன் உடலில் இருக்குமோ என இருவரும் குழம்பி போகின்றனர். இயற்கையாக முயற்சிக்கலாம் என்பதை விட்டுவிட்டுச் சமூகத்தில் தரும் பிரஷருக்காக நேரடியாகக் குழந்தையின்மை ஸ்பெஷலிஸ்டிடம் ஓடுகின்றனர்.

ஒரு பெண்ணுக்கு தாம்பத்திய இன்பம் தருவதும், குழந்தைப்பேறைத் தருவதும் வெவ்வேறு விஷயங்கள் என்பதை இன்றைய மருத்துவ அறிவியல் தெளிவுபடுத்தி இருக்கிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பல பெண்கள் இதை நினைத்து குழம்பிபோயுள்ளனர்.

ஒரு ஆணுக்கு தன் துணையைத் திருப்திப்படுத்த தெரிந்து இருக்கலாம். ஆனால், அவருக்குத் தனது உடலில் உள்ள உயிரணுக்களில் இருக்கும் பிரச்சனை காரணமாக, குழந்தையை உருவாக்குகின்ற தகுதியை இழந்து இருக்கலாம். இப்படியும் சில பாதிப்புகள் உள்ளன. அதேபோல ஒரு ஆணுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடவே முடியாத அளவுக்குப் பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அவனுக்கு உயிரணுக்கள் திடமாக இருந்து, உடனே குழந்தை பெற்றுக்கொள்கிற திறமை இருக்கும். இப்படியான பாதிப்புகள் இருக்கின்றன.

<div class="paragraphs"><p>காதல், காமம்</p></div>

காதல், காமம்

Pixabay

ஆண் போலவே பெண்ணுக்கு இப்படி இருக்கலாம். உறவில் ஈடுபாடு காட்டுகிற அளவுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால், வேறு சில பிரச்சனைகளால் கரு முட்டை உருவாகாமல் இருக்கும். இதுபோலக் கருத்தரிக்க முடியாதபடி வேறு பிரச்சனைகள் இருக்கலாம். இப்படிப் பெண்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன. மேலும், வேறு சில பெண்களுக்குக் குழந்தை பெற்றுக்கொள்கிற அளவுக்கு உடல் தகுதி இருக்கும். ஆனால், தாம்பத்திய உறவில் ஈடுபாடு காட்ட முடியாதபடி வேறு பிரச்சனைகள் இருந்து அவை உறவில் ஈடுபட முடியாமல் தடுக்கும்.

காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
சுய இன்பம் : இணையத்தில் அதிகம் தேடப்படும் கேள்விகளும் அதற்கான விடைகளும்

இந்த அறிவியல் உண்மைகளின் அடிப்படையில்தான் செக்ஸ் பிரச்சனைகளை நவீன மருத்துவ அறிவியல் தீர்த்து வைக்கிறது. பாலியல் பிரச்சனைகளைத் தீர்த்துக் வைக்கத் தனி மருத்துவப் பிரிவு உண்டு. அதற்குப் பிரத்யேக ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் உள்ளனர். குழந்தைப்பேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கத் தனி மருத்துவப் பிரிவு. அதற்குத் தகுதியான குழந்தையின்மைக்கான ஸ்பெஷலிஸ்ட் என உள்ளனர். இப்போது குழந்தை பிறக்க வேண்டும் என்றால், ஒரு ஆணும் பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை. உயிரணுவை தானம் செய்ய ஒரு ஆணும், கருமுட்டை தானம் செய்ய ஒரு பெண்ணும் இருந்தால் போதும். தாம்பத்திய உறவில் ஈடுபடகூட வேண்டாம். தன் வயிற்றில் தானம் செய்த கருமுட்டையோ உயிரணுவோ வைத்துக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது வாடகைத்தாய் மூலம்கூடக் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ நவீன வளர்ச்சி அதிவேகமாக வளர்ந்துவிட்டது. ஆனால்,...

காதல்
காதல்Canva

அதிகக் கூட்டம் சேருகின்ற இடங்களில், ‘50 வயதில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்…’ என சக்ஸஸ் செய்த மருத்துவமனை என்ற போர்ட்டுகள் மாட்டி விளம்பரப்படுத்தியிருப்பார்கள். இன்னும் சிலர் 4-5 லட்சம் ரூபாய்க்கான பாக்கேஜ் குழந்தையின்மை பிரச்சனை தீர என விளம்பரம் செய்வார்கள்… இன்னும் சிலர் இ.எம்.ஐ மூலம் பணம் செலுத்தி குழந்தையின்மை சிகிச்சை பெறலாம் என பிராண்டிங் செய்கிறார்கள். இன்னும் சிலர் டிவி, பத்திரிக்கை, செய்தித்தாள் எனப் புதுப்புது மார்க்கெட்டிங்கும் அதனுடன் பாங்க் லோன் வசதிகளும் கொடுக்கின்றனர்… எல்லோரும் சக்ஸஸ் ரேட் காட்டுவது, குழந்தை பிறந்துவிட்டது என்ற ரிசல்ட்டோடு முடித்து விடுகின்றனர். அந்தக் குழந்தை 3 வயதைக் கடந்ததா, 10 வயதில் ஆரோக்கியமாக இருக்கிறதா, 15 வயதில் எந்த நோய்களும் வராமல் இயல்பான ஆரோக்கியமான குழந்தையாக இருக்கிறதா, 25 வயதில் மற்றவர்கள் போன்ற ஆரோக்கியத்துடன் இயல்பானவராக இருக்கின்றனரா என்று யாரும் ஃபாலோ அப் விசாரனைகளோ அல்லது இதுக் குறித்து ரிசர்ச்களோ, கேஸ் ஸ்டடிகளோ இல்லை.

காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்?

இப்படிச் சில குழந்தையின்மை ஸ்பெஷலிஸ்டிடம் சிகிச்சை எடுத்து நவீன சிகிச்சைகள் மூலம் பிறந்த குழந்தைகள் சிலர் புற்றுநோய் வந்தும், இரட்டைக் குழந்தைகளாக பிறப்பதில் ஒரு குழந்தை இறப்பதும், வேறு சில காரணங்களாலும் குழந்தைகள் இறக்கின்றனர். சில குழந்தைகள் 11-15 வயதிலே சர்க்கரை நோய் டைப்1, டைப் 2 என வகைப்படுத்தப்படுகின்றனர். சில குழந்தைகள் எப்போதும் உடல்நலம் சரியில்லாதவர்களாக இருக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும் செயற்கை முறையில் இப்படிப் பல லட்சம் செலவழிக்கும் முன்னர், நன்கு விசாரித்துச் சிகிச்சை எடுப்பது சரியானதாக இருக்கும். முடிந்தவரை இயற்கையாகக் குழந்தைப்பெற முயற்சிப்பது முக்கியம். பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுளும் உடல்நலமும் மனநலமும் இருக்கவேண்டுமல்லவா…

- தொடரும்

காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவின் முழு இன்பம் கிடைக்க என்ன செய்யவேண்டும்? - 30
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய இன்பம் தரும் மருந்துகள் - 29
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணுக்கு பாலியல் உணர்வைத் தூண்டுவது எது ? - 28
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : தாம்பத்திய உறவில் தனது துணையை ஈர்ப்பது எப்படி? - 27
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : ஆணும் பெண்ணும் எதற்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள்? - 26
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : நீடித்த உடலுறவு, நீடிக்காத உடலுறவு எது? - 25
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் செய்த உடனே கலவி -காமசூத்திரம் சொல்வது என்ன? - 23
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: திருமணம் தாண்டிய உறவை தடுக்க காமசூத்திரம் சொல்லும் வழி - 22
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வலியில்லாத செக்ஸூக்கு என்ன வழி? - 21
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல்: உச்சக்கட்டம் அடையவில்லை - கண்டுபிடிப்பது எப்படி? - 20
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமம் போரடிக்காமல் இருக்க என்ன தேவை? - 19
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : அந்தக் காலத்திலும் செயற்கை கருவிகள் - பகுதி 18
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உணர்வுகளை தூண்டும் காம விளையாட்டுகள் - 17
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செக்ஸ் உறவுக்குத் தேவையான ஒரு பயிற்சி! - 16
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண்களுக்கு ஈடுபாடு எந்த ஆண்களின் மீது வரும்? | பகுதி 15
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம இச்சை பெருகுவதை எப்படிக் கண்டுபிடிப்பது ?- பகுதி 14
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : பெண் எப்போது கலவிக்கு தயாராகிறாள்| பகுதி - 13
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு எத்தனை வகை திருப்தி? - பகுதி 12
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : எது சிறந்த செக்ஸ்? - 10
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : யாருக்கு இன்பம் அதிகம் ? - 9
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : வசப்படுத்த முடியாத நேரம் - 8
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : செயற்கை இன்பமும் இயற்கை இன்பமும் 7
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : இன்பங்களில் பல வகை! - 6
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உறுப்பு அளவு, ஆழம் பற்றி நவீன அறிவியல் சொல்வது என்ன? - 5
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவு - சில வகைகள்! - இது ச்ச்சீசீ விஷயம் அல்ல| பகுதி 4
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : 4 நிலைகளைக் கடப்பதே ‘செக்ஸ்’ - பகுதி 3
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காமத்தில் நீங்க எந்த வகை? - பகுதி 2
காதல்,காமம்,கொஞ்சம் உளவியல்
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவும் மன உளைச்சலை தரலாம்! - 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com